Tamil Star |
| எதற்காக கருணைக்கிழங்கு சாப்பிட வேண்டும்? Posted: 01 Mar 2016 06:21 PM PST
கருணைக் கிழங்கு.சத்துக்கள் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன. மருத்துவ பயன்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும். பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம், கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து காக்கிறது. ஆற்றலை அதிகரிக்கிறது. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும் மூல நோயை குணப்படுத்தும், ஆசன வாயிலில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிடவும், நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும். உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது நல்லது. இதன் சுவை வீரியமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும். குறிப்பு மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இந்த நோயின் தாக்கத்தை ஏற்படுத்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வெளிப்பாடு மோசமாக இருக்கும். The post எதற்காக கருணைக்கிழங்கு சாப்பிட வேண்டும்? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொழுப்பை குறைக்கும் “மாதுளம் சட்னி” Posted: 01 Mar 2016 06:17 PM PST
ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. என்றென்றும் இளமையாக இருக்கவும், உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் சிறந்த பங்கினை ஆற்றுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. தினமும் ஒரு கப் மாதுளம்பழச்சாறு குடித்து வர 15 நாட்களில் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரிக்கிறது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை பிரச்னை போன்றவை குணமாக்குகிறது. இத்தகைய பல்வேறான பலன்கள் கொண்ட மாதுளம் பழ முத்துகளை கொண்டு சட்னி செய்து சாப்பிடலாம். செய்முறை கடாயை அடுப்பில் வைத்து சூடானவுடன் புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும். நன்கு வதங்கியபின், சிறிது நேரம் ஆறவைத்து அதனுடன் மாதுளம் பழ முத்துகள், தேவையான அளவு உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையான சட்னி தயார். The post கொழுப்பை குறைக்கும் "மாதுளம் சட்னி" appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மூட்டுவலி, முதுகு தண்டு வலி. மூலநோய் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் அன்றாடம் கருணைக்கிழங்கை சேர்த்து வந்தால் நன்மை கிடைக்கும்.
"சூப்பர் புரூட்" என்றழைக்கப்படும் மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது.