Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சஸ்பெண்டு வழக்கு: நடிகை ரோஜா அப்பீல் மனு தள்ளுபடி

Posted: 03 Mar 2016 10:34 PM PST

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக சபாநாயகர் சிவபிரசாத்ராவ் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சங்மா மரணம்: மக்களவை 8-ம் தேதிவரை ஒத்திவைப்பு

Posted: 03 Mar 2016 10:29 PM PST

பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சங்மா இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. பி. ஏ. சங்மா என்றழைக்கப்படும் பூர்னோ அகிடோக் சங்மா, மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் 1-9-1947 அன்று பிறந்தார். மேகாலயாவில் உள்ள புனித

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

Posted: 03 Mar 2016 10:19 PM PST

திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் ஸ்ரீவாரி மேட்டு மலைப்பாதை வழியாக நடந்து செல்வது உண்டு. நேற்று ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக மலையேறிய போது 200–வது படி அருகே கிழக்கு திசை பாறை ஒன்றில் சிறுத்தை புலி நின்று கொண்டு இருந்தது.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவிலில் செவ்வாய்க்கிழமை 8 மணி நேரம் நடை மூடப்படுகிறது

Posted: 03 Mar 2016 09:47 PM PST

இந்த ஆண்டு 2 சூரிய கிரகணங்கள், 3 சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளது. இதில் முதல் சூரிய கிரகணம் வருகிற 9–ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.34 மணிமுதல் காலை 9.08 மணி வரை நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை வட மாநிலங்களில் சில இடங்களில் மட்டுமே காண இயலும். சூரிய கிரகணம் காரணமாக அதன் தாக்கம் பூமியில் எ

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் எப்போது?: இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது

Posted: 03 Mar 2016 09:36 PM PST

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவதால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு தேர்தல் கமிஷன் ஈடுபட்டு வருகிறது. இறுதி வாக்களர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு, வாக்குச்

கேரளாவில் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் – 7 பேர் கள்ள நோட்டுகளுடன் கைது

Posted: 03 Mar 2016 09:27 PM PST

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதைதொடர்ந்து கள்ள நோட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூரை

காஷ்மீரில் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் சட்டசபையை கலையுங்கள்: உமர் அப்துல்லா வேண்டுகோள்

Posted: 03 Mar 2016 09:25 PM PST

காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா – மக்கள் ஜனநாயக்கட்சி (பிடிபி) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதல்–மந்திரியாக இருந்த முக்தி முகம்மது சயீது 2 மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து முப்தி முகம்மது சயீதுவின் மகளும் பிடிபி கட்சி தலைவருமான மெகபூபா முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்பார் என்று

திருப்பதி கோவிலில் தலை முடி ஏலம் மூலம் ரூ.23½ கோடி வருமானம்

Posted: 03 Mar 2016 09:05 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி ஆபரணங்களுடன் தலை முடியையும் காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். பக்தர்கள் வழங்கும் தலை முடி 5 வகையாக பிரிக்கப்பட்டு மாதந்தோறும் ஆன்லைன் ஏலம் விடப்படுகிறது.

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 3–வது நாள் விழா: சூரிய வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் வீதி உலா

Posted: 03 Mar 2016 08:28 PM PST

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கைலாசகிரி மலையில் கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2–வது நாளான நேற்று பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது.

மும்பை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியபோது கியர் இயங்காததால் பரபரப்பு: 127 பயணிகள் உயிர் தப்பினர்

Posted: 03 Mar 2016 08:01 PM PST

டெல்லியில் இருந்து மும்பைக்கு மாற்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் 127 பயணிகள் இருந்தனர். மும்பை விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்க முயன்றபோது திடீரென தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டது. விமானத்தை தரை

இஸ்ரத் ஜகானை சுட்டுக்கொன்ற போலீசார் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரும் மனு: சுப்ரீம் கோர்ட்டில் 11-ந் தேதி விசாரணை

Posted: 03 Mar 2016 07:49 PM PST

நரேந்திர மோடியை கொல்ல வந்ததாக, 2004-ம் ஆண்டு குஜராத் போலீசாரால் இஸ்ரத் ஜகான் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக, அப்போதைய டி.ஐ.ஜி. வன்சேரா உள்ளிட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கொல்லப்பட்ட இஸ்ரத்

டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனருடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

Posted: 03 Mar 2016 07:42 PM PST

தி.மு.க. சார்பில் அக்கட்சியின் டெல்லி மேல்-சபை உறுப்பினர் கனிமொழி தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐதராபாத்தில் ஆஸ்திரேலியப் பெண் மர்ம மரணம்

Posted: 03 Mar 2016 07:28 PM PST

ஐதராபாத்தின் கோல்கொன்டா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தப் பெண் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார். ஆறுமாத சுற்றுலா விசாவில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி

ஆதார் மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம்: பண மசோதாவாக அறிமுகம் செய்ததால் காங்கிரஸ் போர்க்கொடி

Posted: 03 Mar 2016 06:19 PM PST

ஆதார் அட்டையை அரசின் மானியங்களைப் பெறுவதற்கு சட்டப்பூர்வமாக ஆக்குவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று அறிமுகம் செய்தார். ஆனால் இந்த மசோதாவை பண மசோதாவாக அறிமுகம் செய்ததற்கு

4 மாத குழந்தைக்கு இருதய ஆபரேஷன்: 20 முறை மாரடைப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தகவல்

Posted: 03 Mar 2016 06:14 PM PST

மராட்டிய மாநிலம் பார்ஷி தாலுகாவை சேர்ந்த பிரீத்தி என்பவரின் 4 மாத பெண் குழந்தை அதீதி மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டது. உடனடியாக குழந்தையை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிந்துரையின்படி குழந்தையை புனே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஐ.எஸ் அமைப்பை விட தலிபான்களால் இந்தியாவிற்கு ஆபத்து அதிகம்: ஆப்கானிஸ்தான் அதிகாரி தகவல்

Posted: 03 Mar 2016 04:26 PM PST

தலிபான்கள் இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை விட தெற்காசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோரை அவர்கள் கொன்றுள்ளனர் என்றும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு இயக்குநர் அம்ருல்லா சலே கூறியுள்ளார். தலிபான்கள் மூலமாக ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான

இந்தியாவிற்குள் சுதந்திரம் வேண்டும், வெளியே அல்ல: சிறையில் இருந்து விடுதலை ஆனா கண்ணையா குமார் பேச்சு

Posted: 03 Mar 2016 04:22 PM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமாருக்கு 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கி, டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் பத்திரத்தையும், அதே தொகைக்கான மற்றொருவரின்

கூட்டு விசாரணைக் குழு வருவதை 5 நாட்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

Posted: 03 Mar 2016 03:48 PM PST

பதன்கோட் விமானப்படை தள தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் இயக்கத்திற்கு உள்ள தொடர்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாகிஸ்தானிடம் வழங்கிய இந்தியா, நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சு என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனையடுத்து நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் சொல்லிக் கொண்டு வருகிறது. உயர்மட்ட விசாரணை குழு இந்தியாவிற்கு வந்து ஆவணங்களை சேகரிக்கும் என்று கூறியது.

இந்தியா-பாக். எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: தீவிரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் கைவரிசை

Posted: 03 Mar 2016 03:03 PM PST

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், 30 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தானின் கைவரிசையாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுபவர்கள் தலை துண்டிக்கப்படும்: பா.ஜ.க., தலைவர் சர்ச்சை பேச்சு

Posted: 03 Mar 2016 12:04 PM PST

பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாரெல்லாம் முழக்கமிடுகிறார்களோ அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்று மேற்குவங்க மாநில பா.ஜ.க., தலைவர் சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க., மாநில தலைவராக இருந்த ராகுல் சின்ஹா மாற்றப்பட்டு திலிப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்சி தொண்டர்களிடையே நேற்று உரையாற்றினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™