Tamil Star |
- இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிறந்த நிவாரணமாகும் திராட்சை எண்ணெய்
- சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் நபர் ஒருவருக்கு காவல்த்துறை வலைவீச்சு
- லிபியா மோதல்களில் கனேடியர் ஒருவர் உயிரிழப்பு
| இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிறந்த நிவாரணமாகும் திராட்சை எண்ணெய் Posted: 08 Mar 2016 06:02 AM PST
இதன்படி இந்த எண்ணெயில் காணப்படும் ஒமேகா 6 எனும் கொழுப்பு அமிலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குவதுடன், லினோலிக் அமிலம் ஆனது மேற்குறித்த நோய் ஆபத்துக்களை குறைப்பதாகவும் Ohio State பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் திராட்சை எண்ணெயில் 80 சதவீதம் கொழும்பமிலம் இருப்பதாகவும், லினோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிறந்த நிவாரணமாகும் திராட்சை எண்ணெய் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் நபர் ஒருவருக்கு காவல்த்துறை வலைவீச்சு Posted: 08 Mar 2016 05:59 AM PST
இது தொடர்பில் காவல்த்தறையினர் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள தகவலில் குறித்த சந்தேக நபர் கடந்த சில மாதங்களாக 13 வயதுச் சிறுமியை இணையத்தின் மூலம் வசியம் செய்து வந்தாக தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த சிறுமி 11 வயதாக இருந்த போதும் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக அது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் குறிப்பிட்ட எண்ணிக்கையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ரொரன்ரோவைச் சேர்ந்த 35 வயதான எல்விஸ் பிரஸ்லி அமெலதாஸ் (Elvis Presley Amalathas)என்பவரைத் தேடி வருவதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், அவர் 6 அடி உயரம் 170 இறாத்தல் நிறை, கறுப்பு நிறு முடிகொண்டவர் என அடையாளப் படுத்தியுள்ளதுடன், கடைசியாக அவர் குறுந்தாடி வைத்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 416-808-8500 என்ற இலக்கத்தில் விசாரணை அதிகாரிகளை அல்லது 416-222-TIPS (8477) என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறு காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். The post சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் நபர் ஒருவருக்கு காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| லிபியா மோதல்களில் கனேடியர் ஒருவர் உயிரிழப்பு Posted: 08 Mar 2016 05:55 AM PST
வெளிநாடுகளில் இவ்வாறு மோதல்களில் ஈடுபட்டு கனேயடிர்கள் பலியாவது குறித்து தாம் மிகுந்த கவலை கொள்வதாக வெளியுறவு அமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக இஸ்லாமிய அரசு என்ற தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளில் கனேடியர்களும் ஈடுபடுவது தொடர்பில் தாம் மிகுந்த கவலை கொள்வதாகவும் அது தெரிவித்துள்ளது. The post லிபியா மோதல்களில் கனேடியர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

திராட்சை விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதை குறைக்கும் சக்தி இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோக விசாரணையுடன் தொடர்பு பட்ட நபர் ஒருவரை தேடி வருவதாக காவல்த்துறையினர் அறிவித்துள்ளனர்.
லிபியாவில் இடம்பெற்ற ஆயுத மோதல்களின் போது கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில் கனேடிய அரசாங்கமும் இது குறித்து அறிந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், லிபயாவில் கனேடியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் தனியாள் அந்தரங்கம் கருதி, உயிரிழந்த அந்த நபர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதனையும் கனேடிய வெளியுறவுத் துறை வெளியிடவில்லை.