Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பிரதமர் மோடியுடன் சவுதி அரேபியா வெளியுறவுத் துறை மந்திரி சந்திப்பு

Posted: 07 Mar 2016 11:37 PM PST

பிரதமர் நரேந்திர மோடியை சவுதி அரேபியா வெளியுறவுத் துறை மந்திரி அடெல் அல் ஜூப்பியர் இன்று சந்தித்துள்ளார். மார்ச் 30-ம் தேதி முதல் 3 நாடுகள் பயணமாக சவுதி அரேபியா, அமெரிக்கா, பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மார்ச் 30-ம் தேதி பெல்ஜியத்தில் நடக்கும் இந்திய-ஐரோப்பிய

மகளிர் தினவிழா கொண்டாட சந்திரபாபு நாயுடு தகுதியற்றவர்: நடிகை ரோஜா தாக்கு

Posted: 07 Mar 2016 11:34 PM PST

ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொள்கிறார். ஆனால் மகளிர் தினவிழா கொண்டாட சந்திரபாபு நாயுடுவுக்கு தகுதியில்லை என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. நடிகை

கெயில் எரிவாயு குழாய் வழக்கு: தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 07 Mar 2016 11:16 PM PST

கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து தமிழ்நாடு வழியாக பெங்களூருக்கு பூமிக்கு அடியில் எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு கொங்கு மண்டல மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பை சீராய்வு

மேற்குவங்காளத்தில் காங்கிரஸ்–இடது சாரி கட்சிகள் கூட்டணி: 116 வேட்பாளர்களை கம்யூ. வெளியிட்டது

Posted: 07 Mar 2016 11:08 PM PST

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அசாம் சட்டசபை தேர்தலில் ஐ.ஐ.டி. மாணவர்களை களமிறக்கும் ராகுல்காந்தி

Posted: 07 Mar 2016 11:06 PM PST

126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு ஏப்ரல் 4 மற்றும் 11–ந்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆளும் காங்கிரசை வீழ்த்த பா.ஜனதா மிகப்பெரிய கூட்டணி அமைத்துள்ளது. அசாம் கன பரிசத்துடன் (ஏ.ஜி.பி.) இணைந்து அந்த கட்சி தேர்தலை சந்திக்கிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் திட்டம் திரும்ப பெறப்பட்டது: அருண் ஜெட்லி அறிவிப்பு

Posted: 07 Mar 2016 11:06 PM PST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் முடிவை திரும்ப பெறப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பிஎப் தொகைக்கு வரி பிடித்தம் செய்வது பற்றி அறிவிக்கப்பட்டது. அதாவது, பணியில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்களது பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுத்தால்

மநுஸ்மிருதி நூலை எரிக்க ஜே.என்.யு முன்னாள் ஏபிவிபி உறுப்பினர்கள் முடிவு

Posted: 07 Mar 2016 10:54 PM PST

உலக மகளிர் தினத்தையொட்டி மநுஸ்மிருதி நூலை எரிக்க போவதாக ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர் பிரச்சனையின் போது ஏபிவிபி மாணவர் அமைப்பிலிருந்து விலகிய மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். ஜே.என்.யு சர்ச்சையின் போது ஏபிவிபி-யின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த 3 மாணவ உறுப்பினர்கள் அந்த அமைப்பில் பகிரங்கமாக

மகளிர் தினத்தையொட்டி விதவைகளுக்கு இலவச ஹெலிகாப்டர் சவாரி: மும்பை தொண்டு நிறுவனம் ஏற்பாடு

Posted: 07 Mar 2016 10:16 PM PST

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் தங்களது பிள்ளைகளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்து, டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் உயர்த்தி அழகுபார்த்த விதவைப் பெண்களின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் அவர்களை இலவசமாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று மும்பை நகரை சுற்றிப்பார்க்க இங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஏற்பாடு

ஜூன் 18-ம் தேதி முதல் போர் விமானங்களில் 3 பெண் பைலட்டுகள் இணைகிறார்கள்: அரூப் ராகா தகவல்

Posted: 07 Mar 2016 10:10 PM PST

இந்திய விமானப் படையில் போர் விமானங்களை இயக்குகின்ற பணிகளில் வருகின்ற ஜூன் 18-ம் தேதி முதல் 3 பெண் பைலட்டுகள் சேர உள்ளதாக, விமானப்படைத் தலைவர் அரூப் ராகா தெரிவித்துள்ளார். இவர்கள் முதலில் பயிற்சியாளர்களாக சேருகின்றனர். தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அரூப் ராகா இதனை கூறியுள்ளார்.

மகா சிவராத்திரி பூஜை: திருமலை சக்கர தீர்த்தத்தில் தங்க பல்லி - பக்தர்கள் பரவசம்

Posted: 07 Mar 2016 09:56 PM PST

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டபம் கூரையில் தங்க பல்லி பொருத்தப்பட்டு இருக்கும். இதனை தொட்டு தடவி வழிப்பட்டால் தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் நிஜத்தில் உயிருள்ள தங்க பல்லி திருமலையில் மட்டுமே உள்ளன. அரிய இனமான இந்த தங்க பல்லி சில ஆண்டுகளாக காணாமல் இருந்தது. இது அழிந்து விட்டதோ என்று கூட சிலர் நினைத்தனர்.

டெல்லி அருகே சிறுமி கற்பழிப்பு; வீடு தீ வைத்து எரிப்பு: வாலிபர் கைது

Posted: 07 Mar 2016 09:47 PM PST

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவை யொட்டியுள்ளது திக்ரி கிராமம். இங்கு வசிக்கும் 15 வயது சிறுமி மீது பக்கத்து வீட்டு வாலிபருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நட்பாக பழகி வந்தார்.

இந்தியாவை விட்டு விஜய் மல்லையா வெளியேற அனுமதிக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மனு

Posted: 07 Mar 2016 09:44 PM PST

விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 நிறுவனங்கள் 7 ஆயிரம் கோடி வரை கடன் அளித்திருந்தன. பஞ்சாப் நேஷனல், கனரா, பரோடா வங்கி ஆகியவையும் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் அளித்த பிற வங்கிகள். ஆனால் கிங் ஃபிஷர் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது.

உள்நாட்டு ஜி.பி.எஸ். திட்டத்துக்கு உதவும் செயற்கை கோள்: கவுண்ட்டவுன் தொடங்கியது

Posted: 07 Mar 2016 09:39 PM PST

உள்நாட்டு ஜி.பி.எஸ். முறைக்கு உதவும் ''ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்–1 எப்'' எனும் செயற்கை கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். 1425 கிலோ எடை உள்ள இந்த செயற்கை கோளில் ஜி.பி.எஸ். சிஸ்டத்துக்கான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி சர்ச்சை குறித்து இன்று மக்களவையில் விளக்கம் அளிக்கிறார் அருண் ஜெட்லி

Posted: 07 Mar 2016 09:13 PM PST

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் வாரத்தில் பல்வேறு பிரச்சனைகளால் பாராளுமன்ற அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. ரோகித் வெமுலா, ஜே.என்.யு போன்ற விவகாரங்கள் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

மத்திய பிரதேச அரசு திட்டம்: இளம் விதவைகளுக்கு தினம் ரூ.5 பென்சன்

Posted: 07 Mar 2016 08:47 PM PST

மத்திய பிரதேச அரசு சார்பில் அம்மாநிலத்தில் உள்ள 19 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்குப்பட்ட இளம் விதவைகளுக்கு தினம் ரூ.5 வீதம் மாதத்துக்கு ரூ.150 பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் இளம் விதவைகளுக்கு எந்த பயனும் அளிக்காது என்று பெண்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு 40 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு மாதம் ரூ.300 வீதம் பென்சன் வழங்கி

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று இரவு மூடப்படும்

Posted: 07 Mar 2016 07:38 PM PST

மகா சிவராத்திரி விழாவையொட்டி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நேற்று சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், திருப்பதியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோயிலில் சுமார்

1,450 குக்கிராமங்கள் வருவாய் கிராமங்களாக மாற்றப்படும்: மந்திரி பரமேஸ்வர் தகவல்

Posted: 07 Mar 2016 07:15 PM PST

துமகூருவில் நேற்று பஞ்சாரா பவன் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் போலீஸ் துறை மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு பேசியதாவது:- ஆப்கானிஸ்தான் நாட்

பெங்களூர் அல்சூர் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன: கழிவுநீர் கலப்பதே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Posted: 07 Mar 2016 07:15 PM PST

பெங்களூருவில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்று அல்சூர் ஏரி. பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் இந்த ஏரி சிறந்த சுற்றுலா தலமாகும். ஏரியில் படகு சவாரியும் நடைபெற்று வருவதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர்.

பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் பாலகிருஷ்ணா மீது போலீசில் புகார்

Posted: 07 Mar 2016 06:41 PM PST

பிரபல தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ.யுமான பாலகிருஷ்ணா ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர் ஆவார். ஐதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு பட பாடல் வெளியீட்டு விழாவில் பெண்களை பற்றி அவதூறாக

கன்னையா குமாருக்கு பா.ஜனதா இலவசமாக விளம்பரம் அளிக்கிறது: சிவசேனா கடும் தாக்கு

Posted: 07 Mar 2016 06:35 PM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமாருக்கு இலவசமாக விளம்பரம் அளிப்பதாக பா.ஜனதா மீது சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்தி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™