Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மியாவ் ஆடியோ விழாவில் கமல்ஹாசன்-சிவகார்த்திகேயன்!

Posted:

சின்னாஸ் பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ராஜா, காயத்ரி என்ற புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் ஒரு பூனை பழிவாங்கும் கதையில் உருவாகியிருக்கிறது. செல்பி என்கிற பெர்சியன் ரக பூனைதான் இந்த படத்தில் சிலரை சஸ்பென்சாக பழிவாங்குகிறதாம். அந்த பூனை பழி வாங்கும் காட்சிகள் சம்பந்தப்பட்ட சிஜி ஒர்க் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ...

விஜய்யின் தெறிக்கு வரிவிலக்கு கிடைக்குமா?

Posted:

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி படத்தை வெளியிட முடிவு செய்து விட்டதால், எடிட்டிங் பணிகள் முடிந்து விட்ட நிலையில், டப்பிங் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பின்னணி இசைக்கோர்ப்பு என வேலைகளை துரிதப்படுத்தியுள்ளார் ...

'ஹாக்கி' கோட்சாக நடித்துள்ள அனுஹாசன்!

Posted:

கிரிக்கெட், கபடி என சில விளையாட்டுகளை மையமாக வைத்து படங்கள் வந்திருப்பதைத் தொடர்ந்து தற்போது ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து ஹாக்கி என்ற படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் விந்தை, விழா படங்களில் நடித்த மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். நடிகை சுகாசினியின் தங்கையான இந்திரா பட நாயகி அனுஹாசன் ஹாக்கி அணியின் கோட்சாக ...

இருமுகன் யூனிட்டை அசரவைத்த விக்ரம்!

Posted:

விக்ரமுடன் முன்பு ஒரு படத்தில் நடிக்கயிருந்த நயன்தாரா, சில காரணங்களால் அப்படத்தில் நடிக்கவில்லை. ஆனால் இப்போது ரகசிய ஏஜென்ட், திருநங்கை என இரண்டு விதமான வேடங்களில் விக்ரம் நடித்து வரும் இருமுகன் படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் இணைந்திருக்கிறார். மேலும், வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களைகூட ...

போட்டிப்போட்டு நடித்த தனுஷ்-திரிஷா!

Posted:

சினிமாவில் பெரிய ரவுண்டு வந்து ஓய்ந்து விட்ட சில நடிகைகள் பின்னர் அரசியல் ரவுண்டை தொடங்கி வருகின்றனர். இந்நிலையில், நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட நடிகைகள் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் இல்லை என்றபோதும், அவர்களை அரசியல் கட்சிகளுடன் இணைத்து வதந்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது கொடி படத்தில் ...

அரசியலுக்கு நான் சரியான ஆள் இல்லை: நாகார்ஜூனா

Posted:

நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என்ற பல முகங்கள் நாகார்ஜுனாவுக்கு உண்டு. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகராக திகழ்கிறார். ரட்சகன் படத்திற்கு பின், தோழா படம் மூலம், மீண்டும் தமிழ் பேச வருகிறார்
நாகார்ஜுனா. அவருடன் ஒரு சந்திப்பு:

பல ஆண்டுகளுக்கு பின், தமிழில் ...

'அது என் வேலையில்லை'

Posted:

ஹன்சிகா, சிம்புவுடன் நடித்த வேட்டை மன்னன், ஜெயப்பிரதா மகனுடன் நடித்த உயிரே உயிரே ஆகிய இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக முடங்கி கிடக்கின்றன. ஆனால், ஹன்சிகாவுக்கு அதுபற்றி எந்த கவலையும் இல்லை. 'படத்தில் நடிப்பதுடன் என் வேலை முடிந்து விட்டது. படம் வெளியாகும்போது, விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டால் போவேன். மற்றபடி, படத்தை ...

சோனாக் ஷியின் ஹெலிகாப்டர் உலா!

Posted:

பாலிவுட் நடிகையர் எல்லாம், இப்போது ஹைடெக்காக மாறி விட்டனர். படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தையெல்லாம், ஆடம்பர வாழ்வுக்காக அள்ளி செலவிடுகின்றனர். படப் பிடிப்புகளுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், கார்களில் சென்ற காலம் மாறி, ஹெலிகாப்டர்களில் செல்கின்றனர். சோனாக் ஷி சின்கா, சமீபத்தில், மஹாராஷ்டிராமாநிலம் ...

வெற்றி கிடைக்குமா?

Posted:

விக்ரமுக்கு, ராஜபாட்டை என்ற படத்தில் ஏற்பட்ட சறுக்கல், சமீபத்தில் வெளியான, 10 எண்றதுக்குள்ளே வரை தொடருகிறது. இந்த இடைவெளியில் இளம் நடிகர்கள் பலர் ஊடுருவி விட்டதால், கோலிவுட்டில் கடுமையான போட்டியை, அவர் சந்திக்க வேண்டியுள்ளது. 'எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும்' என்ற முடிவுடன், இருமுகன் படத்தில் உயிரை கொடுத்து நடித்து ...

வாய்ப்புக்காக ஏங்கும் தமன்னா!

Posted:

'வயதானாலும், பரவாயில்லை; கிடைக்கும் வாய்ப்புகளை விட்டு விடக் கூடாது' என்பதில், உறுதியாக இருக்கின்றனர் தற்போதைய நடிகையர். இந்த விஷயத்தில், தமன்னாவுக்கும், த்ரிஷாவுக்கும் இடையே தான், கடுமையான போட்டி நிலவுவதாக கூறுகின்றன, கோடம்பாக்கம் வட்டாரங்கள். அதிலும், தமன்னா, வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக, தன் பிடிவாதத்தை எல்லாம் கைவிட்டு, ...

உடலை குறைக்க என்ன செய்யலாம்?

Posted:

சித்தியுடன் சண்டை போட்டு, படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அஞ்சலி, தற்போது, மீண்டும் முழு வீச்சில், கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், விமலுடன் நடிக்கும் மாப்ள சிங்கம் மற்றும் காண்பது பொய், தரமணி உள்ளிட்ட நான்கு படங்களிலும், தெலுங்கில் நான்கு படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும், உடல், மிகவும் ...

சந்தானம் ஜோடியாக மராத்தி நடிகை

Posted:

தமிழ் படங்களுக்கு, மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. ரஜினி உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புதுமுக நாயகி வைபவி ஷண்டிலியா. கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டிலியா நடிக்கிறார்.

வைபவியை தமிழில் ...

சிறு கதைகள் எழுத போகிறார் சன்னி லியோன்

Posted:

பாலிவுட்டின் ஹாட் குயினாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த மஸ்திஜாதே படம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் இப்படத்தில் ஆபாச வார்த்தைகள் அதிகம் இருந்தன. தற்போது சில படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், விரைவில் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்க இருக்கிறார். இதுஒருபுறம் இருக்க, அவர் சிறு ...

சினிமா உலகம் செத்து கொண்டிருக்கிறது - டி.ராஜேந்தர்

Posted:

தொடர் தோல்வி படங்களால் துவண்டு போய் உள்ள நடிகர் ஜீவா, பெரிதும் நம்புவது தனது 25வது படமான 'போக்கிரி ராஜா' படத்தை தான். இப்படத்தில் ஜீவாவுடன் சிபிராஜ், ஹன்சிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா தான் இப்படத்தின் இயக்குநர். விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பிடி செல்வகுமார் ...

ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் 'ஃபேன்'

Posted:

'தில்வாலே' படம் சரியாக போகாததால் தனது அடுத்தப்படான 'ஃபேன்' படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார் ஷாரூக்கான். அவரது எதிர்பார்ப்பு போலவே அமைந்திருக்கிறது இந்த ஃபேன் படமும். ஏனென்றால், இப்படத்தில் ஷாரூக்கான் ஒரு ஸ்டாராகவும், ஒரு சாதாரண ரசிகராகவும் இரண்டு மாறுப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். மனீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படம் ...

இந்த இன்னிங்சைக் காப்பாற்றிக் கொள்வாரா யுவன் ?

Posted:

யுவன் ஷங்கர் ராஜா, சில வருடங்களுக்கு முன்னர் வரை தமிழ்த் திரை இசை உலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவராக இருந்தார். 2013ல் வெளிவந்த 'தங்க மீன்கள்' படத்திற்குப் பிறகு அவருடைய இசையில் வெளிவந்த படங்கள் இசையிலும் சரி, வியாபார ரீதியாகவும் சரி பெரிய வெற்றியைப் பெறவில்லை. அது, யுவனுக்கு ஒரு பின்னடைவாகவும் இருந்தது. அதிகப் படங்களை ...

'பாகுபலி 2' வெளியீட்டுத் தேதி உண்மையா.?

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பாகுபலி 2' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதாக காலை முதல் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதுவரை தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திடமிருந்தோ அல்லது படத்தின் இயக்குனரான ராஜமௌலியிடமிருந்தோ எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

2017ம் வருடம் ஏப்ரல் 14 ...

4 லட்சம் லைக்குகளைத் தொடப் போகும் 'கொல வெறி'

Posted:

தமிழ்த் திரையுலகில் இன்று ஒரு படத்தின் 'ஸ்டில்'ஐ வெளியிட வேண்டுமென்றால் கூட அதை 'மோஷன் போஸ்டர்' என்று கொஞ்சம் உருமாற்றி, அதையும் யு-டியூப்பில் வெளியிட்டு ஹிட்ஸ்களையும், லைக்குகளையும் பார்க்க வேண்டும் என அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு முதன் முதலாக வழி காட்டியது 'கொல வெறி' பாடல்தான். ...

கார்த்தி-தமன்னா ரொமான்ஸை பார்த்து கோபப்பட்ட நாகார்ஜுனா

Posted:

டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனாவுடன் கார்த்தி இணைந்து நடித்துள்ள திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வருகின்றது. தமிழில் தோழா என்ற பெயரிலும் தெலுங்கில் ஊபிரி என்ற பெயரிலும் வெளிவரும் இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோழா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ...

தயாரிப்பாளராக மாறும் பிரபல இயக்குனர்

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர் விவி விநாயக் தயாரிப்பாளராக மாறவுள்ளதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இயல்பிலேயே வசதி படைத்தவரான விவி விநாயக் பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் விவி விநாயக் தயாரிப்பாளராக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™