Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வீடு ஒன்றில் இருந்து நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

Posted: 29 Mar 2016 08:33 PM PDT

gv

gvஒன்ராறியோவின் பிக்கரிங் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக டூர்ஹாம் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் இறந்து கிடந்ததை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

72 வயதான குறித்த நபர் அவரின் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை காவல்த்துறையினர் மீட்டுள்ளதுடன், அவர் மருத்துவப் பிரச்சினைகளை எதிநோக்கியிருந்தார் என அறியப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நபரின் மரணம் சந்தேகத்திற்கு இடமானது அல்ல என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த முதியவரின் வீட்டில் இருந்து ஏறத்தாழ 500 துப்பாக்கிகளும், ஆயிரக்கணக்கான தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post வீடு ஒன்றில் இருந்து நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

விமான விபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் உயிரிழப்பு

Posted: 29 Mar 2016 08:31 PM PDT

Jean_

Jean_முன்னாள் லிபரல் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த Jean Lapierr விமான விபத்தொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவருடன் சென்ற அவரின் மனைவி மற்றும் மூன்று சகோதரர்களும், இரண்டு விமான ஓட்டி உள்ளிட்ட இரண்டு பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கியூபெக்கில் அவரின் தந்தையாரின் மரணச்சடங்கில் பங்குபற்ற சென்றிருந்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த ஏழு பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், ஏழாவது நபர் மார்ரடைப்பின் காரணமான பின்னா உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரழந்த Jean Lapierr, வரின் மனைவி Beaulieu சகோதரர்களாக Marc மற்றும் Louis, அவரின் சகோதரி Martine Lapierre மற்றும் விமான ஓட்டி Pascal Gosselin பணியாளர் Fabrice Labourel ஆகியோரின் உடல்களை செவ்வாய்க்கிழமை இரவு மரணவிசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்குள்ளானது Mitsubishi turboprop விமானம் என்றும், குறித்த விமானம் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானது என நம்புபவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கனடா போக்குவரத்துப் பாதுகாப்புச் சபை விபத்துத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சம்பவ இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது.

விபத்து இடம்பெற்ற நாளில் கனடா சுற்றுச் சூழல் அமைப்பு கடும் காற்று வீசும் என்ற எச்சரிக்கையினை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

59 வயதான Jean Lapierr நேற்று முன்தினம் வெளிட்டிருந்த டுவிட்டர் குறிப்பில், தமது தந்தை Raymond C. Lapierre நீண்டகாலமாக Parkinson நோயுடன் போராடி வந்த நிலையில் காலமாகிவிட்டார் என்று தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post விமான விபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாகனம் மோதி பெண் பாதசாரி பலி

Posted: 29 Mar 2016 08:44 AM PDT

police_line_-_12012015

police_line_-_12012015மிசிசாக பாகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Dundas வீதி, Cawthra வீதிப் பகுதியில், நேற்று இரவு பத்து மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நடந்து சென்றுகொண்டிருந்த பெண் பாதசாரி ஒருவரை வாகனம் ஒன்று மோதியதையும், அதில் அந்த பாதசாரி
உயிரிழந்துள்ளதனையும் பீல் பிராந்திய காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் பெயர் வயது உள்ளிட்ட விபரங்களும் காவல்த்துறையினரால் உடனடியாக வெளியிடப்படவில்லை.police_line_-_12012015

விபத்தினை தொடர்ந்து டண்டாஸ் வீதியில் குறித்த அந்த பகுதி ஊடாக போக்குவரத்துக்களை தடை செய்த காவல்த்துறையினர், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

The post வாகனம் மோதி பெண் பாதசாரி பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடியப் பிரதமர் இன்று கல்கரிக்கு பயணம்

Posted: 29 Mar 2016 08:36 AM PDT

justin_trudeau__-_20160115

justin_trudeau__-_20160115கனேடியப் பிரதமர் இன்று கல்கரிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

EI எனப்படும் பணியாளர் காப்புறுதி தொடர்பிலான கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காகவே அவரின் இந்த கல்காரிப் பயணம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கரியில் இன்று நடைபெறும் வட்டமேசை மாநாட்டில் பிரதமர் பங்குபற்றவுள்ளார் என்றும், அதன் பின்னர் அல்பேர்ட்டா தொழில்நுட்ப கல்லூரிக்கும் அவர் விஜயம் செய்வார் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலையற்ற மக்கள் தொகையைக் கொண்ட 12 பிராந்தியங்களைத் தெரிவு செய்து, அங்கேயே முதற்கட்டமாக இந்த பணியாளர் காப்புறுதித் திட்டத்தின் அனுகூலங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.justin_trudeau__-_20160115

இந்த நிலையில் பிரதமரின் இன்றைய கல்கரிப் பயணத்தின் போது, பணியாளர் காப்புறுத்தித் திட்டத்தினை நாட்டின் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் மற்றும் எண்ணெய்வள அகழ்வினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகள் வரவு செலவுத் திட்டத்தில் தவறவிடப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கனேடியப் பிரதமர் இன்று கல்கரிக்கு பயணம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™