மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பு: கலாபவன்மணியின் உடல் உறுப்புகள் மீண்டும் ரசாயன பரிசோதனை
- மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார்: கருத்து கணிப்பில் தகவல்
- திருப்பதியில் போலி போலீசார் 5 பேர் கைது
- ஐதராபாத்தில் ரெயிலின் ஏ.சி. பெட்டி எரிந்து நாசம்
- கேரள கோவில் விழாவில் மதம்பிடித்த யானை மிதித்து பாகன் பலி
- இட ஒதுக்கீட்டு வழக்கு ஏப்ரல் 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- ஏப்ரல் 1-ந்தேதி முதல் செயல்படாத இ.பி.எப். சந்தாதாரருக்கும் வட்டி வழங்க வருங்கால வைப்பு நிதி வாரியம் முடிவு
- ஜெயலலிதா பற்றி பியூஷ் கோயல் தெரிவித்த கருத்து உண்மைதான்: சென்னையில் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி
- சொத்துக்குவிப்பு வழக்கு: கட்டிடங்கள் குறித்த விவரங்களுடன் புதிய பட்டியல் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- உத்தரகாண்ட் விவகாரம்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்து வைத்தது மத்திய அரசு
- பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.5,050 கோடி கூடுதல் மூலதனம் மத்திய அரசு வழங்குகிறது
- ஜனவரி இறுதி நிலவரம்: தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 104 கோடி
- உடுமலை சங்கர் கொலை- கவுசல்யாவுக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் பேட்டி
- நகைகள் மீதான கலால் வரிக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம்: ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்தல்
- பாகிஸ்தானில் கைதான இந்திய உளவாளியிடம் சித்ரவதை செய்து வாக்குமூலம்: இந்தியா குற்றச்சாட்டு
- ஐதராபாத் பல்கலைக் கழக விவகாரம்: சிறையில் இருந்து 25 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் விடுதலை
- 3 நாடுகள் பயணம்: முதற்கட்டமாக பெல்ஜியம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல்காந்தி தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள்: பா.ஜ.க., சாடல்
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை
- தேர்தல் வாக்குப்பதிவு நாட்களில் விடுமுறை: மேற்குவங்க அரசு உத்தரவு
| மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பு: கலாபவன்மணியின் உடல் உறுப்புகள் மீண்டும் ரசாயன பரிசோதனை Posted: 29 Mar 2016 11:03 PM PDT பிரபல நடிகர் கலாபவன் மணி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே பிரேத பரிசோதனை அறிக்கை, கலாபவன்மணியின் முக்கிய உடல் |
| மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார்: கருத்து கணிப்பில் தகவல் Posted: 29 Mar 2016 10:39 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 4–ந்தேதி தொடங்கி மே மாதம் வரை 6 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ்–இடதுசாரிகள் கூட்டணி இடையே மும் முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. |
| திருப்பதியில் போலி போலீசார் 5 பேர் கைது Posted: 29 Mar 2016 10:33 PM PDT திருப்பதி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி கிருஷ்ணா தலைமையில் திருச்சானூர் சப்–இன்ஸ்பெக்டர் சுரேந்திர நாயுடு மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சைதன்யபுரம் என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த |
| ஐதராபாத்தில் ரெயிலின் ஏ.சி. பெட்டி எரிந்து நாசம் Posted: 29 Mar 2016 10:30 PM PDT ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் ஏ.சி. பெட்டி முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது. இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் கடுமையாக போராடி இதர பெட்டிகளுக்கும் பரவாத வகையில் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். |
| கேரள கோவில் விழாவில் மதம்பிடித்த யானை மிதித்து பாகன் பலி Posted: 29 Mar 2016 09:17 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள பெருஞ்சல்மன்னா என்ற இடத்தில் வடக்கன்நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கணபதி என்ற யானை வளர்க்கப்படுகிறது. இந்த யானையின் பாகனாக கோட்டக்கல் பகுதியை சேர்ந்த அனில் குமார் |
| இட ஒதுக்கீட்டு வழக்கு ஏப்ரல் 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 29 Mar 2016 08:25 PM PDT தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். காயத்ரி உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் |
| Posted: 29 Mar 2016 08:03 PM PDT தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எப்.) தொடர்ந்து 36 மாதங்கள் மாத சந்தா செலுத்தாமல் அப்படியே விட்டு விட்டால், அந்த கணக்கு செயல்படாத இ.பி.எப். கணக்கு என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட கணக்குகளில் ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சந்தா தொகை சேர்ந்துள்ளது. |
| ஜெயலலிதா பற்றி பியூஷ் கோயல் தெரிவித்த கருத்து உண்மைதான்: சென்னையில் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி Posted: 29 Mar 2016 07:54 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாளை மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நான் சென்னை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு செல்கிறேன். தமிழக சட்டப்பேரவை |
| Posted: 29 Mar 2016 07:50 PM PDT சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. |
| உத்தரகாண்ட் விவகாரம்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்து வைத்தது மத்திய அரசு Posted: 29 Mar 2016 07:44 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு காரணங்களுக்காக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன் கூட்டியே மத்திய அரசு முடித்து வைத்துள்ளது. |
| பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.5,050 கோடி கூடுதல் மூலதனம் மத்திய அரசு வழங்குகிறது Posted: 29 Mar 2016 07:42 PM PDT சில பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு விரைவில் ரூ.5,050 கோடி கூடுதல் மூலதனம் வழங்க உள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், விஜயா வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் |
| ஜனவரி இறுதி நிலவரம்: தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 104 கோடி Posted: 29 Mar 2016 07:37 PM PDT நம் நாட்டில், ஜனவரி மாத இறுதியில், தொலைபேசி இணைப்புகளின் (லேண்டுலைன்+செல்போன்) மொத்த எண்ணிக்கை 104 கோடியை தாண்டியுள்ளது. அம்மாதத்தில் நாடு முழுவதுமாக மொத்தம் 70 லட்சம் புதிய செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. |
| Posted: 29 Mar 2016 06:37 PM PDT தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- உடுமலைப்பேட்டையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டது, அவரது மனைவி கவுசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஆகியவை குறித்த விரிவான அறிக்கை திருப்பூரில் இருந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் |
| நகைகள் மீதான கலால் வரிக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம்: ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்தல் Posted: 29 Mar 2016 05:17 PM PDT மத்திய அரசு, தங்க நகை மீது புதியதாக விதித்துள்ள 1 சதவீத கலால் வரியை ரத்து செய்யக்கோரி இந்தியா முழுவதும் தங்க நகை நிறுவன உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. |
| பாகிஸ்தானில் கைதான இந்திய உளவாளியிடம் சித்ரவதை செய்து வாக்குமூலம்: இந்தியா குற்றச்சாட்டு Posted: 29 Mar 2016 03:57 PM PDT இந்திய உளவாளி என்று பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளவர் அளித்துள்ள வாக்குமூலத்திற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வீடியோவில் பேசியர்வர் மிகவும் சித்ரவதை செய்யப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஐதராபாத் பல்கலைக் கழக விவகாரம்: சிறையில் இருந்து 25 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் விடுதலை Posted: 29 Mar 2016 02:46 PM PDT ஐதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களாக விடுப்பில் இருந்த துணை வேந்தர் அப்பாராவ் இம்மாதம் 22-ம் தேதி மீண்டும் பொறுப்பேற்க பல்கலைக் |
| 3 நாடுகள் பயணம்: முதற்கட்டமாக பெல்ஜியம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி Posted: 29 Mar 2016 01:24 PM PDT 3 நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம் புறப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகள் பயணத்தை மேற்கொள்கிறார். முதலில் அவர் பெல்ஜியம் |
| காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல்காந்தி தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள்: பா.ஜ.க., சாடல் Posted: 29 Mar 2016 12:43 PM PDT காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தியின் தலைமை மீது அக்கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று பா.ஜ.க., கூறியுள்ளது. பா.ஜ.க., தேசிய செயலாளர் ஷிரிகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் இது |
| பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை Posted: 29 Mar 2016 10:54 AM PDT பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி மார்ச் 16-ம் தேதி வரையில் நடைபெற்றது. தொடரின் 2-வது அமர்வு ஏப்ரல் 25-ம் முதல் மே-13 வரையில் நடைபெறும் என்று |
| தேர்தல் வாக்குப்பதிவு நாட்களில் விடுமுறை: மேற்குவங்க அரசு உத்தரவு Posted: 29 Mar 2016 10:03 AM PDT மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 4, 11, 17, 21, 25, 30 மற்றும் மே 5–ந்தேதிகளில் 6 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ்– இடதுசாரி கூட்டணி ஆகியவற்றுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |