Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. – பி.டி.பி. கூட்டணி உடைகிறது: ஆட்சி அமைக்க மெகபூபா மறுப்பு

Posted: 05 Feb 2016 11:06 PM PST

ஜம்மு – காஷ்மீர் மாநில முதல்–மந்திரியாக இருந்த பி.டி.பி. கட்சி நிறுவனர் முப்தி முகமது சயீத் கடந்த மாதம் 7–ந்தேதி மரணம் அடைந்தார். பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முப்தி முகமது சயீத் ஆட்சி அமைத்திருந்தார். முப்தியின் மறைவுக்கு பிறகு அவரது மகள் மெகபூபா காஷ்மீர் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் பி.டி.பி. – பா.ஜனதா கூட்டணி

விசாகப்பட்டினம் கடலில் போர் கப்பல்கள் அணிவகுப்பு: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி பார்வையிட்டனர்

Posted: 05 Feb 2016 09:41 PM PST

ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் 'ஐ.எப்.ஆர்.2016' என்ற பெயரில் சர்வதேச கப்பல் படை விழா 4 நாள் நடக்கிறது. கவர்னர் நரசிம்மன் நேற்று விழாவை தொடங்கி வைத்தார். 2–வது நாளான இன்று கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. மேலும் நடுக்கடலில் போர்க் கப்பல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மகளுக்காக நில ஒதுக்கீட்டில் சலுகை: குஜராத் முதல் மந்திரி மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Posted: 05 Feb 2016 08:43 PM PST

குஜராத் மாநில முதல் மந்திரி ஆனந்தி பென் தனது மகளோடு தொடர்பில் உள்ள பிரபல வணிக நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கியதில் சலுகை காட்டியதாக குற்றம்சாட்டியுள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆனந்தி பென் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சல்மான்கான் குடிபோதையில் தான் காரை ஓட்டினார்: சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு வாதம்

Posted: 05 Feb 2016 07:26 PM PST

மும்பை புறநகர் பகுதியான பாந்திராவில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி நள்ளிரவு நேரம் இந்தி நடிகர் சல்மான்கானின் கார் மோதி, நடைபாதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின்போது சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டியதாகவும், இதுவே விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை ஏறத்தாழ 13 ஆண்டுகளாக மும்பை செசன்சு கோர்ட்டில் நடைபெற்

திருமலையில் 14-ந்தேதி ரதசப்தமி: 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

Posted: 05 Feb 2016 07:02 PM PST

திருமலை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் விழாக்களில் தைமாதம் சப்தமியன்று கொண்டாடப்படும் ரதசப்தமி சிறப்பு பெற்றதாகும். சூரியன் தென்கோடியிலிருந்து வடபகுதிக்கு 7 குதிரைகள் பூட்டிய வாகனத்தில் தனது பயணத்தை தொடங்குவது இந்த நாளில்தான் என நம்பப்படுகிறது. எனவே ரத சப்தமியன்று திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் 7 வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரதசப்தமியாகும். அன்று காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் விலை உயர்ந்த தங்க, வைடூ

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது: சரத் பவார் பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 05 Feb 2016 04:47 PM PST

பள்ளிக்கூட புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது' என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சரத் பவார் கூறியதாவது:- பள்ளிக்கூட புத்தகங்களில் வரலாற்றை திரித்து வெளியிட்டு, இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இது தீங்கு விளைவிப்பதால், இது மிகவும் ஆபத்து நிறைந்தது. சமுதாயத்தில் நஞ்சை பரப்புவதற்காக, இது இளைஞர்களின் மனதில் கெடுதியை விதைக்கும் செயல் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இது மிகவும் தீவிரமான பிரச்சினை என்பதால், எழுத்தாளர்கள் இது தொடர்பாக கட்டுரை எழுத வேண்டும். விவாதங்களும் அரங்கேற வேண்டும்.

குஜராத் முதல்வர் மகள் மீது நில மோசடி புகார்: பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 05 Feb 2016 04:09 PM PST

குஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் படேலின் மகள் மீது நில மோசடி புகார் வந்திருப்பதையொட்டி ஆனந்திபென் பட்டேல் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆனந்திபென் பட்டேல் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மகள் அனார்ஜெஷ் பட்டேல், வெய்ல்டு உட்ஸ் ரிசார்ட்ஸ் மற்றும் ரியாலிட்டிஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.

கெயில் நிறுவனத்துக்கு எரிவாயு குழாய் பதிக்க அனுமதி: விவசாயிகள் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

Posted: 05 Feb 2016 03:19 PM PST

கெயில் நிறுவனத்துக்கு எரிவாயு குழாய் பதிக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில், 7 மாவட்ட விவசாயிகள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக குழாய் மூலம் திரவ எரிவாயுவை கொண்டு செல்ல கெயில் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும்: நிதி அமைச்சக ஆலோசனை கமிட்டி யோசனை

Posted: 05 Feb 2016 01:12 PM PST

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும், 'பான்' எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அருண் ஜெட்லியிடம் மத்திய நிதி அமைச்சக ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் யோசனை தெரிவித்தனர். மத்திய பட்ஜெட், வருகிற 29-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்துடன் இணைந்த ஆலோசனை

ரூ.1 கோடி சம்பளத்துடன் மைக்ரோசாப்ட்டில் வேலை பெற்ற வெல்டரின் மகன்

Posted: 05 Feb 2016 11:19 AM PST

இன்னும் சில மாதங்களில் ஐ.ஐ.டி காரக்பூரில் பட்டப்படிப்பை நிறைவு செய்யவுள்ள வத்சல்யா சிங்(வயது 21) என்ற மாணவருக்கு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 1.02 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதில், சிறப்பம்சம் என்னவெனில் வத்சல்யாவின் தந்தை ஒரு வெல்டர் ஆகும். எளிய குடும்பத்தில் இருந்து வந்த வத்சல்யா, 2009 ஆம் ஆண்டு

குஜராத்: ஆற்றுக்குள் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

Posted: 05 Feb 2016 09:17 AM PST

குஜராத் மாநிலத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநில அரசு பேருந்து 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சூரத் அருகில் உள்ள நவ்சாரியில் இருந்து இன்று மாலை உகாய் நோக்கி புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில், 20 அடி உயரம் உள்ள

பிரதமருடைய வேலை நாட்டை வழிநடத்துவது, சாக்குபோக்கு சொல்வதல்ல: மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி

Posted: 05 Feb 2016 08:33 AM PST

கடந்த மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பழிவாங்க ஒரு குடும்பம் பாராளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்குகிறது என்று சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி மீது பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக குற்றம் சாட்டியிருந்தார். அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தின் மோரான் நகரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய போது மோடி இந்த கருத்தினை

குஜராத்தில் கோர விபத்து: ஆற்றுக்குள் அரசு பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

Posted: 05 Feb 2016 06:47 AM PST

குஜராத் மாநிலத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநில அரசு பேருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சூரத் அருகில் உள்ள நவ்சாரியில் இருந்து இன்று மாலை உகாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில், பூர்ணா ஆற்றுப்

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள்

Posted: 05 Feb 2016 06:08 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கில் உயிரிழந்த 10 ராணுவ வீரர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 19,600 அடி உயரத்தில் உள்ள லடாக்கின் வடக்கு பனி முகட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவு அங்கிருந்த ராணுவ முகாமை மூடியது. இங்கு மெட்ராஸ் ரெஜிமென்ட்

ஜனாதிபதி மாளிகையின் பிரபல மொகல் தோட்டம் 12-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

Posted: 05 Feb 2016 06:03 AM PST

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தினுள் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மொகல் தோட்டம் என்றழைக்கப்படும் அழகிய மலர்த்தோட்டம் ஒன்றுள்ளது. இந்த மொகல் தோட்டத்தில் ஏராளமான மூலிகை மரங்கள், போன்சாய் செடிகள், அரியவகை மரங்கள் மற்றும் பலவகை பூஞ்செடிகளும் உள்ளன. குறிப்பாக பருவக் காலங்களில் கண்ணைக் கவரும்

மும்பையைச் சேர்ந்த ஐ.எஸ். ஆதரவாளர் டெல்லியில் கைது: சிறப்பு போலீஸ் படை அதிரடி நடவடிக்கை

Posted: 05 Feb 2016 05:58 AM PST

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அனுதாபி என சந்தேகிக்கப்படும் நபரை டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு இன்று கைது செய்துள்ளது. மும்பை மேற்கு மலாட் பகுதியைச் சேர்ந்த மொசின் என்ற வாலிபர், இன்று டெல்லி பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது, அவரை டெல்லி சிறப்பு போலீஸ் படையினர் சுற்றி வளைத்து, ஐ.எஸ். தீவிரவாத இயக்க அனுதாபி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்தபோது 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: கேரளா அரசு திட்டவட்டம்

Posted: 05 Feb 2016 04:59 AM PST

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பனை 18 படியேறி தரிசனம் செய்வதற்கு, 41 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடியுடன் வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர். கோயிலின் புனிதத்தை காக்கும் பொருட்டு, மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் பருவம் அடைவதற்கு

பத்திரிகையாளர் கொலை வழக்கு: சோட்டா ராஜன் குரல் மாதிரியை கேட்கும் சி.பி.ஐ.

Posted: 05 Feb 2016 03:45 AM PST

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மும்பை நிழலுலக தாதா சோட்டா ராஜன் மீது, மகாராஷ்டிராவில் பத்திரிகையாளர் ஜே டே கொலை வழக்கு உள்ளிட்ட சுமார் 70 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜே டே கொலை வழக்கு திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புச்

தேர்தல் தோல்விக்கு பழிவாங்க ஒரு குடும்பம் பாராளுமன்றத்தை முடக்குகிறது: சோனியா மீது மோடி தாக்கு

Posted: 05 Feb 2016 03:23 AM PST

கடந்த மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பழிவாங்க ஒரு குடும்பம் பாராளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்குகிறது என்று சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி மீது பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தின் மோரான் நகரில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி

திருப்பதி தரிசனம், இலவச தங்குமிடத்துக்கு முன்பதிவு செய்ய விரைவில் புதிய அப்ஸ் அறிமுகம்

Posted: 05 Feb 2016 02:54 AM PST

திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனம் செய்வதற்கும், இலவச தங்குமிடத்துக்கும், மொட்டை போடுவதற்கும் முன்பதிவு செய்ய விரைவில் புதிய அப்ஸ் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக திருப்பதி - திருமலா தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தானத்தின் செயல் இயக்குனர் சாம்பசிவ ராவ், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™