Tamil Star |
- பன்னீர் பிடிக்குமா? கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்
- கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
- ஒரே இரவில் இரு வேறு கொள்ளைச் சம்பவங்கள்
- நகரபிதாக்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள ரொரன்ரோ நகரபிதா ஒட்டாவா பயணம் –
| பன்னீர் பிடிக்குமா? கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள் Posted: 05 Feb 2016 05:01 PM PST
ஆனால், பன்னீரை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. 100 கிராம் பன்னீரில் 18 கிராம் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது, இந்த புரோட்டின் சத்தானது உடலில் உள்ள தசைகளின் வலிமைக்கு உதவுகிறது. பன்னீரும் பாலில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், பாலில் கிடைக்கும் அனைத்து சத்துக்களும் பன்னீரில் இருந்து கிடைக்கின்றன, மேலும் கால்சியம் சத்து அதிகளவில் நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 28 கிராம் பன்னீரில் 82.5 கலோரி உள்ளது. புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது, அதுமட்டுமின்றி இதயநோய்களிலிலுந்தும் தடுக்கிறது. பன்னீரை எப்படி சமையலில் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். சிலர் எண்ணெயில் வறுத்த பனீரை உணவில் சேர்ப்பார்கள். இது ஆரோக்கியமல்ல. கீரையுடன் சேர்த்து செய்யும் பாலக் பன்னீர், எண்ணெய் இல்லாமல் செய்யும் பன்னீர் டிக்கா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். பன்னீர் கலந்த உணவுகளையும் அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல், வாரம் இரு முறை என்று அளவோடு உட்கொள்ளலாம். அதிகமாக எடுத்துக் கொண்டால் ஜீரண கோளாறுகள் ஏற்படலாம். 50 கிராம் அளவு பன்னீர் வளரும் பருவத்தினருக்கும் உடல் நல பாதிப்பு உடையோருக்கு 10-15 கி அளவு பன்னீரும் பரிந்துரைக்கப்படுகின்றது. பன்னீர் உணவுக்கு அதிக சுவை ஊட்டுவதால் பல வகையான உணவு முறைகளில் பன்னீர் சேர்க்கப்படுகின்றது. இருப்பினும் பன்னீரினை சாலட், பொரியல் இவற்றின் மீது தூவி சாப்பிடுவதே எளிதான முறை மட்டுமல்லாமல் உடலுக்கு நல்லதும் ஆகும். The post பன்னீர் பிடிக்குமா? கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள் Posted: 05 Feb 2016 04:59 PM PST
ஒரு புறம் ஜிம்மில் உடற்பயிற்சி, மறுபுறம் பசியை தீர்ப்பதற்காக கண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் கலோரி குறைவான உணவுகளை எடுத்துக்கொண்டால் கட்டான உடலமைப்பை பெறலாம். எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ, அதிக எடையோ சேர்க்காது என்பதை தெரிந்து கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். பாதாம் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான கொழுப்பை தரும். தேவையில்லாத கொழுப்பை உடலில் சேர விடாது. புரதம், விட்டமின் இ, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியமான நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். முந்தைய நாள் ஊறவைத்த பாதாமை தோல் உரித்து மறுநாள் சாப்பிடுவது நல்லது. ஒருநாளைக்கு ஐந்து பாதாம்களுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆப்பிள் ஆப்பிளில் உள்ள பெப்டின், மெதுவாக செரிமானமாக உதவும். வயிறு நிறைந்த உணர்வை தரும். ஆன்டி ஆக்சிடன்ட், விட்டமின் சி, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பசியின்மை பிரச்சனையை போக்கும். வாரத்தில் மூன்று நாட்கள், ஆப்பிளை சாப்பிடலாம். வாழைப்பழம் வாழையில் உள்ள பொட்டாஷியம் சத்து, மாவு சத்தை உடலுக்குள் கிரகிக்க உதவும். வயிறு நிறைந்த உணர்வும், கல்லீரலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும். பசித்த வயிறுக்கு தேவையான கலோரிகள் கிடைப்பதால் அதிக அளவு உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இரவு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ப்ராக்கோலி புற்றுநோயை எதிர்க்க கூடியது, ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பக புற்றுநோயை தடுக்கும் வல்லமை பெற்றது. நூறு கிராம் ப்ராக்கோலியில், 30 கலோரிகள் கிடைக்கும். இதனுடன் கால்சியம், நார்ச்சத்து கிடைப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். பிரவுன் அரிசி ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. பைட்டோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் குறையும். கொழுப்பை சேரவிடாத மாவு சத்துதான் இதில் உள்ளது என்பதால் தினமும் வெள்ளை அரிசிக்கு பதிலான பிரவுன் அரிசிக்கு மாறலாம். சீரான எடையை பராமரிக்க எளிய வழி. கேரட் நீர் சத்து, நார்சத்து அதிகம் இருப்பதால் பசித்த நேரத்தில் சாப்பிட பசியும் போகும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும். கலோரிகளை எரிக்கும் உணவாக இருக்கும். இதிலுள்ள பீட்டா கரோட்டீன் பார்வை திறனை கூர்மையாக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொள்ளு கொழுப்பை கரைக்க கூடியது கொள்ளு. கொழுப்பை எரிக்கும். உடலில் தேவையில்லாத கெட்ட கொழுப்பை கரைத்துவிடும். மாவுசத்துக்கள் கொழுப்பாக சேராமல் தடுக்கப்படும். இதய நோய், மூப்படைதல் ஆகியவை தடுக்கப்படும். The post கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒரே இரவில் இரு வேறு கொள்ளைச் சம்பவங்கள் Posted: 05 Feb 2016 09:10 AM PST
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, நேற்று நள்ளிரவு 11.50 அளவில் ஜேன் வீதி மற்றும் ஃபின்ச் அவனியூ பகுதிச் சந்திப்புக்கு வடக்கே, இலக்கம் 25 Stong Courtஇற்கு தாங்கள் சென்றிருந்தாகவும் காவல்த்துறையினர் கூறியுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் குறைந்தது மூன்று நபர்கள் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த மூவரில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று சந்தேக நபர்களுமே கறுப்பு நிற தொப்பியுடன் கூடிய குளிர் அங்கி அணிந்திருந்ததாகவும், துப்பாக்கி வைத்திருந்தவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க கறுப்பு இன ஆடவர் எனவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை பீட்சா வினியோக ஊழியர் கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம்பெற்ற சுமார் 30 நிமிடங்களில், குறித்த இடத்திலிருந்துட சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வேறு ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Sentinel வீதி மற்றும் Murray Ross Parkway பகுதியிலேயே அந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த இரண்டாவது கொள்ளை நடவடிக்கையில் ஆறு பேர் தொடர்புபட்டுள்ளதாகவும், அவர்களில் குறைந்தது இரண்டுபேர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தெரிவி்க்கப்படுகிறது. இரண்டாவது கொள்ளைச் சம்பவத்தின் போது கொள்ளையிடப்பட்ட நபர் காயங்களுக்கு உள்ளானதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பில் தகவல் அறிந்தோர் தமக்கு தகவல் வழங்குமாறும் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். The post ஒரே இரவில் இரு வேறு கொள்ளைச் சம்பவங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நகரபிதாக்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள ரொரன்ரோ நகரபிதா ஒட்டாவா பயணம் – Posted: 05 Feb 2016 09:03 AM PST
இந்த மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர். ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறியும் நகரபிதாக்களுக்கான இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக ஒட்டாவாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் மத்திய அரசியல் இருந்து ரொரன்ரோவுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்கினை பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை வழங்க உள்ளதாக நகர பிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். இந்த மாநாடு ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதிக்கான மாற்றுப் பாதைகள், இலகு தொடரூந்து திட்டம், நகரான்மை வீட்டுத் திட்டம் உள்ளிட்ட ரொரன்ரோவின் உட்கட்டுமான திட்டங்களுக்கான நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். The post நகரபிதாக்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள ரொரன்ரோ நகரபிதா ஒட்டாவா பயணம் – appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பன்னீர் பட்டர் மாசாலா என்றால் அதனுடன் சப்பாத்தி மற்றும் இதர உணவுகளை சேர்த்து சாப்பிடுவதற்கு என்றே ஏராளமான பிரியர்கள் இருப்பார்கள்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஒரு சில உணவுகளை பார்த்தவுடன் நாவின் ருசியை அடக்கிகொள்ள முடியாமல் வெளுத்துக்கட்டுகிறோம்.






ரொரன்ரோவில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வேளை பீட்சா வினியோக ஊழியர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வருவதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரு நகரங்கள், நகரங்களின் தலைவர்கள் கலந்துகொள்ளும் நகரபிதாக்களுக்கான மாநாடு இன்றும் நாளையும் ஒட்டாவாவி்ல் நடைபெறவுள்ளது.