Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஹெலிகாப்டரில் பறந்து ஐதராபாத் நகரை ஏழைகள் சுற்றி பார்க்கும் வசதி: தெலுங்கானா அரசு ஏற்பாடு

Posted: 01 Mar 2016 09:39 PM PST

தெலுங்கானாவில் முதல்– மந்திரி சந்திரசேகரராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ்.அரசின் சுற்றுலா துறை 'ஹெலிடூரிசம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி ஏழை மக்களும் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனில் தஞ்சம்: லலித்மோடியை இந்தியா கொண்டு வர மும்பை கோர்ட்டு அனுமதி

Posted: 01 Mar 2016 09:29 PM PST

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி மீது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சட்ட விரோத பண பரிமாற்றம், அன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. அவர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் இரு விசாரணை அமைப்புகளும் அறிவித்தன.

சந்திரபாபு நாயுடுவுக்கு டாக்டர் பட்டம் அறிவித்த அமெரிக்க பல்கலைக்கழகம் மூடப்பட்டது

Posted: 01 Mar 2016 09:14 PM PST

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ''சிகாகோ ஸ்டேட் யூனிவர் சிட்டி'' என்ற பெயரில் பல்கலைக் கழகம் செயல்பட்டு வந்தது. இந்த பல்கலைக்கழகம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 18–ந்தேதி ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது.

சஸ்பெண்டு விசாரணை தாமதம்: நடிகை ரோஜா புதிய வழக்கு தாக்கல்

Posted: 01 Mar 2016 08:58 PM PST

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக சபாநாயகர் சிவபிரசாத்ராவ் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

ஸ்ரீகாளஹஸ்தியில் இன்று கண்ணப்பர் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது

Posted: 01 Mar 2016 08:56 PM PST

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி இன்று மாலை 3.30 மணியளவில் உற்சவர் கண்ணப்பரை அலங்கரித்து சிவன் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து கண்ணப்பர் மலை வரை மங்கள வாத்தியங்களுடன்,

9–ந்தேதி சூரிய கிரகணம்: திருப்பதியில் 13 மணி நேரம் தரிசனம் ரத்து

Posted: 01 Mar 2016 08:46 PM PST

9–ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வதை யொட்டி திருப்பதியில் 13 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வருகிற 9–ந்தேதி அதிகாலை 5.47 மணியில் இருந்து காலை 9.08 மணிவரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8–ந்தேதி இரவு 8.30 மணியில் இருந்து 9–ந்

சபரிமலையில் 14–ந்தேதி மாசி திருவிழா கொடியேற்றம்: 23–ந்தேதி பம்பையில் ஆராட்டு

Posted: 01 Mar 2016 08:21 PM PST

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் பிரசித்திப் பெற்றது. இந்த பூஜைகளின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.

கேரளாவில் 12 வயது சிறுமிகளை கற்பழித்த போதகருக்கு 40 ஆண்டு ஜெயில்: கோர்ட்டு உத்தரவு

Posted: 01 Mar 2016 08:01 PM PST

கேரள மாநிலம் கோட்டயம், கருக்கச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சனல் கே ஜேம்ஸ் (வயது 37), கிறிஸ்தவ போதகராக உள்ளார். இவர், அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கி இருந்ததோடு அருகில் உள்ள குடியிருப்புக்கு சென்று அடிக்கடி ஊழியம் செய்து வந்தார். கடந்த 2014–ம் ஆண்டு குடியிருப்புக்கு சென்றபோது, ஒரு குடும்பத்தினருடன்

விலை உயர்ந்த கைக்கெடிகார விவகாரம்: சித்தராமையாவுக்கு எதிராக ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்

Posted: 01 Mar 2016 07:46 PM PST

முதல்-மந்திரி சித்தராமையாவிடம் ரூ.70 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த கைக்கெடிகாரம் இருப்பதாக ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டினார். ஆனால் அந்த கைக்கெடிகாரம் துபாயில் வசிக்கும் தனது நண்பர் பரிசாக அளித்தது என்று முதல்-மந்திரி

சாலை விபத்துகளை தடுக்க வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்

Posted: 01 Mar 2016 07:30 PM PST

இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதற்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம் ஆகும். எனவே வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த மத்திய அரசு அரசாணைப்படி போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கைக்கெடிகார விவகாரத்தில் உண்மையை மூடி மறைக்க சித்தராமையா முயற்சிக்கிறார்: ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு

Posted: 01 Mar 2016 07:11 PM PST

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று எதிர்க்கட்சி (பா.ஜனதா) தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபை இன்று (அதாவது நேற்று) 2-வது நாளாக கூடியதும் முதல்-மந்திரி சித்தராமையாவின் விலை உயர்ந்த கைக்கெடிகாரம் குறித்து

இஸ்ரத் ஜகான் வழக்கு: திருத்தப்பட்ட மனுவில் நிர்ப்பந்தத்தால் கையெழுத்திட்டேன் - மேலும் ஒரு அதிகாரி திடுக்கிடும் தகவல்

Posted: 01 Mar 2016 06:41 PM PST

நரேந்திர மோடியை கொல்ல வந்ததாக சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜகான் தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண மனுவை, அப்போதைய காங்கிரஸ் அரசு திருத்தி, இரண்டாவது மனுவை தாக்கல் செய்ததாக முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.பிள்ளை கடந்த வாரம்

கிளர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதாக புகார்: எந்த மதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என மத்திய மந்திரி விளக்கம்

Posted: 01 Mar 2016 06:30 PM PST

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் விசுவ இந்து பரிஷத் தலைவர் அருண் மஹார் வேறு மதத்தை சேர்ந்த சில இளைஞர்களால் கொல்லப்பட்டார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை நடந்த இரங்கல் கூட்டத்தில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ராம்சங்கர் கதேரியா, பாபுலால் எம்.பி. ஆகியோர்

வெளிநாடுகளில் இருந்து எடுத்து வரும் ஆள் இல்லாத குட்டி விமானங்கள் பற்றி கட்டாயம் தெரிவிக்க வேண்டும்: மத்திய அரசு

Posted: 01 Mar 2016 06:04 PM PST

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளிநாட்டில் இருந்து பயணிகள் எடுத்து வரும் பல்வேறு பொருட்களுக்கு சலுகையும், சிலவற்றுக்கு வரியும் விதிக்கப்பட்டு உள்ளது. அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து ஆள் இல்லாத குட்டி

தொழிலாளர் வைப்பு நிதி தொகைக்கு விதிக்கப்பட்ட வரி வாபஸ் ஆகிறது: கடும் எதிர்ப்பால் மத்திய அரசு முடிவு

Posted: 01 Mar 2016 05:59 PM PST

மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) பற்றி குறிப்பிடப்பட்டதில், 'பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர் ஒருவர் இந்த நிதியில் இருந்து பணத்தை எடுக்கும்போது 40 சதவீத தொகைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும், மீதமுள்ள 60 சதவீத தொகைக்கு வரி விதிப்பு உண்டு, இது

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

Posted: 01 Mar 2016 05:03 PM PST

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி உரையை தொடர்ந்து ரெயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாதம் பொருளாதார வளர்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது: சுஷ்மா சுவராஜ் கருத்து

Posted: 01 Mar 2016 04:44 PM PST

கருத்துக்கள் மூலமாக பரவி வரும் பயங்கரவாதமும், வன்முறையும், அதேபோல் பிராந்தியங்களுக்கு இடையிலான மோதலும் தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

அரை நிர்வாணத்துடன் ஆள் சேர்ப்பு சர்ச்சை: இராணுவ தலைமையிடம் விளக்கம் கோருகிறார் மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர்

Posted: 01 Mar 2016 03:53 PM PST

இராணுவ ஆள் சேர்ப்பு விவகாரத்தால் எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராணுவத்திடம் பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் அண்மையில்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் 10 கிராம மக்கள் கொலை: உளவாளிகள் என கருதி கொலை செய்ததாக போலீசார் தகவல்

Posted: 01 Mar 2016 02:14 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த நாராயன்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் பொதுமக்கள் 10 பேரை மாவோயிஸ்டுகள் கொலை செய்துள்ளனர். உளவாளிகள் என்று கருதி மாவோயிஸ்டுகள் இந்த கொலையை

தீவிரவாதிகளிடம் காங்கிரஸ் கட்சி மென்மையாக நடந்து கொள்வது தெரிந்த விஷயம்தான்: வெங்கையா நாயுடு

Posted: 01 Mar 2016 01:35 PM PST

கடந்த 2009-ம் ஆண்டில், தேச பாதுகாப்பு விஷயத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எவ்வளவு சமரசம் செய்திருக்கிறது என்பதை, முன்னாள் அதிகாரி ஒருவர் வெளியிட்ட அசாதாரண மற்றும் அதிர்ச்சியூட்டும் கருத்து மூலம் இந்த தேசம் சமீபத்தில் கண்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™