Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மசூதி இமாம் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்

Posted: 09 Feb 2016 10:19 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள மசூதியில் இமாமாக இருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாம் டூரு பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் இங்குள்ள மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. தலையில்

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளத்தில் சுற்றிய மர்ம வாலிபர் கைது: நக்சலைட் அமைப்பை சேர்ந்தவரா?

Posted: 09 Feb 2016 10:15 PM PST

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது. இதன் தென் புறத்தில் உள்ள கே.பி.என். கேட் அருகே சந்தேகப்படும் வகையில் மர்ம வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் கரண் (வயது 33) என்றும் சதீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டம்

அனுமதியின்றி பெற்றோரை சந்தித்ததால் மாணவனை அடித்து கொன்ற தலைமை ஆசிரியர்–வார்டன்

Posted: 09 Feb 2016 10:06 PM PST

மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ரத்ன்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜுல்ஹஸ் மாலிக். இவரது மகன் ஷாமீன் மாலிக் (வயது 12). அங்குள்ள தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுதியில் தங்கி இருந்தான். கடந்த 8–ந்தேதி விடுதியில் இருந்த மாணவன் ஷாமீன் மாலிக் விடுதி வெளியே நின்ற தனது பெற்றோரை பார்க்க சென்றான். ஆனால் அவன் பள்ளி

திருப்பதி மலையில் 9 கடைகளில் கொள்ளை: செம்மரக்கடத்தல் கும்பல் கைவரிசையா?

Posted: 09 Feb 2016 10:03 PM PST

திருப்பதி மலையில் ஏழுமுலையான் கோவிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் பாபவிநாசம் அருவி உள்ளது. திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவது வழக்கம். பாபவிநாசம் அருவிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து

ஆம்ஆத்மி மந்திரி மீது லஞ்ச ஊழல் புகார்: வீடியோ ஆதாரத்தை காங்கிரஸ் வெளியிட்டது

Posted: 09 Feb 2016 10:02 PM PST

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரியாக இருப்பவர் இம்ரான் உசேன். இவர் மீது லஞ்ச ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இவரது உதவியாளர் ஹமத் என்பவர் கட்டிட உரிமையாளரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ரகசிய வீடியோ ஆதாரத்தை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் டேவிட் ஹெட்லியின் வாக்குமூலப் பதிவு நாளை ஒத்திவைப்பு

Posted: 09 Feb 2016 09:33 PM PST

மும்பையில் கடந்த 26-11-2008 அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166 பேர் பலியான வழக்கு தொடர்பான விசாரணையில் அப்ரூவராக மாறி, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை கோர்ட்டில் வாக்குமூலம் அளித்து வரும் வாக்குமூலத்தை பதிவு செய்வதில்

தொழில்நுட்பக் கோளாறால் டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் இடையூறு

Posted: 09 Feb 2016 08:22 PM PST

மும்பையில் கடந்த 26-11-2008 அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166 பேர் பலியான வழக்கு தொடர்பான விசாரணையில் அப்ரூவராக மாறி, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை கோர்ட்டில் வாக்குமூலம் அளித்து வருகிறான்.

டெல்லிக்கு ரெயிலில் சென்ற ராணுவ தளபதி மாயம்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாரா?

Posted: 09 Feb 2016 07:56 PM PST

பீகார் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் சென்ற இளம்வயது ராணுவ தளபதி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த் குமார். ராணுவத்தில் லெப்டினண்ட் கர்னலாக சேவைபுரியும் இவர், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ராணுவ மையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சிகர்தீப்(24). இவரும் ராணுவத்தில் கேப்டனா

இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்த பாக்.உளவுத்துறை உதவி செய்கிறது: டேவிட் ஹெட்லி இன்று வாக்குமூலம்

Posted: 09 Feb 2016 07:34 PM PST

இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., பணம், ஆயுதம் மற்றும் இதரவகை ஒத்துழைப்பு என அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அமெரிக்க சிறையில் இருந்தபடி இன்று மூன்றாவது நாளாக வீடியோ கான்பிரன்ஸ் முறையில் மும்பை கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துவரும் டேவிட் ஹெட்லி கூறியுள்ளான். மும்பையில் கடந்த 26-11-2008 அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166 பேர் பலியான வழக்கு தொடர்பான விசாரணையில் அப்ரூவராக மாறி, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி தொடர்ந்து மூ

முதல்-மந்திரி சித்தராமையாவிடம் விலை உயர்ந்த கைக்கெடிகாரம்?

Posted: 09 Feb 2016 07:13 PM PST

முதல்-மந்திரி சித்தராமையா ரூ.50 லட்சம் மதிப்புள்ள கைக்கெடிகாரம் கட்டி இருப்பதாகவும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள 'கூலிங் கிளாஸ்' மூக்கு கண்ணாடி அணிந்து இருப்பதாகவும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கூறினார்.

கேரளாவில் பா.ஜனதாவால் கால் ஊன்றவே முடியாது: ராகுல்காந்தி கடும் தாக்கு

Posted: 09 Feb 2016 06:54 PM PST

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் 'ஜனரக்ஷா யாத்திரை' என்ற பேரணியை கடந்த 2 வாரத்திற்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் தொடங்கினார். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், இதன் நிறைவு விழாவை நேற்று திருவனந்தபுரம் அருகே உள்ள சங்குமுகம் கடற்கரையில் நடத்தினார். இந்த யாத்திரை நிறைவு விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:– கேரளாவில் உம்மன் சாண்டி அரசு சிறந்த அரசாக செயல்படுகிற

காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்: எடியூரப்பா பேச்சு

Posted: 09 Feb 2016 06:37 PM PST

கர்நாடகத்தில் மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பா.ஜனதா மூத்த தலைவர் எடியூரப்பா துமகூருவில் நேற்று பிரசாரம் செய்து தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது எடியூரப்பா பேசியதாவது:- கர்நாடக மக்கள் காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தில் வெறுப்படைந்து உள்ளனர்.

ராணுவ வீரர் ஹனுமந்தப்பா மீட்கப்பட்டது எப்படி?

Posted: 09 Feb 2016 06:00 PM PST

கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்து, உலகின் மிக உயரமான போர்க்களம் என்ற பெயரைப்பெற்றது, காஷ்மீரின் சியாச்சின் பனிமலை. அங்கு மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் என்ற உயிரை உறைய வைக்கும் சீதோஷ்ண நிலைக்கும், கொட்டும் பனிப்பொழிவுக்கும் மத்தியில் தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களில் 10 பேர் கடந்த 3-ந்தேதி பனிப்பாறை சரிவில் சிக்கினர். இவர்கள் அனைவரும் மெட்ராஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்

அரசியல் சாசனத்தின் புனிதத்தை அனைவரும் பாதுகாக்கவேண்டும்: கவர்னர்கள் மாநாட்டில் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்

Posted: 09 Feb 2016 04:20 PM PST

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் 2 நாள் மாநில கவர்னர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மாநாட்டை தொடங்கி வைத்தார்.இதில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கவர்னர்கள், துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ள அபாயத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் புதிய வசதி: மத்திய அரசுடன் இணைந்து வழங்குகிறது கூகுள்

Posted: 09 Feb 2016 10:47 AM PST

சென்ற ஆண்டு புயல் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் 'சைக்ளோன்' வசதியை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனம் தற்போது வெள்ள அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து ஆபத்தை தவிர்க்கும் புதிய அலர்ட் வசதியை அறிமுகப்படுத்துகிறது.

நீதிபதி தோட்டத்தில் மேய்ந்ததாக ஆடு கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

Posted: 09 Feb 2016 10:10 AM PST

நீதிபதியின் தோட்டத்தில் மேய்ந்த குற்றச்சாட்டிற்காக ஆடும் அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சத்தீஷ்கர் மாநிலத்தில் இந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்மாநில

அரசியல்வாதிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரணை கமிஷனிடம் கூடுதல் ஆதாரங்களை வழங்கினார் சரிதா

Posted: 09 Feb 2016 08:06 AM PST

கேரளாவில் சோலார் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர், அரசியல்வாதிகளுக்கு எதிராக கூறியிருந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான கூடுதல் ஆதாரங்களை இன்று வழங்கினார். கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள சோலார் மோசடி தொடர்பாக தொழிலதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், கேரள தலைமை செயலக ஊழியர்

கீழமை நீதிமன்றங்களில் 2 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேக்கம்: சட்ட அமைச்சகம் தகவல்

Posted: 09 Feb 2016 07:32 AM PST

நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 2 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நீதித்துறை தகவல் கட்டமைப்பு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி வரையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில்

சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ராணுவ வீரர் கோமா நிலைக்கு சென்றார்: உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி

Posted: 09 Feb 2016 06:21 AM PST

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் சிகரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கிருந்த இந்திய ராணுவ காவல்சாவடி பனியில் புதைந்தது. அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனியில் புதைந்தனர்.

சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ஜனசதாப்தி பயணிகள் 2 மணி நேரம் தவிப்பு

Posted: 09 Feb 2016 05:21 AM PST

தென்கிழக்கு ரெயில்வே கோட்டத்தில் இன்று சரக்கு ரெயில் ஒன்று திடீரென தடம்புரண்டதால் அந்த வழியாக செல்ல வேண்டிய ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் பாரஜம்தா நோக்கி இன்று ஒரு சரக்கு ரெயில் சென்றுகொண்டிருந்தது. நோவாமண்டி-பாரஜம்தா ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் சென்றபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™