மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கோவில் மண்டபத்தில் மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனம்
- ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க விரும்பவில்லை - விஜய்மல்லையா ஆவேசம்
- காஷ்மீரில் 2–வது நாளாக பெய்த மழையால் நிலச்சரிவு: 73 பேரை ராணுவம் மீட்டது
- படுக்கை விரிப்புகள் இனி ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பிறகும் துவைக்கப்படும்: ரெயில்வே நிர்வாகத்தின் புதிய திட்டம் தயார்
- ஆழ்துளை கிணற்றில் இருந்து 150 அடி உயரத்துக்கு பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்: கிராம மக்கள், அதிகாரிகள் வியப்பு
- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் மெலிண்டா கேட்ஸ் சந்திப்பு
- கரடி தாக்கி, வனத்துறை அதிகாரி உள்பட மூவர் பலி
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அல்–கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி முகாம்: டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்
- கேரள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டி: பிரசாரம் செய்ய மம்தாபானர்ஜி வருகை
- இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்கிறது: சர்வதேச நிதியம் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
- பிரமாண பத்திரத்தில் வேட்பாளர்கள் தவறான தகவல் தந்தால் 2 ஆண்டு சிறை: தேர்தல் கமிஷன் சிபாரிசு - மத்திய அரசு பரிசீலனை
- குஜராத்தில் கிணற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி
- சர்ச்சைக்குரிய உலக கலாச்சார விழா நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு
- டெல்லியில் முன்னாள் கவுன்சிலரின் 2 பாதுகாவலர்கள் சுட்டுக்கொலை
- உ.பி.,யில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க., முயற்சி: 6 மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டம்
- விஜய் மல்லையாவின் முன்னாள் நிதி அதிகாரியிடம் அமலாக்க துறையினர் 2-வது நாளாக விசாரணை
- ஆர்.எஸ்.எஸ்-ம் ஐ.எஸ்.ஐ.எஸ்-ம் ஒன்றுதான்: குலாம் நபி ஆசாத் கருத்துக்கு பா.ஜ.க., எதிர்ப்பு
- நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி முதல்முறையாக ஒரே மேடையில் பேச்சு
- சம்பள பாக்கியை பெற்றுக் கொடுங்கள்: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்
- சிறுவனை நிர்வாணமாக நிற்க வைத்து தண்டனை: மும்பையில் நடந்த கொடுமை
| கோவில் மண்டபத்தில் மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனம் Posted: 12 Mar 2016 11:02 PM PST ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னவத்தில் உள்ள சத்தியகிரி மலையில் சத்திய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருமணம் செய்து கொள்வது மிகவும் விசேஷம் ஆகும். திருமணமான புதுமண தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து சத்தியநாராயண பூஜை செய்வதை தெலுங்கு மக்கள் புனிதமாக கருதுகிறார்கள். |
| ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க விரும்பவில்லை - விஜய்மல்லையா ஆவேசம் Posted: 12 Mar 2016 10:57 PM PST பிரபல தொழில் அதிபர் விஜய்மல்லையா கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் மீது பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. |
| காஷ்மீரில் 2–வது நாளாக பெய்த மழையால் நிலச்சரிவு: 73 பேரை ராணுவம் மீட்டது Posted: 12 Mar 2016 10:57 PM PST காஷ்மீரில் 2–வது நாளாக பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 73 பேரை ராணுவம் மீட்டது. காஷ்மீரில் எல்லை மாவட்டமான குப்வாராவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பனி படர்ந்த சிகரங்களில் பனிப் பாறைகள் சரிந்து விழுந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. |
| Posted: 12 Mar 2016 10:18 PM PST ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளில் மட்டுமே பயணிகளுக்கு இலவசமாக படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு 2 படுக்கை விரிப்புகள், ஒரு தலையணைக்கு ரூ.140 செலுத்த வேண்டும். ஒரு போர்வைக்கு ரூ.110 செலுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்தையும் பெற ரூ.250 செலுத்த வேண்டும். இவற்றை பயணத்துக்கு பின்னர் அவர்களே வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம். |
| Posted: 12 Mar 2016 10:04 PM PST ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொடனவாடு என்ற கிராமத்தை சேர்ந்த கிரிரெட்டி என்பவர் தனக்கு சொந்தமான வயலில் ஆழ்துளை கிணறு தோண்டினார். 50 அடி ஆழம் தோண்டிய போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் மேலும் சில அடி தோண்ட முடிவு செய்தார். நேற்று மாலை 150 அடி ஆழத்துக்கு தோண்டியபோது தண்ணீர் பீறிட்டு கிளம்பியது. சிறிது நேரத்தில் கிணற்றில் இருந்து விண்ணை நோக்கி 150 அடி உயர |
| மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் மெலிண்டா கேட்ஸ் சந்திப்பு Posted: 12 Mar 2016 09:37 PM PST உலகின் பிரபல கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் மென்பொருள் உற்பத்தி நிறுவன உரிமையாளருமான பில் கேட்ஸின் மனைவியான மெலிண்டா கேட்ஸ், புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். |
| கரடி தாக்கி, வனத்துறை அதிகாரி உள்பட மூவர் பலி Posted: 12 Mar 2016 09:19 PM PST சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுன்ட் மாநிலத்தில் நேற்று பூப்பறிப்பதற்காக காட்டுக்குள் சென்ற இருவர் காணாமல் போனதாக வந்த தகவலையடுத்து, மாவட்ட வனத்துறை காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். |
| ஜார்க்கண்ட் மாநிலத்தில் அல்–கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி முகாம்: டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல் Posted: 12 Mar 2016 08:52 PM PST கடந்த ஜனவரி மாதம் டெல்லி போலீசார் அல்– கொய்தா தீவிரவாத இயக்கத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முகமது ஆசிப், ஜாபர்மசூத், முகமது அப்துல் ரஹ்மான், சையது இன்சார்ஷா அப்துல்ரமி ஆகிய 5 பேரை கைது செய்தனர். |
| கேரள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டி: பிரசாரம் செய்ய மம்தாபானர்ஜி வருகை Posted: 12 Mar 2016 08:22 PM PST கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு எதிர் கட்சியாக கம்யூனிஸ்டு கட்சி உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி கம்யூனிஸ்டு கட்சி தீவிர போராட்டமும் நடத்தி வருகிறது. கேரளாவில் எலியும், பூனையும்போல செயல்படும் காங்கிரஸ் – |
| இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்கிறது: சர்வதேச நிதியம் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு Posted: 12 Mar 2016 07:15 PM PST சர்வதேச நிதியமும், இந்திய அரசும் இணைந்து நடத்தும் 'முன்னேறும் ஆசியா' மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. சர்வதேச நிதியத்தின் மேலாண் இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே மற்றும் பல்வேறு நிதி ஆலோசகர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- |
| Posted: 12 Mar 2016 05:55 PM PST வேட்புமனுவுடன் தாக்கல் செய்கிற பிரமாண பத்திரத்தில் வேட்பாளர்கள் தவறான தகவல் தந்தால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தெரிவித்தார். |
| குஜராத்தில் கிணற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி Posted: 12 Mar 2016 04:33 PM PST குஜராத் மாநிலத்தில் கிணற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். |
| சர்ச்சைக்குரிய உலக கலாச்சார விழா நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு Posted: 12 Mar 2016 04:14 PM PST சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்குவதாக சர்ச்சையில் சிக்கிய உலக கலாச்சார திருவிழா நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய மந்திரிகள், பா.ஜ.க., ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் சிலர் கலந்து கொண்டனர். 3 நாள் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். |
| டெல்லியில் முன்னாள் கவுன்சிலரின் 2 பாதுகாவலர்கள் சுட்டுக்கொலை Posted: 12 Mar 2016 03:53 PM PST டெல்லி நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள நஜபராவை சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன் பெகல்வன். இவர் நேற்றுமுன்தினம் இரவு ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு சென்ற ஒரு கும்பல், கவுன்சிலரின் பாதுகாவலர்கள் 2 பேரிடம் தகராறு செய்தனர். |
| உ.பி.,யில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க., முயற்சி: 6 மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டம் Posted: 12 Mar 2016 02:59 PM PST தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெற உள்ளது. அதேப்போல், உத்திர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கின்றன. உத்திர பிரதேசத்தில் தற்போது |
| விஜய் மல்லையாவின் முன்னாள் நிதி அதிகாரியிடம் அமலாக்க துறையினர் 2-வது நாளாக விசாரணை Posted: 12 Mar 2016 01:21 PM PST தொழிலதிபர் விஜய் மல்லையாவின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியிடன் இரண்டாவது நாளாக அமலாத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா எம்.பி. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி |
| ஆர்.எஸ்.எஸ்-ம் ஐ.எஸ்.ஐ.எஸ்-ம் ஒன்றுதான்: குலாம் நபி ஆசாத் கருத்துக்கு பா.ஜ.க., எதிர்ப்பு Posted: 12 Mar 2016 01:05 PM PST காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை தலைவரான குலாம் நபி ஆசாத் ஆர்.எஸ்.எஸ்-ஐ கடுமையாக சாடினார். இது தொடர்பாக ஜாமியத் உலமா -இ- ஹிந்த் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சில் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டு பேசியதாவது:- |
| நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி முதல்முறையாக ஒரே மேடையில் பேச்சு Posted: 12 Mar 2016 11:40 AM PST பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கு பின்னர் பிரதமர் மோடி, நிதிஷ்குமாருடன் ஒரே மேடையில் தோன்றி பேசினார். பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி தோல்வி கண்ட பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று அங்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாட்னா விமான நிலையத்தில் தனி |
| சம்பள பாக்கியை பெற்றுக் கொடுங்கள்: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம் Posted: 12 Mar 2016 07:56 AM PST தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் நஷ்டத்தால் மூடபட்டுள்ள நிலையில் அந்நிறுவனத்தில் வேலைபார்த்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பல மாத சம்பளம் இன்னும் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது. பல்வேறு போராட்டங்களை நடத்திய போதும் அவர்களின் சம்பள பாக்கியை கொடுக்க விஜய் மல்லையா தீவிர முயற்சி எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில், பிரதமரி நரேந்திர மோடிக்கு கிங்பிஷர் முன்னாள் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். பிரதமர் உடனடியாக தலையிட்டு |
| சிறுவனை நிர்வாணமாக நிற்க வைத்து தண்டனை: மும்பையில் நடந்த கொடுமை Posted: 12 Mar 2016 07:23 AM PST மும்பையில் பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவர்களை வெளியில் நிர்வாணமாக நிற்க வைத்து தண்டனை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை புறநகர்ப் பகுதியான மலாட்டில் உள்ள ஒரு பயிற்சி மையத்திற்கு வெளியே ஒரு சிறுவன் நிர்வாணமாகவும், மற்றொரு சிறுவன் டிசர்ட் மட்டும் அணிந்தபடி அரை நிர்வாணமாகவும் நிறுத்தப்பட்டுள்ளனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |