மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- போபாலில் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
- 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பட்ஜெட்டின் நன்மைகளை மக்களுக்கு விளக்கி கூறுங்கள்: எம்.பி.க்களுக்கு பா.ஜ.க. உத்தரவு
- ரவிசங்கரின் கலாச்சார விழாவுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல்: மத்திய அரசு எச்சரிக்கை
- வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டாரா விஜய் மல்லையா?
- புற்றுநோயால் அமெரிக்கப் பெண் மரணம் எதிரொலி: இந்தியாவில் ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது
- திருப்பதி கோவிலில் இன்று காலை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி
- தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் விலகல்
- சந்திரபாபு நாயுடு மீது கண்ணிவெடி தாக்குதல்: கைதான நக்சலைட் விடுதலை - திருப்பதி கோர்ட்டு தீர்ப்பு
- கேரளாவில் போலீஸ் நிலையத்தை சூறையாடிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்: 6 போலீசார் படுகாயம்
- ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று மேல்சபையில் பேசுகிறார்
- ஊனமுற்றவருக்கு உதவிய தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு
- மாட்டிறைச்சி தடை பற்றி பேசினால் என் வேலை பறிபோகும்: தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்து
- கேரள மாணவியை கற்பழித்து மிரட்டிய காதலன் உட்பட 3பேர் கைது
- சட்டசபையில் ஒரு ஆண்டு சஸ்பெண்டு: சுப்ரீம் கோர்ட்டில் ரோஜா வழக்கு
- அனைத்து எம்.பி.க்களும் இன்றைய பாராளுமன்றத்தில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: காங். மேலிடம் கட்டளை
- டெல்லி அருகே கற்பழித்து, எரிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
- பெங்களூரு: கார்வாரில் மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த பழங்கால பீரங்கி கண்டுபிடிப்பு
- ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி
- கொத்தடிமைகள் மீட்பு விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு
- மும்பையில் முதன் முதலில் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு பிரசவம்
| போபாலில் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் Posted: 08 Mar 2016 10:45 PM PST மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா-634 விமானம் இன்று காலை புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. விமானம் போபாலில் இருந்து புறப்பட்ட போது, பறவை ஒன்று விமான |
| Posted: 08 Mar 2016 10:32 PM PST அசாம், கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்களையும், இந்த பட்ஜெட்டின் மூலம் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்கும்படி |
| ரவிசங்கரின் கலாச்சார விழாவுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல்: மத்திய அரசு எச்சரிக்கை Posted: 08 Mar 2016 10:25 PM PST வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டெல்லியில் யமுனை ஆற்றின் வெள்ளச் சமவெளி பகுதியில் 3 நாட்களுக்கு உலக கலாச்சார திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி திருவிழாவை தொடங்கி வைப்பார் என்றும் (3–ந்தேதி) நினைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் |
| வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டாரா விஜய் மல்லையா? Posted: 08 Mar 2016 10:16 PM PST வங்கிகளில் வாங்கிய கோடிக்கணக்கான கடன் தொகையை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வழிகாட்டுதல் கோரி, எஸ்.பி.ஐ. தலைமையிலான பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. |
| Posted: 08 Mar 2016 10:06 PM PST அமெரிக்காவில் ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்திய ஒருபெண் புற்றுநோயால் மரணம் அடைந்ததன் எதிரொலியாக மராட்டிய மாநிலத்தில் விற்பனையாகிவரும் இந்நிறுவனத்தின் பவுடரை அரசு அதிகாரிகள் தரப்பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். |
| திருப்பதி கோவிலில் இன்று காலை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி Posted: 08 Mar 2016 10:01 PM PST சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணியில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணி வரை 13½ மணி நேரம் நடை சாத்தப்பட்டது. தரிசனமும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் நடை திறக்கப்பட்டது. பின்னர் |
| தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் விலகல் Posted: 08 Mar 2016 09:38 PM PST தெலுங்கானா மாநிலத்தில் சந்திர சேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்) ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 11 எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கு தேசம் கட்சியில் |
| சந்திரபாபு நாயுடு மீது கண்ணிவெடி தாக்குதல்: கைதான நக்சலைட் விடுதலை - திருப்பதி கோர்ட்டு தீர்ப்பு Posted: 08 Mar 2016 09:31 PM PST கடந்த 2003–ம் ஆண்டு அக்டோபர் 1–ந் தேதி திருப்பதி கோவில் பிரமோற்சவ விழாவில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் செலுத்துவதற்காக முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு காரில் திருப்பதிக்கு சென்றார். அலிபிரி டோல்கேட் பகுதியில் சந்திரபாபு நாயுடு கார் மீது கண்ணிவெடி |
| கேரளாவில் போலீஸ் நிலையத்தை சூறையாடிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்: 6 போலீசார் படுகாயம் Posted: 08 Mar 2016 09:18 PM PST திருவனந்தபுரம் அருகே கொட்டாரக்கரை பகுதியில் கொட்டாரக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் |
| ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று மேல்சபையில் பேசுகிறார் Posted: 08 Mar 2016 09:07 PM PST மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசுகிறார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கியது. அன்றே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பின்னர், மத்திய பட்ஜெட் 29-ந்தேதியும், ரெயில்வே பட்ஜெட் 25-ந்தேதியும் |
| ஊனமுற்றவருக்கு உதவிய தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு Posted: 08 Mar 2016 09:02 PM PST வங்காளதேசத்தை சேர்ந்தவர் ஷேக் (வயது 22). மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருக்கு அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் பிழைப்பு தேடி அவர் கேரளாவுக்கு வந்தார். இங்கு கோழிக்கோட்டில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். ஏழையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் ஷேக். |
| மாட்டிறைச்சி தடை பற்றி பேசினால் என் வேலை பறிபோகும்: தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்து Posted: 08 Mar 2016 09:02 PM PST மாட்டிறைச்சி தடை பற்றி பேசினால் தன்னுடைய வேலை பறிபோகும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மும்பை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மாணவர்களின் கேள்விக்கு அரவிந்த் சுப்ரமணியன் பதிலளித்தார். அப்போது, மாட்டிறைச்சியை தடை செய்தால் விவசாயிகளின் |
| கேரள மாணவியை கற்பழித்து மிரட்டிய காதலன் உட்பட 3பேர் கைது Posted: 08 Mar 2016 09:02 PM PST கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளறடையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவரும் பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவியும் சென்றுகொண்டு இருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து அந்த மாணவி திடீரென்று கீழே குதித்தார். இதனால் அவருக்கு சாலையில் விழுந்து காயம் |
| சட்டசபையில் ஒரு ஆண்டு சஸ்பெண்டு: சுப்ரீம் கோர்ட்டில் ரோஜா வழக்கு Posted: 08 Mar 2016 08:58 PM PST ஆந்திர சட்டசபையில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். சஸ்பெண்ட்டை எதிர்த்து ரோஜா ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சஞ்சய்குமார் முன்னிலையில் விசாரணை நடந்து |
| அனைத்து எம்.பி.க்களும் இன்றைய பாராளுமன்றத்தில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: காங். மேலிடம் கட்டளை Posted: 08 Mar 2016 08:26 PM PST பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது எம்.பி.க்கள் பேசி வருகின்றனர். அவ்வகையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். அவரது பேச்சின்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள காங்கிரஸ் |
| டெல்லி அருகே கற்பழித்து, எரிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் Posted: 08 Mar 2016 08:22 PM PST டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவை ஒட்டியுள்ள திக்ரி கிராமத்தில் வசித்த 16 வயது சிறுமி மீது பக்கத்து வீட்டு வாலிபருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த 18 வயது வாலிபர் நட்பாக பழகி வந்தார். |
| பெங்களூரு: கார்வாரில் மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த பழங்கால பீரங்கி கண்டுபிடிப்பு Posted: 08 Mar 2016 07:48 PM PST கார்வாரில் பிரசித்திப்பெற்ற சதாசிவ்காடு கோட்டை உள்ளது. இந்த கோட்டையின் அருகே சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. இந்த சாலை விரிவாக்க பணியால் சதாசிவ்காடு கோட்டை பாதிக்கப்படும் எனக் கூறியதோடு, பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் சிட்டகுலா போலீசில் புகார் செய்தனர். மேலும், பணி |
| ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி Posted: 08 Mar 2016 07:06 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் மொத்தம் 13 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து திருமலைக்கு வந்தனர். அன்று ஒரேநாளில் 67 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். |
| கொத்தடிமைகள் மீட்பு விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு Posted: 08 Mar 2016 07:04 PM PST திருவள்ளூர் மாவட்டம் போந்தவாக்கம் பகுதியில் தனியார் செங்கல் சூளையில் வடமாநிலத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக இருப்பதாக பொன்னேரி வருவாய் கோட்டாட்சியருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சோதனை நடத்தப்பட்டது. |
| மும்பையில் முதன் முதலில் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு பிரசவம் Posted: 08 Mar 2016 06:58 PM PST மும்பை மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஹர்ஷா சவுதா ஷா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரேல் கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவராத்திரி அன்று அவர் அழகான |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |