Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Richmond Hill பகுதியில் ஒருவர் மரணம்: மகனைத் காவல்த்துறையினர் தேடுகின்றனர்

Posted: 08 Feb 2016 09:23 AM PST

killed_in_Richmond_Hill_-_20160208

killed_in_Richmond_Hill_-_20160208Richmond Hill பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மரணமான முதியவரின் மகனை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த முதியவர் 77வயது Robert Veltheer என இனங்காணப்பட்டுள்ளார்.

30 வயதான மகனே குறித்த முதியவரை கடசியாக பார்த்துள்ளார் என தாம் நம்புவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு ஒன்பது மணியளவில் obert Veltheer தமது வீட்டினுள் உணர்வற்ற நிலையில் கிடந்ததாக காவல்த்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.killed_in_Richmond_Hill_-_20160208

அதேவேளை முதியவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் தெளிவாக கண்டறிய முடியவில்லை என தெரிவித்துள்ள காவல்த்துறையினர், பிரேத பரிசோதனைக்குப் பின்னரே இது குறித்து தகவல் வெளியிட முடியும் என்றும் கூறியுள்ளார்.

The post Richmond Hill பகுதியில் ஒருவர் மரணம்: மகனைத் காவல்த்துறையினர் தேடுகின்றனர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்ககு எதிரான போரில் கனடாவின் பங்களிப்பு

Posted: 08 Feb 2016 09:16 AM PST

Justin_Trudeau_-_111162015

Justin_Trudeau_-_111162015ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் கனடாவின் பங்களிப்புக் குறித்து தீர்க்கமான முடிவென்றை லிபரல் அரசாங்கம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றது.

பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர் மாநாடு ஒன்றை கனேடியப் பிரதமர் இன்று ஒட்டாவாவில் நடாத்த தீர்மானித்துள்ள நிலையில் இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து கனடிய போர் விமானங்களை மீட்டுக்கொள்ள எடுத்த முடிவை அடுத்து கனேடியப் பிரதமர் அது தொடர்பில் குறிப்பிட்ட அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றார்.

கடந்த தேர்தல் பரப்புரையின் போது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடும் கனேடிய விமானங்களை மீட்டுக் கொள்வதாக ஐஸ்டின் ரூடோ வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Justin_Trudeau_-_111162015

அதன் பிரகாரம் போர் விமானங்களை மீடடுக்கொள்ளும் தமது முடிவினை மாற்றியமைக்கப் போவதில்லை என்பதனை பிரதமர் ஜஸ்டின் ரூடோ பல சந்தர்ப்பங்களில் மீள வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை பேர் விமானங்களை மீட்டுக் கொள்கின்ற போதிலும், ஐ.எஸ் அமைப்குக்கு எதிரான போரில் ஈடுபட்டுவரும் ஈராக்கிய தரைப்படைக்கு வழங்கிவரும் பயிற்சி நடவடிக்கைகளை கனடா தீவிரப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கையில் தற்போது 69 கனேடிய போர் நிபுணர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை 150 இலிருந்து 300 வரையில் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஐ.எஸ் தீவிரவாதிகளுக்ககு எதிரான போரில் கனடாவின் பங்களிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™