Tamil Star |
- முறையற்று வாகனம் செலுத்திய நபர் கைது
- பிலிப்பீன்சில் கடத்தப்பட்ட கனேடியர்களின் மற்றுமொரு காணொளி வெளியீடு
- ஸ்காபரோ கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயம்
- இயற்கையின் வயாக்ரா “தர்பூசணி”யின் முத்தான நன்மைகள்!
| முறையற்று வாகனம் செலுத்திய நபர் கைது Posted: 12 Mar 2016 06:56 PM PST
இந்த விபத்து விமான நிலைய வீதிக்கு அருகில் நெடுஞ்சாலை 407 இன் கிழக்குத் தடத்தில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றினுள் வாகனம் விபத்துக்குள்ளனதாகவும் கூறப்பட்டுள்ளது. நால்வர் விபத்தில் காயமடைந்திருந்தனர் என்றும், எனினும் அவர்கள் யாருக்கும் உயிராபத்தான காயங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காயமடைந்த நால்வரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்த அனைவரும் சுமார் 20 வயதுகளை உடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post முறையற்று வாகனம் செலுத்திய நபர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிலிப்பீன்சில் கடத்தப்பட்ட கனேடியர்களின் மற்றுமொரு காணொளி வெளியீடு Posted: 12 Mar 2016 08:23 AM PST
கடத்தப்பட்ட இவர்கள் தொடர்பில் ஏற்கனவே இரண்டு காணொளிகளை அபு சயாப் என்ற தீவிரவதக் குழு வெளியிட்டுள் நிலையில், கடந்த வியாழக்கிழமை அவர்கள் காணப்படும் மூன்றாவது காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அபு சயாப் என்ற அந்த தீவிரவதக் குழு ஈராக் மற்றும் சிரியாவில் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் குழு என்பது குறிப்பிடத்தக்கது. காணொளிப் பதிவில் அந்த கனேடியர்கள் இருவரும் மிகவும் நலிவுற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு கனேடியர் உள்ளிட்ட நால்வர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிலிப்பீன்சின் தென் பிராந்தியத்தில் வைத்து கடத்தப்பட்டிருந்தனர். ரொபேர்ட் ஹால் மற்றும் ஜோன் றிஸ்டேல் எனப்படும் இரண்டு கனேடியர்களுடன் கடத்தப்பட்ட மற்றிருவர்களில் ஒருவர் நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றையவர் பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் ஒன்ராறியோ பழமைவதக் கட்சி நேற்றைய நாள் கேள்வி எழுப்பியுள்ளது. கடத்தப்பட்ட இந்த இரண்டு கனேடியர்க்ள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என பழமைவதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்ளின் கிளடு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த நாடாளுமன்றச் செயலாளர், அரசாங்கத்தின் மிக முக்கிய விடயங்களில் ஒன்றாக இந்த விவகாரம் கருதப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். எனினும் எவ்வாறான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற தகவலை கூற அவர் மறுத்துள்ளார். இதேவேளை குறித்த அந்த நால்வரையும் உயிருடன் விடுவிப்பதற்கு தீவிரவாதிகள் கப்பம் கோரியே குறித்த காணொயிகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் கப்பம் வழங்கும் நடவடிக்கையை பிலிப்பீனஸ் அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. The post பிலிப்பீன்சில் கடத்தப்பட்ட கனேடியர்களின் மற்றுமொரு காணொளி வெளியீடு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்காபரோ கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயம் Posted: 12 Mar 2016 08:17 AM PST
இதில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பத்து மணியளவில் Kingston வீதி மற்றும் Tollgate Mews பகுதியில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்த பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து தாம் அங்கு சென்றிருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கு ஆண் ஒருவர் மோசமான கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவரின் அடிவயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிராபத்தான நிலையிலேயே காணப்பட்டார் என கூறப்படுகிறது. The post ஸ்காபரோ கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இயற்கையின் வயாக்ரா “தர்பூசணி”யின் முத்தான நன்மைகள்! Posted: 12 Mar 2016 06:53 AM PST
தர்பூசணி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, வெயில் காலங்களில் உடலின் வெப்பநிலையையும், இரத்த அழுத்தத்தையும் சரிசெய்கிறது. ஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய பழங்களில் ஒன்றான தர்பூசணியில், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படுகிறது. 100 கிராம் தர்பூசணியில், 90% தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போஹைட்ரேட் 7% உள்ளது. இதில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால் கண் மற்றும் மூளை சம்பந்தமாக நோய்களை தடுக்கிறது. கட்டி, ஆஸ்துமா பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய், மற்றும் கீல்வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டான லைகோபைன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது, குறிப்பாக ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை தடுக்கிறது. இரும்புச் சத்து நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும், அதுமட்டுமின்றி இன்சுலினையும் அதிகரிக்கிறது, மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்கவல்லது. குறிப்பாக இதற்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தியை இருப்பதை அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ குழு கண்டுபிடித்துள்ளது. இதிலுள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதன் மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் * எடையை குறைக்க நினைப்பவர்கள் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிக்கலாம். * அதுமட்டுமின்றி கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது, இதயத்திற்கும் ஆரோக்கியமான ஒன்றாகும். * கோடையில் அதிகமான வியர்வை காரணமாக ஏற்படும் அரிப்பு உட்பட பல்வேறு தோல் சம்பந்தமான நோய்களும் வராமல் பாதுகாக்கிறது. * மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. The post இயற்கையின் வயாக்ரா "தர்பூசணி"யின் முத்தான நன்மைகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரட்டனில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றை அடுத்து, முறையற்று வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பீன்சில் வைத்து கடத்தப்பட்ட இரண்டு கனேடியர்கள் காணப்படும் மற்றுமொரு காணொளி ஒன்றை இஸ்லாமிய தீவிரவாத கும்பல் ஒன்று வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்காபரோவில் நேற்று இரவு வேளை கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெயில் காலம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது தர்பூசணி தான்.