Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வீடொன்றில் உயிரிழந்து கிடந்த நபர் – ஒருவர் கைது

Posted: 07 Feb 2016 10:56 AM PST

Tpronto_police_-_11142015

Tpronto_police_-_11142015ரொரன்ரோவின் கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்ததை அடுத்து காவல்த்துறையினர் ஒருவரைத் தடுத்து வைத்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 6.30 மணியவில் O'Connor Drive மற்றும் வின்டோரியாப் பார்க் அவனியூவிற்கு அருகில் உள்ள Wakunda Place உள்ள குடியிருப்புக்கு காவல்த்துறையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் காவல்த்துறையினருக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் தமது நண்பர் உணர்வற்றுக் கிடப்பதாக தெரிவித்திருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையிலெயே காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததாகவும், அங்கு ஒருவர் உயிரிழந்த காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tpronto_police_-_11142015

தற்போது ஒருவரைத் தடுத்து வைத்துள்ள காவல்த்தறையினர், சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை உயிரிழந்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது உள்ளிட்ட தகவல்கள் எவையும் வெளியிடவில்லை..

The post வீடொன்றில் உயிரிழந்து கிடந்த நபர் – ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிகாலை இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டச் சம்பவங்களில் இருவர் பலி

Posted: 07 Feb 2016 10:33 AM PST

police_line_-_12012015

police_line_-_12012015.அதிகாலை இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்

இன்று அதிகாலை பிரம்ரனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Dixie மற்றும் Orenda வீதிகளின் அருகில் உள்ள வாகன நிறுத்தும் இடத்திலேயே இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த போதிலும், அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக அதிகாலை ஒரு மணியளவில் மிசிசாகாவின் shisha lounge இற்கு வெளியிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Airport மற்றும் Derry வீதிகளுக்கு அருகில் இடம்பெற்ற அந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயதுடைய பையன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.police_line_-_12012015

எனினும் இந்த இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களுக்கும் தொடர்பு காணப்படுகிறதா என்பது தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியிப்படவில்லை

The post அதிகாலை இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டச் சம்பவங்களில் இருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவில் புதிய வேலைவாய்ப்புக்கள்

Posted: 07 Feb 2016 10:03 AM PST

Charles_Sousa_-_02072016

Charles_Sousa_-_02072016ஒன்ராறியோவில் கடந்த மாதத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிடைத்துள்ள இந்த வேலை வாய்ப்பு சந்தர்ப்பம் முழு நேர தொழில் என்பது மாத்திரமன்றி சிறந்த ஊதியத்துடனான வேலைகளாகவும் அமைந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண நிதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

பெரும்பாலும் உயர்தர உற்பத்தித் துறைகளிலேயே இவ்வாறான வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக உயிரியல் தொழில்நுட்பம், உணவு பதனிடல், நிதி உள்ளி்ட்ட அதிக தகுதி வாய்ந்த பணிகளுக்கே பலரும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஒன்ராறியோவின் பல பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில பிரதேசங்கள் இன்னமும் வேலையற்றோர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனவரி மாதத்தில் ஒன்ராறியோவில் சுமார் 19,800 பேருக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும், ஒன்ராறியோவின் வேலையற்றோர் வீதம் எந்தவித மாற்றங்களும் இன்றி தொடர்ந்தும் 6.7 சதவீதமாகவே காணப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Charles_Sousa_-_02072016

ஒன்ராறியோவின் எட்டு நகரங்களில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஒன்ராறியோவில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகமாகவே காணப்படுவதாகவும் புதிய சனநாயக கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறந்த நிலையான வேலைவாய்ப்புச் சூழல் ஒன்ராறியோவில் காணாமல் போய்விட்டதாகவும், தமது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து ஒன்ராறியோ மக்கள் கவலை கொண்டுள்ளதாகவும் புதிய சனநாயக கட்சியின் நிதி விமர்சகர் கருத்து வெளியிட்டுள்ளார்.

The post ஒன்ராறியோவில் புதிய வேலைவாய்ப்புக்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™