மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பைக் மீது மோதிய கார் ரெயில்வே பாலத்தில் இருந்து கீழே விழுந்த விபத்தில் மூன்று பேர் பலி
- பதான்கோட்: பாகிஸ்தான் விசாரணைகுழு மீது தாக்க தீவிரவாதிகள் திட்டம் - கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவு
- வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம்
- திருப்பதி மலைப்பகுதியில் தீ விபத்துகளை தடுக்க 200 ஊழியர்கள்
- சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு
- கேரள சட்டசபை தேர்தல்: இடதுசாரி கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
- பதான்கோட் தாக்குதல் சம்பவம்: தேசிய புலனாய்வு அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விசாரணைக்குழு சந்திப்பு
- ஐதராபாத் பல்கலைக் கழக விவகாரத்தில் ஜனாதிபதியின் தலையீடு தேவை: உலக அளவில் 200 கல்வியாளர்கள் கோரிக்கை
- இந்தியாவின் தேசிய எமெர்ஜென்சி எண்ணாக 112 இருக்கும்: மத்திய அரசு முடிவு
- கலாபவன் மணி மரணம் குறித்து விரிவான விசாரணை தேவை: உள்துறை மந்திரிக்கு மனைவி கடிதம்
- கடன் பாக்கியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: விஜய் மல்லையாவுக்கு அருண் ஜெட்லி எச்சரிக்கை
- பிரதமர் மோடி இன்று பெல்ஜியம் பயணம்
- ஏமனில் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை: மத்திய அரசு
- ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக ஏப்ரல் 4-ல் பதவியேற்கிறார் மெகபூபா
- ஜாட் இட ஒதுக்கீடு மசோதா: அரியானா மந்திரி சபை ஒப்புதல்
- காவிரி நதி நீர் வழக்கு விசாரணை ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- பிரசல்ஸ் குண்டுவெடிப்பு: காணாமல் போன தமிழர் பலியானதாக அறிவிப்பு
- உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது அரசியலமைப்புக்கு விரோதமானது: நிதிஷ் குமார் சாடல்
- சாலை விபத்தில் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ
- எம்.எல்.ஏ.-எம்.எல்.சி.க்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்த தெலுங்கானா சட்டசபையில் மசோதா அறிமுகம்
| பைக் மீது மோதிய கார் ரெயில்வே பாலத்தில் இருந்து கீழே விழுந்த விபத்தில் மூன்று பேர் பலி Posted: 28 Mar 2016 11:15 PM PDT ஆந்திர தலைநகரம் ஐதராபாத்தில் இன்று காலை அல்வால் உழவர் சந்தை அருகேயுள்ள ரெயில்வே மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த கார் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள்மீது மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளையும் தள்ளிக்கொண்டு பாலத்தின் மேலிருந்து கீழே ரெயில் தண்டவாளத்தின்மீது அந்தகார் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் காரில் சென்ற இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் உள்பட மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
| பதான்கோட்: பாகிஸ்தான் விசாரணைகுழு மீது தாக்க தீவிரவாதிகள் திட்டம் - கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவு Posted: 28 Mar 2016 11:09 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை யொட்டி உள்ள பதான்கோட்டில் இந்திய விமானம் படை தளம் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் அங்கு தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் இந்திய ராணுவ வீரர்கள் 13 பேர் பலியாகினர். இது குறித்து நடந்த விசாரணையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தெரிய |
| வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம் Posted: 28 Mar 2016 10:42 PM PDT தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் செல்போன், இணையதளம், வாட்ஸ் அப், சாட்டிங், வீடியோ அழைப்பு போன்றவற்றால் ஒரு நொடியில் தொடர்பு கொண்டு பேசும் வசதி உள்ளது. |
| திருப்பதி மலைப்பகுதியில் தீ விபத்துகளை தடுக்க 200 ஊழியர்கள் Posted: 28 Mar 2016 09:38 PM PDT திருப்பதி மலையில் கோடை காலத்தில் தீ விபத்து ஏற்படாமல் கண்காணித்து தடுக்க 200 ஊழியர்களை வனத்துறை நியமித்துள்ளது. கோடை வெயில் தொடங்கிவிட்டதால் மலை பகுதிகளில் தீ விபத்துகள் அடிக்கடி நிகழும். இதனை தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். |
| Posted: 28 Mar 2016 08:02 PM PDT டெல்லியை சேர்ந்த மூத்த வக்கீல் பண்டிட் பரமானந்த் கட்டாரா என்பவர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படுவது முறையற்றது என்றும், அப்படி விசாரித்தாலும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். |
| கேரள சட்டசபை தேர்தல்: இடதுசாரி கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு Posted: 28 Mar 2016 07:29 PM PDT கேரள சட்டசபைக்கு மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி பிரதான கூட்டணியாக களமிறங்கி உள்ளது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. |
| பதான்கோட் தாக்குதல் சம்பவம்: தேசிய புலனாய்வு அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விசாரணைக்குழு சந்திப்பு Posted: 28 Mar 2016 07:01 PM PDT பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி 2-ந் தேதி புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினருடன் 3 நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், இந்திய வீரர்கள் 7 பேரும் வீரமரணம் அடைந்தனர். |
| ஐதராபாத் பல்கலைக் கழக விவகாரத்தில் ஜனாதிபதியின் தலையீடு தேவை: உலக அளவில் 200 கல்வியாளர்கள் கோரிக்கை Posted: 28 Mar 2016 06:27 PM PDT ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்கள் விவகாரத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள 200 கல்வியாளர்கள் கூறியுள்ளனர். ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ஏபிவிபி மாணவர்களை தாக்கியதாக கூறி ஆய்வாளர் ரோகித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் |
| இந்தியாவின் தேசிய எமெர்ஜென்சி எண்ணாக 112 இருக்கும்: மத்திய அரசு முடிவு Posted: 28 Mar 2016 06:07 PM PDT இந்தியாவை பொறுத்தவரை தேசிய அளவில் அவசரகால உதவிக்கு 112 என்ற ஒரே எண் தான் இனி இருக்கும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால |
| கலாபவன் மணி மரணம் குறித்து விரிவான விசாரணை தேவை: உள்துறை மந்திரிக்கு மனைவி கடிதம் Posted: 28 Mar 2016 06:04 PM PDT பிரபல தமிழ், மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது கலாபவன் மணியின் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். |
| Posted: 28 Mar 2016 05:17 PM PDT வங்கிகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரிடம் கடன் பாக்கியை பெற்றுத்தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. |
| பிரதமர் மோடி இன்று பெல்ஜியம் பயணம் Posted: 28 Mar 2016 04:47 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகள் பயணத்தை மேற்கொள்கிறார். முதலில் அவர் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சுக்கு இன்று இரவு புறப்படுகிறார். நாளை பிரசல்ஸ் நகரில், இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் மோடி கலந்து கொள்கிறார். |
| ஏமனில் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை: மத்திய அரசு Posted: 28 Mar 2016 03:36 PM PDT ஏமனில் கேரள பாதிரியார் டாம் உழுநலில் கடந்த 4-ம் தேதியன்று கடத்தப்பட்டார். இதனை மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்தது. கடத்தப்பட்ட பாதிரியார் டாம் ஏமனில் முதியோர் இல்லம் நடத்தி வந்தார். |
| ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக ஏப்ரல் 4-ல் பதவியேற்கிறார் மெகபூபா Posted: 28 Mar 2016 02:23 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல் பெண் முதலமைச்சராக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முக்தி ஏப்ரல் 4-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் மந்திரி முப்தி முகமது சயீத் |
| ஜாட் இட ஒதுக்கீடு மசோதா: அரியானா மந்திரி சபை ஒப்புதல் Posted: 28 Mar 2016 01:40 PM PDT அரியானா மாநிலத்தில் உள்ள ஜாட் இனத்தினர் தங்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் சேதம் அடைந்தன. |
| காவிரி நதி நீர் வழக்கு விசாரணை ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 28 Mar 2016 12:47 PM PDT சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்து விடவில்லை. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி காவிரி கண்காணிப்புக்குழு அமைத்து, கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை உறுதி |
| பிரசல்ஸ் குண்டுவெடிப்பு: காணாமல் போன தமிழர் பலியானதாக அறிவிப்பு Posted: 28 Mar 2016 09:40 AM PDT பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் கடந்த 22 ஆம் தேதி பயங்கர தாக்குதல் நடத்தினர். அதில், 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு பிறகு, பிரசல்சில் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த |
| உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது அரசியலமைப்புக்கு விரோதமானது: நிதிஷ் குமார் சாடல் Posted: 28 Mar 2016 09:15 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது அரசியலமைப்புக்கு எதிரானது என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சட்டசபை வளாகத்தில் அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது முற்றிலும் ஜனநாயகமற்ற மற்றும் அரசியலமைப்பிற்கு |
| சாலை விபத்தில் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ Posted: 28 Mar 2016 09:01 AM PDT பீகாரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் சங்கர் துபே சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் சோனிப்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கோவிந்த்சக் கிராமம் அருகே காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. விஜய் சங்கர் துபே நேற்று இரவு காரில் |
| எம்.எல்.ஏ.-எம்.எல்.சி.க்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்த தெலுங்கானா சட்டசபையில் மசோதா அறிமுகம் Posted: 28 Mar 2016 08:33 AM PDT தெலுங்கான சட்டசபையில், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் சம்பளத்தை இருமங்காக உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா இன்று அறிமுகம் செய்யப்பட்டது. முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவையின் அனைத்து உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் பென்சனை இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்த வகை செய்யும், சட்டத்திருத்த |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |