Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காங்கிரஸ் வருமானம் ரூ.1,687 கோடி:பா.ஜ.,வுக்கு கிடைத்தது ரூ.1,475 கோடி

Posted: 12 Mar 2016 10:14 AM PST

ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், மாநில மற்றும் தேசிய கட்சிகளின், 2010 - 2015ம் ஆண்டுக்கான வருமானம் குறித்த தகவல்களை சேகரித்து, ஜனநாயக சீர்திருத்த சங்கமும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், 2014 - 15ம் ஆண்டுக்கான, கட்சிகளின் வருமான விவரங்கள், முழுமையாக கிடைக்கவில்லை என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2010 - 15ம் ஆண்டில், காங்., - பா.ஜ., - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நீங்கலாக, நாடு தழுவிய அளவில், தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த ...

தமிழக அரசியலில் கூட்டணி குழப்பம் நீடிப்பு: இன்னும் ஒரு மாதம் 'சஸ்பென்ஸ்' தொடரும்

Posted: 12 Mar 2016 10:17 AM PST

தமிழக அரசியலில் கூட்டணி குழப்பம் நீடிக்கிறது. இன்னும் ஒரு மாத காலம், இது தொடர்பான, 'சஸ்பென்ஸ்' தொடரும் என, அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் மே, 16ம் தேதி நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஏப்., 22ல் தான் வேட்பு மனு தாக்கல் துவங்கும் என்பதால், அதற்கு இன்னும், ஒன்றரை மாத அவகாசம் உள்ளது. ஆனாலும், ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் துவக்கி விட்டன. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - த.மா.கா., - தே.மு.தி.க., - காங்., உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்தும், கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப ...

நாட்டின் பாதுகாப்பான நகரம் சென்னை: அமெரிக்க நிறுவன ஆய்வில் தகவல்

Posted: 12 Mar 2016 10:20 AM PST

புதுடில்லி:இந்திய நகரங்களில் பாதுகாப்பானதாக, சென்னை முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது;வாழ்க்கைத் தரத்தில், இந்திய அளவில் ஐதராபாத் நகரம், முதலிடத்தையும், சென்னை, நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக வைத்து செயல்படும், ஆலோசக நிறுவனமான, மெர்சர், வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு போன்ற அம்சங்களில், சிறந்து விளங்கும் உலக நாடுகளின் பல்வேறு நகரங்களை பட்டியலிட்டுள்ளது.இந்தியாவில், வாழ்க்கைத் தரம் சிறப்பாக உள்ள நகரங்கள் பட்டியலில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் முதலிடத்தை பெற்றுள்ளது. உலகளவில், இந்நகரம், 139வது ...

ஐ.எம்.எப்., சீர்திருத்தங்களை விரைவுபடுத்துங்க: டில்லி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 12 Mar 2016 10:22 AM PST

புதுடில்லி:''உலகளாவிய பொருளாதாரத்தில், மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், ஐ.எம்.எப்., எனப்படும், பன்னாட்டு நிதியம், சீர்திருத்தங்களை விரைவாக அமல்படுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.டில்லியில், பன்னாட்டு நிதிய மாநாடு, மூன்று நாள் நடக்கிறது. ஐ.எம்.எப்., அமைப்பின் தலைவராக, இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டுள்ள, கிறிஸ்டின் லகார்டே உள்ளிட்ட, பல மூத்த நிர்வாகிகள், இதில் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலகளாவிய அமைப்புகளிகளில், சீர்திருத்தங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்க வேண்டும். ஐ.எம்.எப்., போன்ற ...

மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் நிபந்தனை:புது பெயர் சூட்டவும் முடிவு

Posted: 12 Mar 2016 10:25 AM PST

தன் தலைமையில் அமைய உள்ள கூட்டணிக்கு, புதிய பெயர் சூட்ட உள்ளதாக, விஜயகாந்த் கூறியுள்ளதால், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிடும்' என்ற அறிவிப்பை, 10ம் தேதி, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். இதனால், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறும் என்ற, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
விஜயகாந்தின் இந்த நடவடிக்கையை, மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.அத்துடன், மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்தை தலைமை ...

ஸ்டாலினை முன்னிறுத்த இனியும் என்ன தயக்கம்?

Posted: 12 Mar 2016 10:28 AM PST

'தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சேராததால் ஏற்பட்டுள்ள தொய்வை, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் சரிசெய்ய முடியும்' என, தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.

சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது. இதனால், பெரிதும் ஏமாற்றம் அடைந்த கட்சியாக, தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க.,வை எதிர்த்து வெற்றி பெற, தே.மு.தி.க., கூட்டணி அவசியம் என எதிர்பார்த்திருந்த, இக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூட்டணி பலம் இல்லாமல், தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தி.மு.க.,வினர் மத்தியில் சோர்வும், கட்சியின் ...

விஜயகாந்த் முடிவால் கருணாநிதி 'அப்செட்': தேர்தல் அறிக்கை வெளியீடு தாமதம்

Posted: 12 Mar 2016 10:31 AM PST

விஜயகாந்த் முடிவால், கருணாநிதி அதிர்ச்சி அடைந்துள்ளதால், தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு தாமதமாகி வருகிறது. தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு பல தரப்பிலும், தி.மு.க., முயற்சித்தது. இதற்காக, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, ரகசியபேச்சுகள் மேற்கொள்ளப்பட்டன.

நம்பிக்கை :
கடந்த, 8ம் தேதி பேட்டியளித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'கூட்டணியில் தே.மு.தி.க., நிச்சயம் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்' என்று கூறினார்.இப்படி, தே.மு.தி.க., கூட்டணிக்காக தி.மு.க., தரப்பு ...

ஆளுங்கட்சியை எதிர்ப்பது மட்டும் தான் எதிர்க்கட்சியின் வேலையா?

Posted: 12 Mar 2016 10:35 AM PST

'அரசின் அறிவிப்புகள், மக்கள் நலனுக்கு எதிரானவை; விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஏழை, எளியவர்களின் நலன் சார்ந்த எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை; இது கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட். இதுவரை அறிவித்த அனைத்து திட்டங்களும், கானல் நீராவே உள்ளன; ஒரு திட்டம் கூட முழுமை பெறவில்லை' இவை, மாநில சட்டசபை மற்றும் பார்லிமென்ட்டில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளன்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊடகங்களுக்கு தந்த பேட்டியில் குறிப்பிட்டவை.முக்கிய மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு மற்றும் விவாதங்களின் போது சபையில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி ...

விமானப்படை வீராங்கனைகள் தாய்மை அடைய 4 ஆண்டுகள் தடை

Posted: 12 Mar 2016 10:44 AM PST

விமானப்படை வீராங்கனைகள் தாய்மை அடைய 4 ஆண்டுகள் தடை புதுடில்லி:இந்திய விமானப் படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மூன்று வீராங்கனைகளை, 'நான்கு ஆண்டுகளுக்கு தாய்மை அடைய வேண்டாம்' என, விமானப் படை கேட்டுக் கொண்டுள்ளது.இந்திய விமானப் படையில் முதல் முறையாக, மூன்று பெண் வீராங்கனைகள், ஜூன், 18 முதல் சேர்க்கப்பட உள்ளனர். பாவனா காந்த், மோகனா சிங் மற்றும் ஆவணி சதுர்வேதி ஆகிய மூன்று வீராங்கனைகளும், ஜூன் முதல், கர்நாடக மாநிலம் பிதர் என்னுமிடத்தில் பயிற்சி பெற உள்ளனர். ஓராண்டு பயிற்சிக்குப் பின், 2017 ஜூன் முதல் இவர்கள், போர் விமானங்களில்,விமானி அறைக்குள் ...

பார்லி.,யில் இனி ரகளை செய்தால் 'கல்தா!'

Posted: 12 Mar 2016 10:46 AM PST

புதுடில்லி:சபை நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் செயல்படும் எம்.பி.,க்களின் பதவியை பறிக்க வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

லோக்சபாவில் நேற்று, தனி நபர் மசோதாக்கள், தாக்கல் செய்யப்பட்டன. தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர், ஜெயதேவ் கல்லா தாக்கல் செய்த மசோதாவில், 'சபை நடவடிக்கைகளை முடக்கும் வகையில், ரகளையில் ஈடுபடும் எம்.பி.,க்களின் குழுவுக்கு, தினப்படியை ரத்து செய்வதுடன், அவர்களின் பதவியையும் பறிக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.
பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, தாக்கல் செய்த மசோதாவில்,'விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ...

மத்திய அரசு கட்டுப்பாட்டில் தனி சிறைகள் வருமா?

Posted: 12 Mar 2016 01:13 PM PST

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் விடுதலை பிரச்னையால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தனி சிறைகளை அமைக்க, மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில், விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த, நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின், தண்டனை குறைப்பின் மூலம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகள், கருணை அடிப்படையில், தங்களை விடுதலை செய்ய கோரி, பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கட்சி மற்றும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™