Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


7 பேரை விடுதலை செய்யக்கூடாது: மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 02 Mar 2016 11:01 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் முருகன் உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங். கட்சியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. விலகல்: தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தார்

Posted: 02 Mar 2016 09:45 PM PST

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் விலகுவது தொடர் கதையாக உள்ளது. ஏற்கனவே அக்கட்சியைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவிய நிலையில் நேற்று மேலும் ஒரு எம்.எல்.ஏ. விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

ஆந்திராவில் மாவோயிஸ்டு இயக்க கமாண்டோ படை தலைவர் கைது

Posted: 02 Mar 2016 09:38 PM PST

தெலுங்கானா-சத்தீஷ்கர் மாநில எல்லையான சக்மா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசாருடன் நடந்த மோதலில் 8 மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 5 பேர் பெண்கள். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.ஸ்டு இயக்க கமாண்டோ படை தலைவர் கைது

குழந்தையின் உயிரை பறித்த சாக்லெட்

Posted: 02 Mar 2016 09:37 PM PST

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பானியம் கிராமம் பி.சி.காலனியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி ஹசினா. இந்த தம்பதிக்கு தனா (வயது 3) என்ற பெண் குழந்தையும், ரிஹான் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது. ஹசினா, அழுதுகொண்டு இருந்த தனது மகளுக்கு சாப்பிட சாக்லெட் கொடுத்தார். அதை சாப்பிட்ட தனா சிலவற்றை தரையில் கொட்டினாள்.

செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை

Posted: 02 Mar 2016 09:16 PM PST

திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க, கடந்த மாதம் 22, 23–ந்தேதிகளில் ஆந்திர மாநில முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு தலைமையில் 7 மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்க தினமும் 4½ லட்சம் லட்டுகள் தயாரிக்க உத்தரவு

Posted: 02 Mar 2016 08:39 PM PST

தற்போது கோடை விடுமுறை வருவதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர்

உம்மன்சாண்டியின் பாதுகாப்பு பணியில் குடிபோதையில் இருந்த சப்–இன்ஸ்பெக்டர் கைது

Posted: 02 Mar 2016 08:24 PM PST

திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல்லில் அரசு விழா நடைபெற்றது. இதில் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டார். இதையொட்டி அந்த விழாவின் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது விழாவில் பங்கேற்ற பொதுமக்கள்– கட்சி தொண்டர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கடுமையாக நடந்து கொண்டார். இதனால் அவரிடம் கட்சி தொண்டர்கள் வாக்குவாதத்தில்

தானம் செய்வோரின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல குட்டி விமான வசதி: உம்மன்சாண்டி தொடங்கி வைத்தார்

Posted: 02 Mar 2016 08:18 PM PST

விபத்து மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணமாக மூளைச்சாவு அடைபவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் இறந்த பின்னும் வாழ்கிறார்கள். எனவே உடல் உறுப்பு தானத்தை ஊக்குப்படுத்தும் வகையில் பல்வேறு

இஸ்ரத் ஜகான் விவகாரம் மீண்டும் விசுவரூபம்: மன்மோகன் சிங், சோனியா, ப.சிதம்பரம் மீது பா.ஜனதா குற்றச்சாட்டு

Posted: 02 Mar 2016 07:49 PM PST

குஜராத்தில் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி மராட்டியத்தை சேர்ந்த 19 வயது மாணவி இஸ்ரத் ஜகான் மற்றும் 3 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியை கொல்லும் சதித்திட்டத்துடன் வந்தபோது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 16 கிராமவாசிகள் சுட்டுக்கொலை: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்

Posted: 02 Mar 2016 07:21 PM PST

சத்தீஷ்கார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்து காணப்படுகிறது. நேற்று மாலை நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் வட்டாரப் பகுதியில் நேத்னார், ஆல்பேடா, பார்பா, குண்டலா, மத்பேடா ஆகிய கிராமங்களுக்குள் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். தங்களை பற்றி போலீசாரிடம் துப்புக்

ஆந்திராவில் கட்டுமான பணிகளுக்கு மணல் இலவசம்: அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்ப்பு

Posted: 02 Mar 2016 06:05 PM PST

கட்டுமான துறையில் அத்தியாவசிய பொருளாக கருதப்படும் மணலை அரசு குவாரிகள் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக ஆந்திர அரசு, இலவசமாக மணல் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.

தேசவிரோத வழக்கை கைவிட வலியுறுத்தி பாராளுமன்றத்தை நோக்கி ஜே.என்.யு மாணவர்கள் பேரணி

Posted: 02 Mar 2016 04:16 PM PST

தேச விரோத வழக்கை நீக்க வலியுறுத்தியும், ரோகித் சட்டத்தை அமல்படுத்த கோரியும் ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். தலைநகர் புதுடெல்லியில் உள்ள மண்டி இல்லத்தில் இந்த பேரணி தொடங்கியது. இதில் டெல்லி முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்

2 வருடங்களுக்கு பிறகு எகிப்து சிறையில் இருந்து 6 இந்திய மாலுமிகள் விடுதலை: சுஷ்மா சுவராஜ் உடன் சந்திப்பு

Posted: 02 Mar 2016 02:28 PM PST

எகிப்து நாட்டு சிறையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அடைக்க வைக்கப்பட்டிருந்த இந்திய மாலுமிகள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட 6 மாலுமிகளும் தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பிய மாலுமிகள் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்தனர்.

தொழிலாளர் வைப்பு நிதி வரி பற்றிய இறுதி முடிவு பட்ஜெட் விவாதத்தில் அறிவிப்பு: அருண்ஜெட்லி தகவல்

Posted: 02 Mar 2016 01:55 PM PST

தொழிலாளர் எடுக்கும் வைப்புநிதியின் 60 சதவீத தொகைக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பு மீதான இறுதி முடிவு பட்ஜெட் விவாதத்தில் அறிவிக்கப்படும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார். 2016-17-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்(இ.பி.எப்.) இருந்து பணி ஓய்வு பெறும் தொழிலாளர் ஒருவர் பணத்தை எடுக்கும்போது 40 சதவீத தொகைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் மீதமுள்ள 60 சதவீத தொகைக்கு வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் வரிவிதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

கடனை கட்டாத தொழிலதிபர் மல்லையாவை கைது செய்ய பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை

Posted: 02 Mar 2016 11:47 AM PST

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி கோரியுள்ளது. யு.பி. குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வருகிறார்.

யமுனா நதியை மாசுப்படுத்துவதாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு

Posted: 02 Mar 2016 09:21 AM PST

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சியை யமுனா நதிகரையில் நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உட்பட 35 லட்சம் பேர் கலந்து கொள்ள இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு லிவ் யமுனா என்னும் யமுனா நதி பாதுக்காப்பு இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பை சேர்ந்த

சத்தீஸ்கரில் 23 நக்சலைட்டுகள் வன்முறையை கைவிட்டு சரண் அடைந்தனர்

Posted: 02 Mar 2016 08:43 AM PST

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் 23 நக்சலைட்டுகள் வன்முறை நடவடிக்கைகளை கைவிட்டு இன்று சரண் அடைந்தனர். மாவட்டத்தின் மூத்த போலீஸ் அதிகாரி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்த அவர்கள், தங்கள் இயக்கத்தின் தலைவர்களின் வன்முறை மற்றும் வளர்ச்சி விரோத நடவடிக்கைகளால் விரக்தி அடைந்து இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமாருக்கு 6 மாதத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி ஐகோர்ட்

Posted: 02 Mar 2016 06:17 AM PST

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமாருக்கு டெல்லி ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் உள்ளிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு

மும்பையில் பெண்கள் நடனத்துடன் கூடிய மதுபான பார்களில் சி.சி.டி.வி. கேமராக்களுக்கு தடை

Posted: 02 Mar 2016 04:51 AM PST

மகராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பெண்கள் நடனமாடும் மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மும்பையில் உள்ள நடசத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்கங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்து வருகின்றன. பெண்கள் நடனம் ஆடும் போது அவை கேமராவில் பதிவு செய்யப்படுவதற்கும், பணியின் போது அவர்களின்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 8 முன்னாள் ராணுவ வீரர்கள் கைது: மத்திய அரசு தகவல்

Posted: 02 Mar 2016 04:37 AM PST

பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு பார்த்த 8 முன்னாள் ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை மந்திரி ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி அளித்த பதில் வருமாறு:-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™