Tamil Star |
- இந்த ஆண்டிலிருந்து கனடாவின் குடிவரவு நடைமுறைகளில் மாற்றம்
- நெடுஞ்சாலை 401 விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன சாரதி தப்பி ஓட்டம்
- அனைத்துலக அமைதிகாக்கும் படையணியில் இணைந்துகொள்ளும் தயார் நிலையில் கனேடிய படைகள் இல்லை
| இந்த ஆண்டிலிருந்து கனடாவின் குடிவரவு நடைமுறைகளில் மாற்றம் Posted: 03 Feb 2016 08:59 AM PST
கடைசியாக நடைபெற்ற கனேடியப் பொதுத் தேர்ல் பரப்புரைகளின் போது நாட்டின் குடிவரவு நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்திருந்தார். அப்போது வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாகவே தற்போது கனடாவின் குடிவரவு நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் மற்றும் பெற்றோரின் பெற்றோர்களை கனடாவுக்கு அழைப்பதற்கான வீசா விண்ணப்ப அனுமதியின் எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு 5,000ஆக உள்ள நிலையில், அதனை புதிய நடைமுறையில் பிரகாரம் 10,000 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப ரீதியான குடிவரவு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கான காலம் விரைவு படுத்தப்படும் அதேவேளை அதற்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டள்ளது. விண்ணப்பதாரிக்கு கனடாவில் ஏற்கனவே சகோதரர்கள் இருப்பின் கனேடிய விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கான புள்ளிகள் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அகதிகள் மற்றும் அரசியல் தஞ்சம் கோருபவரகளாக கனடாவுக்குள் நுளைந்து, அவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்கான மருத்துவ உதவிகளை இலவசமாக்கும் நடைமுறையும் மீள அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பிள்ளைகளை அழைத்துக் கொள்வதற்கான வயது எல்லை 19 இலிருந்து 22 ஆக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றுடன் மேலும் சில நடைமுறைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. The post இந்த ஆண்டிலிருந்து கனடாவின் குடிவரவு நடைமுறைகளில் மாற்றம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நெடுஞ்சாலை 401 விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன சாரதி தப்பி ஓட்டம் Posted: 03 Feb 2016 08:27 AM PST இன்று புதன்கிழமை நெடுஞ்சாலை 401 இல் வாகன விபத்து ஒன்று இடம்பெற்ற நிலையில், விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு ஸ்காபரோவில் உள்ள வீதியோரத் தடுப்புச் சுவர் ஒன்றுடன் குறித்த வெள்ளைநிற Mercedes G Class SUV மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு சற்று முன்னராக Kennedy வீதிக்கும் westbound lanes இற்கும் இடையப்பட்ட நெடுஞ்சாலை 401 இந்த விபத்து இடம்பெற்றள்ளது. விபத்தை அடுத்து சம்பவ இடத்தில் […] The post நெடுஞ்சாலை 401 விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன சாரதி தப்பி ஓட்டம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அனைத்துலக அமைதிகாக்கும் படையணியில் இணைந்துகொள்ளும் தயார் நிலையில் கனேடிய படைகள் இல்லை Posted: 03 Feb 2016 06:58 AM PST
கனேடிய இராணுவத்தினை அனைத்துலக அமைதி காக்கும் படையில் மீண்டும் இணைத்துக் கொள்ளவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் அனைத்துலக அமைதிகாக்கும் படையணியில் இணைந்துகொள்ளும் தயார் நிலையிலேயே கனேடிய படைகள் இல்லை என சுயாதீன நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் வேறொரு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நவீன உலகத்திற்கான அமைதி காப்பு பணிகள் சிக்கல் மிக்கவை என்றும், அதற்கு ஆழமான பல்வேறு பயிற்சிகளும் அறிவூட்டல்களும் தேவைப்படுவதாகவும் கனடாவின் அமைதிகாக்கும் படைகளுக்கான முத்த நிபுணர்களில் ஒருவரும், கனேடிய படையியல் கல்லூரி பேராசிரியருமான வால்ட்டர் டோர்ன் தெரிவித்துள்ளார். கடந்த தசாப்தத்தின் போது கண்டஹாரில் மேற்கொண்ட போர் அனுபவங்கள் உள்ளிட்ட ஆற்றல்கள் கனேடிய இராணுவத்தின் அமைதி காப்பு பணிகளுக்கு துணையாக அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தள்ளார். எனினும் தற்போதய உலக சூழ்நிலைகளுக்கு அவை போதுமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதிகாப்பு படையில் சேர்ந்து கொள்வதற்கு தேவையான தகுதிகள் மற்றும் பயிற்சிகள் அடிப்படையில், ஏனைய நாடுகள் சிலவற்றுடன் ஒப்பிடுகையில் கனடா பின்தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் ஐக்கிய நாடுகள் சபையின் நியமனங்களுக்கு அமைவான நடைமுறைகள், திறமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் கனேடியப் படைகளுக்கு மேலதிக அறிவூட்டங்களும் பயிற்சிகளும் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். The post அனைத்துலக அமைதிகாக்கும் படையணியில் இணைந்துகொள்ளும் தயார் நிலையில் கனேடிய படைகள் இல்லை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கனடாவின் குடிவரவு நடைமுறைகள் இந்த ஆண்டிலிருந்து மாற்றங்காணவுள்ளது.
அனைத்துலக அமைதிகாக்கும் படையணியில் இணைந்துகொள்ளும் தயார் நிலையில் கனேடிய படைகள் இல்லை என சுயாதீன நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.