Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தசைகள் வலிக்கிறதா? தினமும் முட்டை குழம்பு சாப்பிடுங்கள்

Posted: 07 Mar 2016 05:17 PM PST

yr

yrவளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான விட்டமின்களும் முட்டையில் உண்டு.

மேலும், தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.

உடற்பயிற்சியில் நாட்டமுள்ள ஆண்கள், தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அவர்கள் தினமும் பல முட்டைகளைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது.

தசைகளின் வலிமைக்கு புரதம் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.

ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம்.fd

முட்டை குழம்பு

முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வதக்கவும்.

அடுத்து தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் வேக வைத்து முட்டையை போடவும்.yr

குழம்பு கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

முட்டையை அவித்து சாப்பிடுவது பிடிக்கவில்லையென்றால் இவ்வாறு குழம்பு செய்து அன்றாடம் சாப்பிடுங்கள்.

இதனால், உடலில் ஆங்காங்கே ஏற்படும் தசைகளின் வலிக்கு தீர்வு கிடைக்கும்.

The post தசைகள் வலிக்கிறதா? தினமும் முட்டை குழம்பு சாப்பிடுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

Posted: 07 Mar 2016 05:14 PM PST

j

jசுவையான குழம்பில் முக்கிய இடம்பெறுவது வெங்காயம்.

இந்த வெங்காயத்தில் அதிக நன்மைகள் இருப்பதனால்தான் அன்றாடம் இதனை சேர்த்துக்கொள்கிறோம்.

குழம்புக்கு சேர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்த வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்துகொள்ளுங்கள்.j

எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

* வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

* வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.bn

The post வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர் காவல்த்துறையினரிடம் சிக்கினார்

Posted: 07 Mar 2016 09:38 AM PST

California_Sandwiches_-_03062016 (1)

California_Sandwiches_-_03062016 (1)சிற்றூண்டி உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Queensway மற்றும் East Mall பகுதியில் அமைந்துள்ள குறித்த சிற்றுண்டிச் சாலையை நபர் ஒருவர் உடைத்து கொள்ளையிட்டதாகவும், அதிகாலை ஒரு மணியளவில் அந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொள்ளையில் ஈடுபட்ட நபரைக் காவல்த்துறையினர் பிடிக்க முற்பட்ட போது அந்த நபர் வாகனம் ஒன்றில் தப்பிச் செல்ல முயற்சித்தாகவும், அப்போது அவர் வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார் என்றும், பின்னர் உடனடியகா மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.California_Sandwiches_-_03062016 (1)

உள்ளூர் காவல்த்துறையினர் தொடர்பு பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் காயமடைந்துள்ளதாக கூறப்படும் இந்த சம்பவவத்தின் விசாரணைளை ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கையாள்வார்களா என்பது தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

The post தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர் காவல்த்துறையினரிடம் சிக்கினார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவில் இந்த வாரம் வசந்த காலதினை ஒத்த பருவநிலை

Posted: 07 Mar 2016 09:32 AM PST

Jerk_King_restaurant__-_03072015

Jerk_King_restaurant__-_03072015ரொரன்ரோவில் இந்த வாரம் வசந்த காலத்தினை ஒத்த பருவநிலை காணப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நிலவும் வெப்பநிலை இரட்டை இலக்கத்தில் பதிவாகும் என்றும், வெய்யிலுடன் கூடியதான வெளிப்பான வானம் காணப்படும் என்றும் ரொரன்ரோ வானிலை அவதானிப்பு நிபுணர்களால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த பருவகாலத்தின் போது வழக்கமாக அதிக அளவில் நான்கு பாகை செல்சியசே இதுவரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இன்று வெப்பநிலையின் அளவு ஒன்பது பாகை செல்சியசை எட்டும் என்றும், எதிர்வரும் நாட்களில் அது அதிகரித்து செல்லும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் பகல்நேர வெப்பநிலையாக முறையே 12 பாகை மற்றும் 13 பாகை செல்சியஸ் வரையில் பதிவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.Jerk_King_restaurant__-_03072015

இவ்வாறு பதிவாகும் அதிக அளவிலான வெப்பநிலை திடீரென மழைவீழ்ச்சியினை ஏற்படுத்தக் கூடும் என்பதனால், இந்த வாரம் முழுவதும் மழைக்குத் தயாராக தங்களுடன் குடைகளையும் எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இன்றைய நாளிலும் மற்றும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

The post ரொரன்ரோவில் இந்த வாரம் வசந்த காலதினை ஒத்த பருவநிலை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய பிரதமர் வெள்ளை மாளிகைக்கு பயணம் மேற்கொள்வுள்ளார்

Posted: 07 Mar 2016 09:26 AM PST

Justin_Trudeau_-_Obama_-_03072016

Justin_Trudeau_-_Obama_-_03072016கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அமெரிக்க வெள்ளை மாளிக்கைக்கான தமது முதல் பயணத்தை எதிர்வரும் வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியிலேயே கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜஸ்டின் ரூடோ, வெள்ளை மாளிககைக்கு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளவுள்ள இந்த முதல் பயணம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தம்பதியினருக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அரசாங்க உணவு விருந்தினை அளிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

1997ஆம் ஆண்டின் பின்னர் கனேடிய தலைவர் ஒருவருக்கு அமெரிக்க அதிபர் வழங்கும் முதலாவது விருந்துபசாரமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Justin_Trudeau_-_Obama_-_03072016

உலகின் தலைசிறந்த தலைவர்களுக்கே அமெரிக்க அரசினால் இவ்வாறான விருந்துபசாரம் வழங்கப்படுவதாகவும், ஒபாமா அதிபராக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் அவரது இரண்டு பதவிக்காலங்களின் போதும் இவ்வாறு ஒன்பது விருந்துபசாரங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இரண்டு தலைவர்களும் லிபரல் கொள்கைகளை கொண்டவர்கள் என்பதால் அவர்களிடையிலான சந்திப்பு, இணக்கமான போக்குக்கே வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் பசுபிக் பிராந்திய பங்காளர் ஒப்பந்தம், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போர் நாடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுகளை நடாத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post கனேடிய பிரதமர் வெள்ளை மாளிகைக்கு பயணம் மேற்கொள்வுள்ளார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™