மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஐதராபாத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு டாக்டர் தற்கொலை
- துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய போது சிறுவன் குண்டு பாய்ந்து பலி: சமாஜ்வாடி வேட்பாளர் கட்சியை விட்டு நீக்கம்
- திருப்பதியில் தேவஸ்தான கோவில் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை
- மாயாவதி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.சி.யிடம் ரூ.10 ஆயிரம் கோடி கறுப்பு பணம்: விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள 2100 கிலோ கஞ்சா பறிமுதல்
- காவல் நிலையத்தை சூறையாடிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கைது
- மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய்: கள்ளக்காதலனுடன் தலைமறைவு
- அனைத்து நிலையிலும் ஊழல் தாண்டவமாடுகிறது: லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பேச்சு
- ராகுல் காந்தி இன்று திருவனந்தபுரம் வருகை
- சியாச்சின் பனிச்சரிவு: 6 நாட்களுக்கு பிறகு ராணுவ வீரர் உயிருடன் மீட்பு
- இணைய சமத்துவம் தான் முக்கியம் என்ற இந்தியாவின் முடிவால் பேஸ்புக் ஏமாற்றம்
- மும்பை தாக்குதல் பின்னணியில் பாக். ராணுவ உளவு அதிகாரிகள்: டேவிட் ஹெட்லி பரபரப்பு தகவல்
- வெறுப்புணர்வை விதைத்தப்படி பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாது: ஹார்வர்டு பல்கலை.யில் சசி தரூர் பேச்சு
- பாதுகாப்பு அமைச்சக ஸ்டிக்கர் ஒட்டிய காரில் பயணம்: 6 வாலிபர்கள் கைது
- ஊரக வளர்ச்சி திட்ட இளம் ஆய்வாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
- கர்நாடகாவில் ரெயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனு: சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
- ஐக்கிய அரபு அமீரக இளவரசர் நாளை இந்தியா வருகை: 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
- பனிச்சரிவில் சிக்கி பலியான 10 ராணுவ வீரர்களில் ஒருவரின் உடல் மீட்பு
- பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி இமாம் திடீர் சந்திப்பு
| ஐதராபாத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு டாக்டர் தற்கொலை Posted: 08 Feb 2016 10:29 PM PST ஐதராபாத்தில் தொழில் கூட்டாளிகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரபல டாக்டர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடன் கூட்டாக இணைந்து தொழில் செய்துவந்த இரு டாக்டர்களை இன்று ஐதராபாத் புறநகர் பகுதியான ஹிமாயத்நகரில் டாக்டர் சசிகுமார் |
| Posted: 08 Feb 2016 09:19 PM PST உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கைரானா வட்டார பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இதில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் நபிசா வெற்றி பெற்றார். அவரது வெற்றி அறிவிக்கப்பட்டதும் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள். மேலும் வெற்றி உற்சாகத்தில் சிலர் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர். அப்போது அந்த வழியாக ரிக்ஷாவில் பாட்டியுடன் வந்த 8 வயது சிறுவன் |
| திருப்பதியில் தேவஸ்தான கோவில் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை Posted: 08 Feb 2016 09:18 PM PST திருப்பதி பைராகி பட்டிடாவை சேர்ந்தவர் பூபதி ரெட்டி. இவர் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோதண்டராம சுவாமி கோவிலில் துணை செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தது. |
| Posted: 08 Feb 2016 09:05 PM PST மாயாவதி கட்சி முன்னாள் எம்.எல்.சி.யிடம் இருக்கும் ரூ. 10 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாரன் பூர் முன்னாள் எம்.எல்.சி. முகம்மத் இக்பால் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். |
| Posted: 08 Feb 2016 08:30 PM PST ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த 2100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள ஆந்திர போலீசார், இதுதொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆறுபேரை கைது செய்துள்ளனர். இங்குள்ள மடுக்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கபந்தா பகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கஞ்சா கடத்திச் செல்வதற்கான ஏற்பாடுகளை சிலர் |
| காவல் நிலையத்தை சூறையாடிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கைது Posted: 08 Feb 2016 08:14 PM PST அடியாட்களுடன் காவல் நிலையத்தை அடித்து, நொறுக்கி, சூறையாடிய ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் ஏழுபேரை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சாட்சியமாக்கி போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தின் பாரதீப் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த மாநிலத்தை ஆளும் பிஜு ஜனதாதளம் |
| மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய்: கள்ளக்காதலனுடன் தலைமறைவு Posted: 08 Feb 2016 06:52 PM PST டெல்லி ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் வரிதா (வயது 40). கணவரை விவாகரத்து செய்து விட்டு தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். வரிதாவுக்கு, நிக்கோலஸ் (15) என்ற மகன் இருந்தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரிதா, மகனுடன் திடீரென மாயமானார். இதுபற்றி ஜோசப் ஜான் போலீசில் புகார் கொடுத்தார். ஒரு மாதத்திற்கு பின்னர் நிக்கோலஸ், தாத்தாவை செல்போனில் தொடர்பு கொண்டு தான் புனேயில் இருப்பதாகவும், வரிதா வேறொரு ஆணுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தான். மேலும் தனக்கு |
| அனைத்து நிலையிலும் ஊழல் தாண்டவமாடுகிறது: லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பேச்சு Posted: 08 Feb 2016 06:14 PM PST பெங்களூருவில் மாற்றுத்திறனாளிகள் குறித்து நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கலந்து கொண்டு பேசியதாவது:- மாற்றுத்திறனாளிகள் மீது அனுதாபப்படுவதை விட அவர்களுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதாவது நல்ல கல்வியுடன் பயிற்சி வழங்கினால் மற்றவர்களை விட தாங்கள் ஒன்றும் |
| ராகுல் காந்தி இன்று திருவனந்தபுரம் வருகை Posted: 08 Feb 2016 05:51 PM PST கேரள மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், அதன் தலைவர் சுதீரன் தலைமையில், 'ஜன ரக்ஷா' (மக்கள் பாதுகாப்பு) விழிப்புணர்வு பயணம் கடந்த மாதம் 4-ந் தேதி காசர்கோட்டில் தொடங்கியது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளிலும் சுதீரன் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விழிப்புண |
| சியாச்சின் பனிச்சரிவு: 6 நாட்களுக்கு பிறகு ராணுவ வீரர் உயிருடன் மீட்பு Posted: 08 Feb 2016 04:16 PM PST சியாச்சின் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவர் 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் |
| இணைய சமத்துவம் தான் முக்கியம் என்ற இந்தியாவின் முடிவால் பேஸ்புக் ஏமாற்றம் Posted: 08 Feb 2016 03:49 PM PST இணைய சமத்துவத்துக்கு சாதகமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான இணைய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. |
| மும்பை தாக்குதல் பின்னணியில் பாக். ராணுவ உளவு அதிகாரிகள்: டேவிட் ஹெட்லி பரபரப்பு தகவல் Posted: 08 Feb 2016 03:16 PM PST கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பை நகருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் |
| Posted: 08 Feb 2016 02:55 PM PST நாட்டில் நிலவும் வெறுப்புணர்வை முடிவுக்கு கொண்டு வராமல் அந்தத் திட்டங்களால் எந்தப் பலனும் ஏற்படாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற |
| பாதுகாப்பு அமைச்சக ஸ்டிக்கர் ஒட்டிய காரில் பயணம்: 6 வாலிபர்கள் கைது Posted: 08 Feb 2016 02:15 PM PST மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜமல்பூரில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில், 'பாதுகாப்பு அமைச்சகம், இந்திய அரசு' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. |
| ஊரக வளர்ச்சி திட்ட இளம் ஆய்வாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் Posted: 08 Feb 2016 01:44 PM PST பிரதம மந்திரியின் ஊரக வளர்ச்சி திட்ட ஆய்வில் நாடு முழுவதும் ஏராளமான இளம் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டில் உள்ள கிராமப்புற, பின்தங்கிய மற்றும் மழைவாழ் பகுதிகளில் தங்கி மக்களின் சுகாதாரம், கல்வி, சத்தான உணவு, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். |
| கர்நாடகாவில் ரெயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு Posted: 08 Feb 2016 12:40 PM PST கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரெயில் நிலைய வளாகத்திற்குள் காவல் நிலையம் மற்றும் பார்சல் அலுவலம் அமைந்துள்ள கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இன்று பிற்பகலில் பெரும்பாலானோர் மதிய உணவுக்காக வெளியே |
| Posted: 08 Feb 2016 12:23 PM PST ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற சில அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, ஐ.பி.எல். போட்டிகளில் இரு |
| ஐக்கிய அரபு அமீரக இளவரசர் நாளை இந்தியா வருகை: 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது Posted: 08 Feb 2016 11:01 AM PST அபுதாபி பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் செல்வாக்குமிக்க தலைவருமான ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மூன்று நாட்கள் பயணமாக நாளை இந்தியாவுக்கு வருகிறார். இந்தியாவுடனான பொருளாதார உறவை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும். |
| பனிச்சரிவில் சிக்கி பலியான 10 ராணுவ வீரர்களில் ஒருவரின் உடல் மீட்பு Posted: 08 Feb 2016 09:49 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கிருந்த ராணுவ நிலை பனியில் புதைந்தது. அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனியில் புதைந்து பலியானார்கள். அவர்களை தேடும்பணியில் இந்திய ராணுவமும், விமானப்படையும் இறங்கியுள்ளது. |
| பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி இமாம் திடீர் சந்திப்பு Posted: 08 Feb 2016 09:07 AM PST டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையது அகமது புகாரி இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு எனக்கூறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு தனது வருத்தத்தை தெரிவித்தார். ஐ.எஸ், இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |