Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தங்க வைர நகைக்கடைகள் மேலும் மூன்று நாட்களுக்கு அடைப்பு

Posted:

தங்க வைர நகைக்கடைகள் மேலும் மூன்று நாட்களுக்கு அடைக்கப்படும் என்று, தங்க நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் தெரிவித்துள்ளார்.


Read more ...

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை; தேர்தல் நாடகமாக முடியக் கூடாது!

Posted:

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துவிட்டதாக மாநில தலைமை செயலாளார் கே.ஞானதேசிகன் அண்மையில் அறிவித்திருக்கின்றார். குறித்த விடயம் தொடர்பில் மத்திய உள்துறைச் செயலாளருக்கு அவர் கடிதமொன்றையும் எழுதியிருக்கின்றார். 

சுமார் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரினையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சிவில் சமூக அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலத்தில் அவர்களின் நடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் 14 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டு வந்த சம்பவங்கள் இந்திய நீதித்துறை வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. அதனை முன்னிறுத்தியே, குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், ஏழு பேரின் விடுதலை விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக தமிழக அரசியல் கட்சிகளும், இந்தியத் தேசியக் கட்சிகளும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்திருக்கின்றன. மு.கருணாநிதி தலைமையிலான திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்திருந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், ஏழு பேரின் விடுதலை தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அப்போது அதனை எதிர்த்த மு.கருணாநிதி, தற்போது அவர்களின் விடுதலை ஆதரிக்கின்றார். அப்போது, மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசோடு இணைந்து கூட்டாட்சி நடத்திக் கொண்டிருந்தது திமுக. ஏழு பேரின் விடுதலையை சாத்தியமாக்கினால், தன்னுடைய ஆட்சிக்கு காங்கிரஸினால் பாதிப்பு ஏற்படும் என்றே அப்போது மு.கருணாநிதி மறுத்திருந்தார்.

அதன் பின்னரான காலத்தில் ஈழமும் - அதன் இறுதிப் போராட்டக் கணங்களும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலித்து திமுக, 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை இழந்தது. அதற்கு சிலகாலத்துக்கு முன்னர் காங்கிரஸூடனான கூட்டணியை முறித்துக் கொண்டிருந்தது.

இதன்பின்னர், 2014ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களைவைத் தேர்தல் காட்சிகள் அரங்கேறிய போது, ஏழு பேரின் விடுதலையை முன்வைத்து ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பெருபெற்றி பெற்றது. குறிப்பாக, மாநிலங்களவைத் தேர்தலுக்கு சில காலத்துக்கு முன்னர், பேரறிவாளன் உள்ளிட்டவர்களை தமிழக அரசு விடுவிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. அதற்கான பதிலை மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் அறிவிக்காவிடில், உடனடியாக ஏழு பேரவையும் விடுதலை செய்யப் போவதாக அப்போது தமிழக அரசு அறிவித்தது.

இந்த விடயத்தினை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அதன்பின்னர், தமிழக அரசுக்கு ஏழு பேரவையும் விடுதலை செய்யும் அதிகாரம் தொடர்பில் பிரச்சினைகள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. அத்தோடு, அந்த விடயத்தினை தமிழக அரசு கைவிட்டுவிட்டது. மாநிலங்களவைத் தேர்தலும் முடிந்து போனது. ஏழு பேரின் விடுதலை விடயம் தமிழக மக்களின் மனங்களை வெல்வதற்கு பெரும் காரணமாக இருந்தது. அதில், அதிமுக சில காய்களை நகர்த்தி வெற்றி கொண்டிருந்தது.  தற்போதும் அப்படியானதொரு முனைப்புக்களின் போக்கிலான அறிவித்தலையாக, ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசு விடுத்திருக்கின்றது என்று கொள்ள வேண்டியிருக்கின்றது.

இன்னும் இரு மாதங்களில் தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசு மீது மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவான அதிருப்திகள் எழுந்திருக்கின்றன. ஊடகங்களும், அதிமுக மீது கூடியளவான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில், ஏழு பேரின் விடுதலை விடயத்தினூடு மீண்டும் தமிழக மக்களை வெற்றி கொள்ளலாம் என்று கணக்கும் போட்டிருக்கின்றதாக அதிமுக என்கிற எண்ணப்பாடு எழும். அது, இயல்பானது.

ஏழு பேரின் விடுதலை விடயம், வாக்கு அரசியல் தளத்திலிருந்து அகற்றப்பட்டு உண்மையான அக்கறையுள்ளவர்களின் கைகளுக்கு செல்ல வேண்டும். அப்போதுதான், நீண்டகாலமாக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்து விட்டவர்களுக்கான நீதி கிடைக்கும். அது, விரைவில் சாத்தியமாக வேண்டும். மனிதம் காக்கப்பட வேண்டும்!


Read more ...

உலகின் மிக நீண்ட வான் பயனத்தை நிறைவு செய்தது எமிரேட்ஸ் இன் ஏர்பஸ் விமானம்!

Posted:

17 மணித்தியாலங்கள், 15 நிமிடங்கள் நேரத்தில் சுமார் 14 000 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக எங்கும் நிறுத்தாது வானில் பயணித்து உலகில் மிக நீண்ட தூர நொன்ஸ்டாப் பயணத்தை நிகழ்த்தி எமிரேட்ஸ் விமானம் சாதனை படைத்துள்ளது.


Read more ...

பூமியில் மிக வேகமாக அருகி வரும் உயிரினங்களின் வரிசையில் யானைகள்?:அதிர்ச்சித் தகவல்

Posted:

நமது பூமியில் மிக வேகமாக அருகி வரும் உயிரினங்களான பண்டா கரடிகள், டால்பின்கள் வரிசையில் யானைகளும் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நியூசிலாந்தில் அந்நாட்டுக் கொடியின் வடிவத்தை மாற்றுவது குறித்த வாக்கெடுப்பு!

Posted:

புதன்கிழமை நியூசிலாந்தில் அந்நாட்டுக் கொடியின் வடிவத்தை அப்படியே வைத்திருப்பதா அல்லது மாற்றம் செய்வதா என்பது குறித்த வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.


Read more ...

காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுவருவச் செய்ய பாகிஸ்தான் சுரங்க பாதை

Posted:

காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுவருவச் செய்ய பாகிஸ்தானிலிருந்து சுரங்க பாதை ஒன்றை இந்திய வீரர்கள் கண்டறிந்து உள்ளனர்.


Read more ...

விஜய்க்கு இப்படியா சோதனை வரணும்?

Posted:

‘கவனமா கால் வைச்சு நடந்தாலும் வழியெல்லாம் வாழைப்பழத் தோலை வீசுவாங்க போலிருக்கே’ என்று பேரதிர்ச்சியாகிக் கிடக்கிறார் விஜய். இந்த எலக்ஷனுக்கு சும்மாயிருப்பதே உத்தமம் என்கிற முடிவுக்கு விஜய் வந்து அநேக நாளாச்சு.


Read more ...

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா காலமானார்!

Posted:

நாடாளுமன்றத்தின் மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா இன்று காலமானார். 


Read more ...

நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய விடயங்களை நரேந்திர மோடி முன்வைப்பு!

Posted:

நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய விடயங்களை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். 


Read more ...

உத்திரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு!

Posted:

உத்திரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

நீதிமன்றத்துக்கு எட்டாத தொலைவில் பிசிசிஐ உள்ளதா?: நீதிபதிகள்

Posted:

நீதிமன்றத்துக்கு எட்டாத தொலைவில் பிசிசிஐ உள்ளதா என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


Read more ...

நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி, ராகுல் காந்தியிடையே கடும் தர்க்கம்!

Posted:

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே வார்த்தை யுத்தங்கள் வலுத்து உள்ளது. 


Read more ...

தமிழகம்- புதுவையில் இன்று தேர்வுகள் தொடக்கம்!

Posted:

தமிழகம்- புதுவையில் இன்று +2 தேர்வுகள் தொடங்கி உள்ளது.  


Read more ...

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் திகதி இன்று மாலை அறிவிப்பு

Posted:

தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகளை இன்று மாலை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவிக்க உள்ளார்.


Read more ...

திருகோணமலையில் 756 ஹெக்டேயர் பரப்பளவு காணி துறைமுகங்கள் அதிகார சபையினால் விடுவிப்பு!

Posted:

திருகோணமலையில் துறைமுகங்கள் அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டிருந்த 756 ஹெக்டேயர் பரப்பளவு காணி விடுவிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

நல்லிணக்கம் தெற்கிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டில் தொடர்ந்து வந்த யுத்தத்தினால் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற போதிலும், நல்லிணக்கம் என்பது தெற்கிலுள்ள மக்களிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சுதந்திரக் கட்சி மறுசீரமைப்புக்காக அறுவர் அடங்கிய குழு மைத்திரியால் நியமனம்!

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களைக் கையாள்வதற்காக அறுவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். 


Read more ...

எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் முக்கியஸ்தர் என்று கூறப்படும் அன்ரனி எமில்காந்தனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சட்டமா அதிபரின் அறிக்கை அவசியம்; காத்திருக்கின்றோம்: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சட்டமா அதிபரின் அறிக்கை அவசியம் என்று தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அந்த அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™