Tamil Star |
- லாகூர் தாக்குதலுக்கு கனேடியப் பிரதமர் கண்டனம்
- இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
- தொண்டை கரகரப்பு…தொடர் விக்கலா? இதோ மருத்துவம்
- ஸ்காபரோவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலம் மீட்பு
- மறைந்த முன்னால் நகரபிதா ரொஃபோர்ட்டிற்கு நகர மண்டபத்தில் இறுதி வணக்கம்
- பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது
| லாகூர் தாக்குதலுக்கு கனேடியப் பிரதமர் கண்டனம் Posted: 28 Mar 2016 07:42 PM PDT
இந்த செயல் மிகவும் வருந்தத் தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு தமது அனுதாபத்தையும் கனேடியப் பிரதமர் தமது டுவிட்டல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் நேற்று இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 29 சிறுவர்கள் உள்ளிட்ட 70 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் தாலிபான் அமைப்பிலிருந்து பிரிந்துச் சென்ற ஜமாத் உல் அஹ்ரர் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதுடன், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்களின்போது லாகூரின் கிறிஸ்தவ சிறுபான்மையினரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என கூறப்படுகிறது. The post லாகூர் தாக்குதலுக்கு கனேடியப் பிரதமர் கண்டனம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்! Posted: 28 Mar 2016 08:54 AM PDT
போதிய உழைப்பு இல்லாதது, மற்றும் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களும் இரவு தூக்கத்தை தொலைக்க ஒருவகை காரணம் ஆகும். சில வகை உணவுகளை நாம் தூங்க செல்வதற்கு முன் எடுத்துக்கொள்ளலாம். செர்ரி பழங்கள் நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் செர்ரிபழத்தில் உள்ளது. அதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழம் இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வாழைப்பழத்தில் உள்ளது. அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமினோ அமிலமும் உள்ளது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP ஒரு என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும். டோஸ்ட் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும். ஓட்ஸ் உணவு ஓட்ஸ் கஞ்சி ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படும்.
கதகதப்பான பால் வாழைப்பழத்தில் இருக்கும் எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமாக உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். The post இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொண்டை கரகரப்பு…தொடர் விக்கலா? இதோ மருத்துவம் Posted: 28 Mar 2016 08:43 AM PDT
1) தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 2) தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 3) வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். 4) உதட்டு வெடிப்பு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும். 5) அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். 6) குடல்புண் மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும். 7) வாயு தொல்லை வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 8) வயிற்று வலி வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். 9) மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். 10) தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும். The post தொண்டை கரகரப்பு…தொடர் விக்கலா? இதோ மருத்துவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்காபரோவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலம் மீட்பு Posted: 28 Mar 2016 08:19 AM PDT
பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே காவல்த்துறை அதிகாரிகளும், அவசர மருத்துவப் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு சென்றிருந்தனர் என்றும், அங்கு நபர் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டிருந்த நிலையில் சடலமாக காணப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 அளவில் குறித்த இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும், அவரின் இறப்பு இயற்கையானதாக தோன்றவில்லை எனவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு அருகே அமைந்துள்ள கனேடிய குருத்வரா குருஷேக் சபாவின் தலைவர் இது குறித்த தகவல் வழங்குகையில், தமது தொண்டூளியர் ஒருவர் குறித்த அந்த வளவினை துப்பரவு செய்த போதே குறித்த அந்த சடலத்தினை கண்டு தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதேவேளை குறித்த நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானதாக வகைப்படுத்தியுள்ள காவல்த்துறையினர், விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மரண விசாரணை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. The post ஸ்காபரோவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலம் மீட்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மறைந்த முன்னால் நகரபிதா ரொஃபோர்ட்டிற்கு நகர மண்டபத்தில் இறுதி வணக்கம் Posted: 28 Mar 2016 08:14 AM PDT
இன்று முற்பகல் பத்து மணியில் இருந்து மாலை ஆறு மணிவரையிலும் பொதுமக்கள் தமது இறுதி மரியாதையைச் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நாளை செவ்வாய்க்கிழமையும் காலை 7.30 முதல் இரவு ஒன்பது மணி வரையில் பொதுமக்கள் தமது பிரியாவிடையினை முன்னார் ரொரன்ரோ நகரபிதாவுக்கு செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. மறுநாள் புதன்கிழமை இறுதி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமை முற்பகல் 10.30ற்கு ரொப் ஃபோர்ட்டின் உடல் ரொரன்ரோ நகர மண்டபத்திலிருந்து சென் ஜேம்ஸ் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மத்தியம் 12 மணியளவில் அங்கு இறுதி வழிபாடுகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக புற்றுநோய்க்கு எதிரான போராடி வந்த ரொரன்ரோவின் முன்னாள் நகரபிதாவும், ரொரன்ரோ நகரசபை உறுப்பினருமான ரொப் ஃபோர்ட் கடந்த வாரம் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்தார். The post மறைந்த முன்னால் நகரபிதா ரொஃபோர்ட்டிற்கு நகர மண்டபத்தில் இறுதி வணக்கம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது Posted: 28 Mar 2016 08:09 AM PDT
எனினும் கைது செய்யப்பட்டுள்ள குறித்த அந்த நபர், கனடாவுக்குள் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்வதற்கான திட்டங்களை கைவசம் வைத்திருந்ததான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என கனேடிய மத்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள கெவின் ஒமார் மொஹமட் என்பவர் மீது, பயங்கரவாத அச்சுறுத்தல், பொதுமக்களுக்கம் அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான ஆயுத பயன்பாடு, சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் நடமாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் போது ஒன்ராறியோ காவல்த்துறையினரும், டூர்ஹாம் பிராந்திய காவல்த்துறையினரும் தமக்கு உறுதுணையாக செயற்பட்டதாகவும் கனேடிய மத்திய காவல்த்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை வெளிநாடுகளுக்கு சென்று பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் நாட்டுக்கு திரும்பி வருவோரால் எதிர்காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மத்திய காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். The post பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இரவு தூக்கத்தை தொலைத்துவிட்டு திண்டாடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.




உடலில் ஏற்படும் சிலவித உபாதைகளுக்கு பயனுள்ள 10 மருத்துவ குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்காபரோவின் வடகிழக்காக Passmore Avenue மற்றும் State Crown Boulevard பகுதியில் உள்ள தொழிற்பேட்டை ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த ஒருவரின் உடல் கம்பளித் துணியால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னால் ரொரப்ரோ நகரபிதா ரொ ஃபோர்ட்டின் உடல் பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக இன்றும் நாளையும் ரொரன்ரோ நகர மண்டபத்தில் கிடத்திவைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் 23 வயதான ரொரன்ரோ நபர் ஒருவரை மத்திய காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்த 'புரஜெக்ட் சுவாப்'(Project SWAP) என்ற தேசிய பாதுகாப்பு சிறப்பு விசாரணை நடவடிக்கையின் போது குறித்த அந்த நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.