மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அமராவதியில் ரூ.700 கோடியில் சட்டசபை, ஐகோர்ட்டு கட்டிடம்: ஜப்பான் கட்டிட வடிவமைப்பை அரசு ஏற்றது
- சட்டசபையில் சஸ்பெண்டு: நீதி கிடைக்கும் வரை போராடுவேன் - நடிகை ரோஜா பேட்டி
- ஐ.எஸ். தீவிரவாதிகளால் கோவாவுக்கு அதிக அச்சுறுத்தல்: உளவுத்துறை பகீர் தகவல்
- தெலுங்கானாவில் அனல் காற்றுக்கு 7 பேர் பலி
- பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதியுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
- ஊழல் தடுப்பு படை விவகாரம்: டெல்லி வரும்படி சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு
- டெல்லியில் பல் டாக்டர் அடித்துக் கொலை: ரோட்டில் சென்றவர் மீது கிரிக்கெட் பந்து பட்டதால் மோதல்
- பிரதமரின் வானொலி உரைக்கு தேர்தல் கமிஷன் அனுமதி
- 2030-க்குள் பெட்ரோல் வாகனங்களே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம்: மத்திய மந்திரி பியூஷ் கோயல்
- பாகிஸ்தானில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி கைது: உளவாளி இல்லை என இந்தியா மறுப்பு
- ஜம்மு காஷ்மீர் பி.டி.பி.-பா.ஜ.க. தலைவர்கள் கவர்னருடன் நாளை சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்கள்
- மகாராஷ்டிராவின் 70 சதவீத கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு - கடும் குடிநீர் தட்டுப்பாடு
- ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி உறுதி ஆனது: பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவராக நிர்மல் சிங் தேர்வு
- பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தான் விசாரணைக் குழுவினருக்கு இந்தியா விசா வழங்கியது
- சியாச்சினில் மீண்டும் பனிச்சரிவு: ராணுவ வீரர் மாயம்
- வாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து: 2 மாணவர்கள் கைதாகி விடுதலை
- காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ராணுவ வீரர் தற்கொலை
- விஜயவாடாவில் கன்னையா கூட்டத்துக்கு பா.ஜனதா அமைப்பு எதிர்ப்பு: மாணவர்களுடன் தொண்டர்கள் மோதல் – கைகலப்பு
- அசாம் சட்டசபை தேர்தல்: வங்காளதேச எல்லை முற்றிலும் மூடப்படும் - பா.ஜனதா வாக்குறுதி
- கேரளாவில் வெடிவிபத்தில் சிக்கி பெண் உள்பட ஆறுபேர் படுகாயம்
| அமராவதியில் ரூ.700 கோடியில் சட்டசபை, ஐகோர்ட்டு கட்டிடம்: ஜப்பான் கட்டிட வடிவமைப்பை அரசு ஏற்றது Posted: 25 Mar 2016 10:57 PM PDT ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதி குண்டூர் அருகே உருவாக்கப்பட உள்ளது. ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளின் தொழில் நுட்பத்துடன் புதிய நகரம் வடிவமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். |
| சட்டசபையில் சஸ்பெண்டு: நீதி கிடைக்கும் வரை போராடுவேன் - நடிகை ரோஜா பேட்டி Posted: 25 Mar 2016 10:29 PM PDT ஆந்திர சட்டசபையில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. நடிகை ரோஜா. ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் நடிகை ரோஜா தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. |
| ஐ.எஸ். தீவிரவாதிகளால் கோவாவுக்கு அதிக அச்சுறுத்தல்: உளவுத்துறை பகீர் தகவல் Posted: 25 Mar 2016 09:58 PM PDT உலகம் முழுவதும் ஈவு, இரக்கமின்றி நாச வேலைகளில் ஈடுபடும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவிலும் குண்டு வெடிப்புகளை நடத்த வேண்டும் என்று சதி திட்டம் தீட்டியுள்ளனர். இந்தியாவில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து நாசவேலைக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். |
| தெலுங்கானாவில் அனல் காற்றுக்கு 7 பேர் பலி Posted: 25 Mar 2016 09:51 PM PDT கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் உக்கிரம் அடையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாத தொடக்கத்திலேயே வெயில் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 9 நகரங்களில் வெயில் சராசரியாக 100 டிகிரியை |
| Posted: 25 Mar 2016 09:44 PM PDT மக்களிடம் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சுகாதார இயக்கத்தை தொடங்கினார். ஒவ்வொரு தெருவையும் சுத்தமாக வைத்து கொள்ள, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அவரே விளக்குமாறு பிடித்து தெரு கூட்டினார். ஆனால் அந்த சுகாதார இயக்கம் வெற்றி பெற வில்லை. |
| ஊழல் தடுப்பு படை விவகாரம்: டெல்லி வரும்படி சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு Posted: 25 Mar 2016 07:58 PM PDT ஊழல் தடுப்பு படை விவகாரம் தொடர்பாக டெல்லி வந்து விளக்கம் அளிக்கும்படி சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர் விரைவில் டெல்லி செல்ல உள்ளார். கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படையை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவு லோக் அயுக்தா அமைப்பை |
| டெல்லியில் பல் டாக்டர் அடித்துக் கொலை: ரோட்டில் சென்றவர் மீது கிரிக்கெட் பந்து பட்டதால் மோதல் Posted: 25 Mar 2016 06:01 PM PDT டெல்லி மேற்கு பகுதியில் உள்ள விகாஸ்புரியை சேர்ந்தவர் பங்கஜ் நரங் (வயது 40). பல் டாக்டரான இவர் கடந்த புதன்கிழமை இரவு, மகன் மற்றும் உறவினர்களுடன் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தார். |
| பிரதமரின் வானொலி உரைக்கு தேர்தல் கமிஷன் அனுமதி Posted: 25 Mar 2016 04:57 PM PDT பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கீ பாத்'(மனதில் இருந்து பேசுகிறேன்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு, மேற்குவங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகளின்படி மோடி |
| 2030-க்குள் பெட்ரோல் வாகனங்களே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம்: மத்திய மந்திரி பியூஷ் கோயல் Posted: 25 Mar 2016 11:03 AM PDT இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோல் வாகனங்களே இல்லாத நாடாக மாறும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்காக, எலக்ட்ரிக் கார்களை முன்பணம் இன்றி வழங்கும் திட்டம் ஒன்றையும் மத்திய அரசு உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார். |
| பாகிஸ்தானில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி கைது: உளவாளி இல்லை என இந்தியா மறுப்பு Posted: 25 Mar 2016 08:06 AM PDT பாகிஸ்தானில் பதட்டம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல் பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விசாரணைக்காக இஸ்லாமாபாத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்திய உளவுப்பிரிவுக்கு (ரா) அவர் வேலை பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்திய தூதர் கவுதம் |
| Posted: 25 Mar 2016 07:12 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் மந்திரி முப்தி முகமது சயீத் மரணமடைந்த பின்னர், அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி(பி.டி.பி.)-பா.ஜ.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் புதிய ஆட்சி அமைப்பதில் தேக்க நிலை நீடித்தது. இந்நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது |
| Posted: 25 Mar 2016 05:26 AM PDT மகாராஷ்டிராவின் 70 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மொத்தம் 40,559 கிராமங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக விதர்பா பகுதியில் மட்டும் 12 ஆயிரம் கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக |
| ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி உறுதி ஆனது: பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவராக நிர்மல் சிங் தேர்வு Posted: 25 Mar 2016 04:59 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் மந்திரி முப்தி முகமது சயீத் மரணமடைந்த பின்னர், அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி(பி.டி.பி.)-பா.ஜ.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் புதிய ஆட்சி அமைப்பதில் தேக்க நிலை நீடித்தது. |
| பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தான் விசாரணைக் குழுவினருக்கு இந்தியா விசா வழங்கியது Posted: 25 Mar 2016 04:40 AM PDT பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை முகாம் மீது கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 7 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். |
| சியாச்சினில் மீண்டும் பனிச்சரிவு: ராணுவ வீரர் மாயம் Posted: 25 Mar 2016 04:03 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் உள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் இன்று மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற ராணுவ ரோந்து பிரிவினரில் 2 வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். |
| வாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து: 2 மாணவர்கள் கைதாகி விடுதலை Posted: 25 Mar 2016 03:38 AM PDT வாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்த இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மங்களூர் அருகே உள்ள புத்தூர் நகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது வாட்ஸ்அப் குரூப்பில் 'பாகிஸ்தான் வாழ்க' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு அவரது வகுப்பைச் சேர்ந்த ஒருமாணவன் ஆட்சேபனை தெரிவித்தான். |
| காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ராணுவ வீரர் தற்கொலை Posted: 25 Mar 2016 02:48 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்பூரா மாவட்டத்தில் ராணுவ வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 13-வது சீக்கிய ரெஜிமன்ட்டை சேர்ந்த குல்தீப் சிங் என்ற அந்த வீரர் கன்ஸால்வான் கிராமத்தில் உள்ள ரெஜிமன்ட் தலைமையகத்தில் நேற்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே |
| Posted: 25 Mar 2016 02:15 AM PDT ஐதராபாத்தில் உள்ள சுந்தரய்யர் அறிவியல் அரங்கில் இடதுசாரிகள் ஏற்பாடு செய்து இருந்த 'ராஜாங்க பாதுகாப்பு கருத்தரங்கு'' நேற்று நடந்தது. இதில் டெல்லி ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் கன்னையாகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது வருகைக்கு பாரதீய ஜனதா கட்சியின் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது ஒருவர் கன்னையாகுமார் நோக்கி ஷுவை வீசினார். |
| அசாம் சட்டசபை தேர்தல்: வங்காளதேச எல்லை முற்றிலும் மூடப்படும் - பா.ஜனதா வாக்குறுதி Posted: 25 Mar 2016 02:10 AM PDT அசாம் மாநில சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. நாளையுடன் இருகட்ட தேர்தலுக்கும் வேட்பு மனு வாபஸ் முடிவடைகிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரசை |
| கேரளாவில் வெடிவிபத்தில் சிக்கி பெண் உள்பட ஆறுபேர் படுகாயம் Posted: 25 Mar 2016 02:09 AM PDT கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒருவீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 வயது சிறுமி உள்பட ஆறுபேர் படுகாயம் அடைந்தனர். இங்குள்ள பொடிகுன்ட் அருகே ராஜேந்திரா காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டை வாடகைக்கு எடுத்த அணு மாலிக் என்ற வடநாட்டவர், திருவிழா காலங்களில் வெடிக்கப்படும் வாணவகைகளை தயாரிப்பதற்காக அங்கு அனுமதியின்றி வெடிப் பொருட்களை சேமித்து வந்ததாக தெரிகிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |