Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பாடசாலையில் துப்பாக்கி வைத்திருந்த மாணவன்!

Posted: 09 Feb 2016 07:23 PM PST

g

gநோர்த் யோர்கில் உள்ள கத்தோலிக்க உயர் படசாலையில் மாணவன் ஒருவரின் பெட்டகத்தில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் துப்பாக்கி வைத்திருந்த குறித்த 16 வயது மாணவன் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடாது என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விளக்கமளிக்கையில், இன்று செவ்வாய்கிழமை காலை 11.08 மணியளவில் மாணவன் ஒருவர் பாடசாலையினுள் துப்பாக்கி வைத்திருப்பதாக முறையிடப்பட்டிருந்ததுடன், Finch அவனியூ Keele வீதி பகுதியில் அமைந்துள்ள James Cardinal McGuigan Catholic Secondary School இற்கு வருமாறு தாம் அழைக்கப்பட்டிருந்தாக தெரிவித்துள்ளனர்.g

தாம் அங்கு செல்லும் வரையில் துப்பாக்கி வைத்திருந்த மாணவனை மூன்று ஆசிரியர்களும், அதிபரும் அசம்பாவிதம் எதிலும் ஈடுபடாதவாறு பார்த்திருந்தனர் என்றும் கூறியுள்ளனர்.

எனினும் அந்த மாணவன் உடல ரீதியாக ஒருபோதும் குழப்பம் விளைவித்திருக்கவில்லை என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர் கைது செய்யப்பட்டு சிறிது நேரதிலேயே விடுவிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியிட்ட காவல்த்துறையினர், இது குற்றச்செயல் அல்ல என்று கூறியதுடன், அதனால் பாடசாலை நிர்வாகமே இந்த விடயத்தை கையாளும் என்றும் விளக்கமளித்துள்ளனர்.

The post பாடசாலையில் துப்பாக்கி வைத்திருந்த மாணவன்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடல் எடையை எளிதில் குறைக்க!

Posted: 09 Feb 2016 06:56 PM PST

jkl

jklஉடற்பயிற்சி செய்வதற்கு சோம்பறித்தனம் படும் பெண்களுக்கு எடையை குறைக்க உதவுகிறது சும்பா நடனம்.

கொலம்பியா நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆல்பர்டோ பேட்டாபேரஸ் என்பவரால் 1990ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது தான் சும்பா நடனம்.

மிக எளிமையான உடற்பயிற்சியுடன் கூடிய நடனம், ஏரோபிக்ஸ் போன்று தோன்றினாலும் அதில் இருந்து ரொம்பவும் வித்தியாசப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு.

இன்னும் தெளிவாக சொன்னால் நடனம் மற்றும் ஏரோப்பிக்ஸ் இரண்டும் கலந்து பெற்றெடுத்த குழந்தை என்று சும்பாவை குறிப்பிடலாம்.m,jkl

இது பெண்களுக்கு ஏற்ற அசைவுகளுடன் கூடிய பயிற்சிதான் என்றாலும் ஆண்கள் வேலையால் ஏற்படும் சோர்வை விரட்டவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் சும்பா பயிற்சி பெறுகிறார்கள்.

இதன் மூலம் ஆரோக்கியமான உடலை பெறலாம், முதுகெலும்பை பலப்படுத்துகிறது.

உடல் தசைகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் கை விரல்கள் முதல் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பலத்தை தருகிறது.

சும்பா நடனம் முழுமையடைந்த பின்னர், தியானத்துடம் நடனப்பயிற்சி நிறைவடைகிறது.

ஒரு மணிநேரத்தில் 750- 800 கலோரிகள் வரை குறைவதால் கொழுப்பை கரைந்து உடல் எடையும் குறைகிறது.

The post உடல் எடையை எளிதில் குறைக்க! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்கில் அதிகாலையில் இடம்பெற்ற கத்திக் குத்தில் ஒருவர் பலி

Posted: 09 Feb 2016 09:53 AM PST

North_York_stabbing_-_02092016

North_York_stabbing_-_02092016நோர்த் யோர்க்கில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் 20 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 23 வயது இளைஞர் ஒருவர் ஆபத்தான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோர்த் யோர்க் பகுதியில் உள்ள மதுபானக் கடையின் வெளிப்புறமாக உள்ள நடைபாதைப் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற குறித்த மதுபானக் கடையானது யேன் வீதி மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில் அமைந்துள்ளது.North_York_stabbing_-_02092016

எனினும் கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்டவரில் ஒருவரான 20 வயது இளைஞன் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தாகவும், மற்றைய நபர் Merrill மற்றும் Patika அவனியூப் பகுதியில் இருந்து அவசர மருத்துவப் பிரிவினரால் பிடிக்கப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post நோர்த் யோர்கில் அதிகாலையில் இடம்பெற்ற கத்திக் குத்தில் ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Whitby தொகுதிக்கான லிபரல் கட்சி வேட்பாளரின் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர்

Posted: 09 Feb 2016 09:48 AM PST

Whitby_-_02092016

Whitby_-_02092016ஒன்ராறியோவின் Whitby தொகுதிக்கான லிபரல் கட்சி வேட்பாளரின் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று மாலை கலந்துகொள்ளவுள்ளார்.

மாநில தொகுதி இடைத்தேர்தலில் நாட்டின் பிரதமர் கலந்துகொள்வதானது அசாதரணமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையிலும் கனேடியப் பிரதமர் இன்று Whitby தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபரல் கட்சி வெற்றி ஈட்டிய கடந்த பொதுத் தேர்தலின் பரப்புரை நடவடிக்கையின் போது கத்தலின் வின் ஜஸ்டின் ரூடோவிற்கு பெரும் ஆதரவு வழங்கியிருந்தார்.

அவரின் ஆதரவால் கடந்த பொதுத் தேர்தலில் ஒன்ராநியோவில் லிபரல் கட்சி அமோக வெற்றி ஈட்டியிருந்தது.

முன்னைய மத்திய அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளையில் நாடாளுமன்றில் ஒன்ராறியோவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 13 ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்த லிபரல் கட்சி, தேர்தலில் ஒன்ராறியாவில் மாத்திரம் 80 ஆசனங்களைக் கைப்பற்றி பாரிய வெற்றியினை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.Whitby_-_02092016

முதல்வர் கதலின் வின் வழங்கிய அந்த பெரும் ஆதரவுக்க கைமாற்றாகவே பிரதமர் குறித்த இடைத்தொகுதிகான பரப்புரைக் கூட்டத்தில் இன்று கலந்துகொள்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரமதர் ஜஸ்டி்ன ரூடோவுடன், ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின்னும் பங்குபற்ற உள்ளார்.

இவர்கள் இருவரையும் அந்த தொகுதிக்காக லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் எலிசபெத் றோய் வரவேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் முற்போக்குப் பழமைவாதக் கட்சியின் பிடியில் இருந்த Whitby-Oshawa தொகுதியினையும் இந்த இடைத் தேர்தலில் கைப்பற்றுவதற்காக கடமையான முனைப்பில் லிபரல் கட்சி ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post Whitby தொகுதிக்கான லிபரல் கட்சி வேட்பாளரின் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இரண்டு வாரங்களில் ஐ.எஸ் மீதான வான் தாக்குதல்களை நிறுத்துகின்றது கனடா

Posted: 09 Feb 2016 09:40 AM PST

CF-18_fighter_-_11232015

CF-18_fighter_-_11232015ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈரான் மற்றும் சிரியா பிராந்தியங்களில் நடாத்தப்படும் வான் தாக்கதல்களை இன்னும் இரண்டு வாரங்களில் நிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஒட்டாவாவில் ஊடக மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.

அதில் கனேடியப் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

அதன் போதே கனேடியப் போர் விமானங்களின் தாக்குதல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் விமானத் தாக்குதல்களை நிறுத்தப்படுவதற்குப் பதிலாக உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி வழங்குதல், பாதிக்கப்பட்ட பிராந்தியங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவுதல் ஆகிய நடவடிக்கைகளை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.CF-18_fighter_-_11232015

தற்போது அந்த பிராந்தியங்களில் 650 படையினர் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையை 830 ஆக கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் பயிற்சி, ஆலோசனை, உதவிகளுக்கான பணிகள் மூன்று மடங்காக அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இரண்டு வாரங்களில் ஐ.எஸ் மீதான வான் தாக்குதல்களை நிறுத்துகின்றது கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™