மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இந்தியாவில் மட்டும்தான் பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்படுகிறது: மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி பேச்சு
- தேர்தல் வெற்றி கொண்டாட்ட விழாவில் துப்பாக்கிச் சூடு: குண்டு பாய்ந்து சிறுவன் பலி
- திருச்சூர் அருகே கணவருக்கு சாராயம் கொடுத்து மயக்கி மனைவியை கற்பழிக்க முயற்சி: 3 வாலிபர்கள் கைது
- இடஒதுக்கீடு கேட்டு உண்ணாவிரதம்: ஆந்திராவில் காபு போராட்ட குழு தலைவர் வீட்டில் போலீசார் குவிப்பு
- போலீஸ் கண்காணிப்பையும் மீறி சந்திரபாபு நாயுடு வீடு அருகே திருடர்கள் கைவரிசை
- ஐதராபாத் மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து - 4 பேர் பலி
- மும்பை தாக்குதலுக்கு முன்னர் ஏழு முறை இந்தியா வந்துள்ளேன்: டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
- அரித்துவாரில் இன்று அர்த்த கும்பமேளா: லட்சக்கணக்கானவர்கள் புனித நீராடினார்கள்
- டெல்லியில் கடும் பனி–புகை மூட்டம்: விமானம், பஸ், ரெயில் சேவை பாதிப்பு
- ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்: பொதுமக்களுக்கு எப்.டி.ஏ. அறிவுறுத்தல்
- முதல்-மந்திரி சித்தராமையா மீது எடியூரப்பா, குமாரசாமி கடும் தாக்கு
- பா.ஜனதா-காங். மோதல் எதிரொலி: பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறுமா?
- டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரான்சு விமானம் லாகூரில் அவசரமாக தரை இறக்கம்
- பாராளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற விடாமல் காங்கிரஸ் தடுக்கிறது: வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு
- மும்பை தாக்குதல் சம்பவம்: அமெரிக்க சிறையில் இருக்கும் ஹெட்லியிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று விசாரணை
- அரியானா மாநிலத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வருமான வரி அதிகாரி கைது
- பெங்களூருவில் சிகிச்சை முடிந்து கெஜ்ரிவால் டெல்லி திரும்பினார்: மந்திரிகளுடன் ஆலோசனை
- சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் மீதான புகார் பற்றி விசாரிக்க புதிய சட்ட மசோதா: மத்திய அரசு பரிசீலனை
- சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது: ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பேட்டி
- இந்தியாவில் 8.6 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக தகவல்: அதிக எண்ணிக்கையில் ஆந்திரா முதலிடம்
| இந்தியாவில் மட்டும்தான் பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்படுகிறது: மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி பேச்சு Posted: 07 Feb 2016 10:43 PM PST கேரளாவில் உள்ள கோவில் பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பின் பொன் விழாவையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் 24–ந்தேதி காசர்கோட்டில் தொடங்கிய இந்த பேரணி மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக திருவனந்தபுரத்தை சென்றடைந்தது. இந்த ஊர்வலம் நிறைவு நிகழ்ச்சி அங்குள்ள புத்திரிகடை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிறைவு விழாவில் மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி |
| தேர்தல் வெற்றி கொண்டாட்ட விழாவில் துப்பாக்கிச் சூடு: குண்டு பாய்ந்து சிறுவன் பலி Posted: 07 Feb 2016 10:36 PM PST உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் நடத்திய தேர்தல் வெற்றிவிழா ஊர்வலத்தில் உற்சாகமிகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் செல்வந்தர்களின் திருமண விழாவில் சிலர் உற்சாகமிகுதியில் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் |
| திருச்சூர் அருகே கணவருக்கு சாராயம் கொடுத்து மயக்கி மனைவியை கற்பழிக்க முயற்சி: 3 வாலிபர்கள் கைது Posted: 07 Feb 2016 10:31 PM PST கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மானாமங்கலம் பகுதியை சேர்ந்த 28 வயது தொழிலாளி ஒருவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. கணவருக்கு கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி ரகசியமாக விற்று வந்தனர். சாராயம் குடிக்க சென்ற போது அந்த கும்பலுடன் தொழிலாளிக்கு பழக்கம் ஏற்பட்டது. |
| இடஒதுக்கீடு கேட்டு உண்ணாவிரதம்: ஆந்திராவில் காபு போராட்ட குழு தலைவர் வீட்டில் போலீசார் குவிப்பு Posted: 07 Feb 2016 10:24 PM PST ஆந்திராவில் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி காபு சமூக தலைவர் பத்மநாபம் சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார். கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி அருகே உள்ள கிரிலம்புடியில் உள்ள தனது வீட்டில் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். |
| போலீஸ் கண்காணிப்பையும் மீறி சந்திரபாபு நாயுடு வீடு அருகே திருடர்கள் கைவரிசை Posted: 07 Feb 2016 09:51 PM PST ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வீடு குண்டூர் மாவட்டம் உண்டவள்ளியில் உள்ளது. முதல்–அமைச்சரின் பாதுகாப்புக்காக அவரது வீட்டு அருகே போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். அதோடு கண்காணிப்பு கேமிரா, சோதனைச் சாவடிகள் போன்றவைகளும் உள்ளது. |
| ஐதராபாத் மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து - 4 பேர் பலி Posted: 07 Feb 2016 09:50 PM PST ஐதராபாத் புறநகர் பகுதியான மங்கல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழ்ந்தனர். அங்குள்ள ஒரு கொதிகலன் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறியதில் இந்த |
| மும்பை தாக்குதலுக்கு முன்னர் ஏழு முறை இந்தியா வந்துள்ளேன்: டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம் Posted: 07 Feb 2016 09:41 PM PST மும்பை தாக்குதலுக்கு முன்னர் ஏழுமுறையும் தாக்குதலுக்கு பின்னர் ஒருமுறையும் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க சிறையில் இருந்தவாறு தீவிரவாதி டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், கடந்த 2008-ம் ஆண்டு |
| அரித்துவாரில் இன்று அர்த்த கும்பமேளா: லட்சக்கணக்கானவர்கள் புனித நீராடினார்கள் Posted: 07 Feb 2016 09:23 PM PST இந்தியாவில் உள்ள 7 முக்தி தரும் புனித நகரங்களில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரித்துவாரும் ஒன்று. கங்கை நதியானது இந்திய சமவெளி பகுதியில் நுழையும் முதல் இடமாக அரித்துவார் உள்ளது. வடமாநிலங்களில் கும்பமேளா நடக்கும் 4 நகரங்களில் அரித்துவாரும் ஒன்றாகும். அமாவாசையை முன்னிட்டு அரித்துவாரில் 6 ஆண்டுகளுக்கு ஒ |
| டெல்லியில் கடும் பனி–புகை மூட்டம்: விமானம், பஸ், ரெயில் சேவை பாதிப்பு Posted: 07 Feb 2016 08:55 PM PST வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. சிம்லாவில் நேற்று அளவுக்கு அதிகமான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தலைநகர் டெல்லியில் நேற்றும் இன்றும் கடுமையான பனி பெய்தது. இன்று அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. |
| ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்: பொதுமக்களுக்கு எப்.டி.ஏ. அறிவுறுத்தல் Posted: 07 Feb 2016 08:23 PM PST ஆன்லைனில் சட்டவிரோதமாக மருந்து பொருட்கள் விற்பனை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி பல மருந்து நிறுவனங்கள் தரமற்ற மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடிய மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால் பொது மக்கள் அதிகளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் விதிமுறைப்படி டாக்டர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ஆன்லைனில் மருந்து பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடி |
| முதல்-மந்திரி சித்தராமையா மீது எடியூரப்பா, குமாரசாமி கடும் தாக்கு Posted: 07 Feb 2016 06:05 PM PST மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி சித்ரதுர்காவில் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியை அழிக்க முதல்-மந்திரி சித்தராமையாவே போதும். திறமை இல்லாத, புகார்களுக்கு ஆளான மந்திரிகளை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன பூஜாரி கூறி இருக்கிறா |
| பா.ஜனதா-காங். மோதல் எதிரொலி: பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறுமா? Posted: 07 Feb 2016 04:00 PM PST பாராளுமன்ற கூட்டத்தொடர் என்றாலே ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி, சபையை முடக்குவதை வாடிக்கையாக்கி வருகின்றன. இதற்கு கடந்த ஆண்டு நடந்த மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் நல்ல உதாரணங்களாக அமைந்தன. |
| டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரான்சு விமானம் லாகூரில் அவசரமாக தரை இறக்கம் Posted: 07 Feb 2016 03:15 PM PST டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்று பிரான்சு தலைநகர் பாரீசுக்கு 374 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. |
| பாராளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற விடாமல் காங்கிரஸ் தடுக்கிறது: வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு Posted: 07 Feb 2016 02:49 PM PST ஐதராபாத் வந்த பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாராளுமன்றத்தை முடக்குவதற்கு நொண்டிச் சாக்கு கூறுவதையும், மசோதாக்களை நிறைவேறவிடாமல் தடுப்பதையும் காங்கிரஸ் நிறுத்திக்கொள்ளவேண்டும். பாராளுமன்றத்தில் இடையூறு செய்வதும், |
| Posted: 07 Feb 2016 02:48 PM PST பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் புகுந்து கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றினர். |
| அரியானா மாநிலத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வருமான வரி அதிகாரி கைது Posted: 07 Feb 2016 02:26 PM PST அரியானா மாநிலத்தில் சிர்சா நகரில் வருமான வரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்தவர், நிதின் கார்க். இவர், அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றின் அதிபருக்கு 2013-14 நிதி ஆண்டுக்கான வருமான வரி |
| பெங்களூருவில் சிகிச்சை முடிந்து கெஜ்ரிவால் டெல்லி திரும்பினார்: மந்திரிகளுடன் ஆலோசனை Posted: 07 Feb 2016 01:46 PM PST டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர் இருமல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் இயற்கை மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ந் தேதி சேர்ந்தார். அங்கு சிகிச்சை முடிந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று டெல்லி திரும்பினார். |
| Posted: 07 Feb 2016 01:06 PM PST மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் நீதிபதிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஏதுவாக நீதித்துறை தரம் மற்றும் பொறுப்புடைமை மசோதா என்ற பெயரில் ஒரு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு 15-வது மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அந்த மசோதா காலாவதியாகி விட்டது. |
| சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது: ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பேட்டி Posted: 07 Feb 2016 12:19 PM PST கடல் மட்டத்தில் இருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனிமலை பகுதியில் கடந்த வாரம் தமிழ்நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உள்பட 10 பேர் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. உடல்களை தேடும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. |
| இந்தியாவில் 8.6 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக தகவல்: அதிக எண்ணிக்கையில் ஆந்திரா முதலிடம் Posted: 07 Feb 2016 10:13 AM PST டெல்லியை சேர்ந்த வேத் பால் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்ற தகவல்கள் பின்வருமாறு:- 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மேப்பிங் ஆய்வின்படி இந்தியாவில் 8.6 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதில், 19 சதவீதம் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |