Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அனைவருக்கும் என் இனிய வணக்கம் - சாலமன்.

Posted: 12 Mar 2016 01:46 PM PST

அனைவருக்கும் என் இனிய வணக்கம். என் பெயர் சாலமன். சொந்த ஊர் தூத்துக்குடி. இணையம் வழியே ரோண்டா பைர்னின் இரகசியம் புத்தகத்தை தேடும்பொழுது ஈகரையை கண்டேன். எனக்கு உளவியல், அறிவியல், இதிகாசங்கள், உடல் நலன், யோகம், அறிவியல் புனைக்கதைகள், வரலாற்று புனைக்கதைகள், அமானுஷ்ய நாவல்கள், துப்பறியும் நாவல்களில் ஈடுபாடு அதிகம். இதுவே ஈகரை குடும்பத்தில் என்னை இணைத்துக்கொள்ள ஊந்தியது. உங்கள் சகோதரனாய் இது வரை இத்தளத்தில் பதிவேற்றப்பட்ட நூல்களுக்கும் இனிமேல் பதிவேற்றப்படப்போகின்ற நூல்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். ...

கருவறையில் கைப்பேசி

Posted: 12 Mar 2016 12:17 PM PST

  கருவறையில் கைப்பேசி கருவறையில் கனிந்தது கருவின் காலம்   புருவம் உயர்த்தினர்   மருத்துவர் கூட்டம் உருவம் வெளிவரவில்லை கருவின் கையில் கைப்பேசி பொறுமையாகப் பேசியது மருத்துவத் தலைமையிடம் "கருக்கொண்டு எனக்கு உருதந்த அன்னைக்கு அறுவையின்றி  எனைப்   பெறும் பேறு தருவீரா? ச.சந்திரசேகரன்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்தியானந்தா ரஞ்சித்தாவுடன் சாமி தரிசனம்

Posted: 12 Mar 2016 08:39 AM PST

- திருமலை, திருமலையில் உள்ள திருப்பதி எழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட 15 சீடர்களுடன் சாமி தரிசனம் செய்தார். ரஞ்சிதா துறவி கோலத்தில் கழுத்தில் ருத்ராட்சம் மாலை, விபூதி அணிந்து வந்திருந்தார். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைக் காண பக்தர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய தோற்றத்தில் சடை முடியுடன் காணப்பட்ட நித்யானந்தாவை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர்.அப்போது அவர் சிரித்து கொண்டே வெளியே சென்று ...

குறுங்கவிதைகள் - (தொடர் பதிவு)

Posted: 12 Mar 2016 08:39 AM PST

மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

Posted: 12 Mar 2016 07:51 AM PST

- பிழைப்புத் தேடி கேரளாவிற்கு வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், மூன்றே நாட்களில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் உள்ளார். - மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் மொஃபிஜுல் ரஹனா ஷேக். 22 வயதான ஷேக், கூலி வேலைத் தேடி கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளார். கேரளாவிற்கு சென்ற மறுநாளே 50 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். மறுநாளே இவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால், ...

விஜயகாந்தின் திடீர் முடிவால் கருணாநிதி கடும் அதிருப்தி

Posted: 12 Mar 2016 07:06 AM PST

விஜயகாந்தின் திடீர் முடிவால் கருணாநிதி கடும் அதிருப்தி திமுக தலைவர் கருணாநிதி | படம்: ம.பிரபு குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிடிவாதத்தால் தனித்து போட்டியிடும் முடிவை தேமுதிக எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவை வீழ்த்த வேண்டு மானால் தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என திமுக திட்டமிட்டது. விஜயகாந்துக்கு கருணாநிதி பகிரங்க அழைப்பும் விடுத்தார். விஜயகாந்த் குடும்பத்தினருடன் ஸ்டாலின் குடும்பத்தினரும், ...

தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்கணுமாம்!!

Posted: 12 Mar 2016 04:37 AM PST

- - கட்சிக்காக தலைவர் உயிரைக்கூட குடுப்பாரு…'' – ''அதுக்காக… குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்னா 'ஸ்டிக்கர்'னா வைக்கிறது..?'' – – சி.சாமிநாதன், – ———————————— – தலைவர் மேல சி.பி.ஐ. புதுசா வழக்கு போட்டிருக்காமே..?'' – ''ஆமாம்! அவர் வீட்ல ரெய்டு செய்த அதிகாரிகள் முதுகுல ஸ்டிக்கர் ஒட்டினாராம்!'' – – பர்வீன் யூனுஸ், – ——————————————- – ''தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்கணும்னு நீங்கதானேய்யா சொன்னீங்க..?'' – ''அதுக்காக நமீதா, அஞ்சலி, நயன்தாரா படங்களைப் போட்டு அறிக்கையை ...

வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப்–இன்ஸ்பெக்டர்-ஏட்டு

Posted: 12 Mar 2016 04:24 AM PST

திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் டிரைவரான ஏட்டு சரவணன் ஆகியோர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதாவுக்கும், ஏட்டு சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ரோந்து முடிந்து அடுத்தநாள் அதிகாலையில் சரவணன் வாங்கி வைத்து இருந்த வாழைப்பழத்தை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா எடுத்து சாப்பிட்டார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் ...

இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..

Posted: 12 Mar 2016 04:18 AM PST

டெல்லி: நெடுஞ்சாலைகளில் இனிமேல் அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதியளிக்கப் போவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். - இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. - தற்போது, பொருளாதார மண்டலங்களை இணைக்கும் ஹை-வேக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் ஆங்காங்கு இணைப்பு சாலைகள் வராது. எனவே வேகமாக வாகனங்களை இயக்கும்போது, இடையூறுகள் ...

சிரிப்போ சிரிப்பு - தொடர் பதிவு

Posted: 12 Mar 2016 04:10 AM PST

பொருத்தமான பெயர்.
-

சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Posted: 12 Mar 2016 03:32 AM PST

சமையல் கற்று வருகிறார், நமீதா..! - தன்னுடைய தேவைகளை தானே கவனித்துக் கொள்ளும் ஒரே நடிகை நமீதாதான். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த இவர், சென்னையில் ஓட்டல்களில் தங்குவதில்லை. வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். தனது காருக்கு டிரைவர் யாரையும் வைத்துக் கொள்வதில்லை. சென்னை நகருக்குள் அவரே கார்  ஓட்டுகிறார். இப்போது அவர்  தென்னிந்திய சமையல் கற்று வருகிறார். நமீதாவுக்கு இட்லி, சாம்பார், பொங்கல் ஆகியவை பிடித்த உணவு - தினத்தந்தி

நகைச்சுவை நடிகர் செல்வகுமார் விபத்தில் பலி

Posted: 12 Mar 2016 03:27 AM PST

- பிரபல நகைச்சுவை நடிகர் செல்வகுமார். இவர் ரமணா, அந்நியன், அலெக்ஸ் பாண்டியன், பூலோகம் உள்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தற்போது சூர்யாவுடன் 'சிங்கம்-3' படத்தில் நடித்து வந்தார். சென்னை தியாகராயநகர் சீனிவாச தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்தார். நேற்று  இரவு செல்வகுமார் தனது ஸ்கூட்டரில் அதே பகுதியில் உள்ள பர்கிட் ரோட்டில் சென்றுகொண்டு இருந்தார். ...

பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு அனுமதி அளித்த அரசு

Posted: 12 Mar 2016 03:21 AM PST

- ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும் கட்சி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், தனக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக ராணுவம் கடுமையாக தண்டனை கொடுத்ததாகவும் பெண்கள் கற்பழிக்கப் பட்டதாகவும் புகார் எழுந்தது. - ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டது அந்த அறிக்கையில் அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், மரங்களில் கட்டி தொங்கவிட்டும், ...

குஜராத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் கசிவு

Posted: 12 Mar 2016 03:10 AM PST

- காந்தி நகர், குஜராத் மாநிலம் காக்ரபரில் அணு மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அணு மின் உற்பத்தி நிலையத்தில் 220 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்கள் செயலில் உள்ளன. இந்த அணு மின் நிலையத்தின் ஒரு யூனிட்டில் உள்ள கூலண்ட் சிஸ்டம் என்று அழைக்கப்படும் குளிரிவிப்பானில் வெள்ளிக்கிழமை கசிவு ஏற்பட்டது. இருப்பினும், இந்த கசிவினால், அணுக்கதிரி வீச்சு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கசிவை தொடர்ந்து அணு மின் நிலையத்தின் ஒரு யூனிட் காலவரையின்றி மூடப்பட்டது. இது குறித்து ...

தெறி இசை வெளியீடு 20 ந்தேதி பிரமாண்டமாக நடக்கிறது

Posted: 12 Mar 2016 03:02 AM PST

- சென்னை அட்லி இயக்கத்தில், விஜய், எமி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது. - ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்திருக்கிறார். - தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி தெறி படம் வெளி வரவுள்ள நிலையில் அப்படத்தின் இறுதி கட்ட ...

நச்சுனு 4 கேள்வி?

Posted: 12 Mar 2016 02:34 AM PST

சி. விஜயாம்பாள், கட்டிகானப்பள்ளி: கறுப்பு நிறம் அமங்கலமானதா? - ஆம். காரணம், வெளிச்சம் ஞானத்தின் அடையாளம். இருட்டு அஞ்ஞானத்தின் அடையாளம். கருப்பு, சிகப்பு, வௌ்ளை இம்மூன்றும்தான் வண்ணங்களின் அடிப்படை. இந்த வண்ணங்கள் மூன்றும் மூன்று குணத்தைக் குறிக்கும். - கறுப்பு - தமோ குணம், சிவப்பு - ரஜோ குணம், வௌ்ளை - சத்துவ குணம். கறுப்பு - சாஸ்திரத்தில் கலியுகத்தின் அடையாளம் என குறிப்பிடப்படுகிறது. - சிவப்பு பூமியினுடைய இயக்கத்தின் அடையாளம். வௌ்ளை - பூர்வ ஞானத்தின், சுத்தத்தின் அடையாளம். ஒளி ...

பிறவாபெருநிலை என்பதும் மரணமில்லா பெருவாழ்வு என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது

Posted: 12 Mar 2016 02:18 AM PST

அருட்பெருஞ்சோதி என்பதை படர்க்கையாக ஒளியாக உணர்கிறீர்களா அல்லது ஒருநபராக உயர்திணையாக அறிகிறீர்களா இவ்விசயத்தில் வள்ளலார் சீடர்களுக்கு தெளிவில்லை? அடிப்படை குழப்பமே இங்குதான் ஆரம்பிக்கிறது வள்ளலார் அருட்பெருஞ்சோதியை படர்க்கை என்கிறாரா அல்லது நபர் என்கிறாரா ? படர்க்கை என்பதாக புரிந்துள்ளவர்களே நிறைய இருக்கிறார்கள் அவர் ஒரு நபர் என்பதும் உண்மை அவ்வளவுக்கவ்வளவு அனைத்திலும் விரவி நிற்கிற படர்க்கை என்பதும் உண்மை அவர் படர்க்கை என மட்டும் புரிந்திருந்தால் அதுவும் முழுமையல்ல அவர் ஒரு ...

நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா

Posted: 12 Mar 2016 12:30 AM PST

படம்: அழகிய தமிழ் மகன் இசை: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்: நா.முத்துக்குமார் பாடியவர்கள்: நரேஷ், மதுமிதா, உஜ்ஜயினி – ——————————- – நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா வளையப்பட்டி தவிலே தவிலே ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்னை மயக்குறியே மயக்குறியே நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா (வளையப்பட்டி தவிலே) உன் கண்கள் ரெண்டும் கல்யாணி உன் சிரிப்போ சிந்துபைரவி நீ ...

பழக்கம் - ஒரு பக்க கதை

Posted: 12 Mar 2016 12:05 AM PST

- காலை டிபனாக பொங்கலை எடுத்து சுவைத்த ராகவனின் முகம் சிவந்தது. ''எனக்கு இஞ்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல? இத்தனை நாளா இஞ்சி போடாமதானே இருந்தே? அப்புறம் ஏன் இன்னைக்குப் போட்டே?'' – பொங்கலைத் துப்பியபடி கேட்டான். – ''இதுவரைக்கும் சாப்பிடலை. இனிமே சாப்பிடுங்க!'' என்றபடி கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் சுசீலா. மதியம் பசியுடன் அமர்ந்த ராகவன், சாம்பாரில் முள்ளங்கி தெரிந்ததும், எரிச்சலானான். – ''ஏண்டி! எனக்கு முள்ளங்கி வாசனையே பிடிக்காதுனு தெரியுமில்ல?'' – போனில் கேட்டான். – ''மூக்கை மூடிக்கிட்டுச் ...

முடிவு - ஒரு பக்க கதை

Posted: 12 Mar 2016 12:02 AM PST

- தயக்கமாக வீட்டுக்குள் நுழைந்தான் அவன். ''சார், நான் இந்த தெருக் கோடியில இருக்குற ஆட்டோ டிரைவர். உங்க பொண்ணு ஒரு பையனோட சுத்தறாங்க... சந்தேகமா இருக்கு... சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்!'' என்றான். - தொழிலதிபர் கார்மேகம் முகம் கறுத்தது. பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே போனார். அடுத்த நாள், ''சார்! இன்னைக்கு அந்தப் பையனும் உங்க பெண்ணும் வர்ற சனிக்கிழமை மகாபலிபுரம் போறதா பேசிக்கிட்டாங்க. ஜாக்கிரதை சார்!'' - ஆட்டோ டிரைவர் சொல்லி விட்டுப் போனான். கார்மேகம் ரத்தம் கொதித்தது. - இப்படி ...

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd

Posted: 11 Mar 2016 11:59 PM PST

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...pfd

12 கதைகளின் தொகுப்பு இங்கே ! புன்னகை

DOWNLOAD

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)

Posted: 11 Mar 2016 11:56 PM PST

என்னுடைய கதைகளின் PDF  இங்கே ! புன்னகை

மனிதாபிமானம் !  

DOWNLOAD

டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !

பெண்களை வருத்தும் பிங்க் வரி

Posted: 11 Mar 2016 11:38 PM PST

- இங்கே மத்திய பட்ஜெட்டில் எது எதற்கெல்லாம் வரி போடுவார்கள் என பதைபதைத்தே நம் பிப்ரவரி கழிந்தது. அதே நேரம், உலகம் முழுவதும் பேசப்பட்ட ஹாட் டாபிக், 'பிங்க் வரி'. ஓட்டுரிமையில் துவங்கி லெக்கிங்ஸ் வரை பெண்ணுரிமைப் போராட்டங்கள் பல கட்டங்களைத் தாண்டியிருக்கின்றன. - இந்தப் பெண்கள் தினத்தில் தீப்பிடித்திருக்கும் சப்ஜெக்ட்தான் இந்த Pink Tax! அதென்ன பிங்க் வரி? இது அரசாங்கம் விதிக்கும் வரி அல்ல. ஆனால் பெண்ணாய்ப் பிறந்ததற்காகவே ஒவ்வொருவரும் கொடுத்தாக வேண்டிய தொகை. அதாவது, ஒரு ஆண் முடி ...

தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்!

Posted: 11 Mar 2016 11:22 PM PST

- "விண்மீனைக் கண்டு கண்டு கோடி கோடிப் பூக்கள் ஏங்கும் உன் கண்ணைக் கண்டு அந்த விண்மீன் ஏங்கும் " என ஹரிஹரன் பாடி நிறுத்த அடுத்த விநாடியில் "அஹஹஹஹ …" எனத் தொடரும் அந்தக் காந்தக் குரலால் காதல் வயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த "வெயில்" திரைப்படத்தின் "உருகுதே மருகுதே .." வில் உருகிப் போகாத இசைப் பிரியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

கூட்டணிக்கு வராத கட்சியினரை கண்டபடி திட்டிப் பேச …

Posted: 11 Mar 2016 09:24 PM PST

- ''மெக்கானிக்கல் டிப்ளமோ படித்த எங்கள் தலைவரால் மட்டுமே பழுதான அரசு எந்திரத்தை சரி செய்ய முடியும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்!'' – – அ.ரியாஸ், – —————————————– – அந்தக் கட்சில கோஷ்டிச் சண்டை ரொம்ப அதிகமாயிடுச்சா?'' – ''ஆமாம். கட்சி ஆபீசுக்குள்ள பதுங்கு குழியெல்லாம் வெட்டி வெச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்களேன்..!'' – – அஜித், – ———————————————– – ''அடுத்தபடியாக… கூட்டணிக்கு வராத கட்சியினரை கண்டபடி திட்டிப் பேச தலைவர் அவர்களை அழைக்கிறேன்!'' – – பெ.பாண்டியன், – ——————————————-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™