Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


திரையுலகில் சிவகார்த்திகேயனின் 5வது வருடம்...!

Posted:

இன்றைய வசூல் நாயகனாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடம் முடிந்து, ஐந்தாவது வருடம் ஆரம்பமாகிறது. 2012ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அடுத்த ஒரு மாதத்திலேயே அவர் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த '3' படமும் ...

சித்தார்த்துக்கு கதை பண்ண இளைஞர்படை

Posted:

அரண்மனை -2 படத்தில் தன்னை டம்மியாக்கிவிட்ட கோபத்தில் இயக்குநர் சுந்தர்.சி உடன் சித்தார்த் தகராறு செய்தார் என்று திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவரை குறிப்பிடும் வகையில் தான் நாகூர் பிரியாணி - நாய் உதாரணம் சொல்லி சில தினங்களுக்கு முன் ட்வீட் பண்ணினாராம் சித்தார்த். அதை ரஜினி, தனுஷுக்கு எதிராக சிலர் திருப்பிவிட்டதும் ...

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஜீவா

Posted:

ஜீவா நடித்து எந்தவொரு படமும் சமீபத்தில் ஹிட்டாகவில்லை. ஆனால் அவருக்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான படம் - யான். ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. ஜீவா நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட யான் படம் ...

இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் 8 படங்கள்

Posted:

குறிப்பிட்ட ஒரு ஹீரோ நடித்த படம் நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்தால் அவரை மக்கள் மறந்துவிடுவார்கள். அதனால் நீண்டகாலமாக படம் வெளியாகாமல் இருப்பது ஹீரோக்களுக்கு ஆபத்தான விஷயம்தான். நீண்ட இடைவெளி எப்படி ஒரு ஹீரோவுக்கு ஆபத்தான விஷயமோ... அதுபோலவே ஒரு ஹீரோ நடித்த படம் அடிக்கடி வெளியாவதும் ஆபத்தில் முடிந்துவிடும்.

ஒரு காலத்தில் கொடி ...

'நான் நிஜமான போலீஸ் தெரியுமா” - மகனை மிரட்டிய நிவின்பாலி..!

Posted:

மலையாள நடிகர் நிவின்பாலியின் நான்கு வயது மகன் தாவீத் படு சுட்டி.. இரண்டு வயதாகும்போது இருந்தே, நிவின்பாலி டிவி ஸ்கிரீன்களில் அடிக்கடி தோன்றுவதை கண்டு, "இந்தா அப்பா அடிக்கிறார்.. இந்தா அப்பா டான்ஸ் ஆடுறார்" என அவரை அடையாளம் கண்டுபிடிக்கும் அளவுக்கு சூட்டிகையான பையனாக மாறிவிட்டானாம். முதலில் எல்லாம் அவரது படத்தை டிவியில் கண்டால் ...

நயன்தாராவாக மாறப்போவது வித்யாபாலனா..? கங்கனாவா..?

Posted:

மலையாளத்தில் மம்முட்டி நயன்தாரா நடித்துள்ள படம், இந்தியில் ரீமேக்காக போகிறது என்கிற செய்தி வெளியாகியுள்ளது. உடனே கடந்த வருடம் சித்திக் இயக்கத்தில் இவர்கள் இருவர் நடிப்பில் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் தானே அது என்று தான் நினைக்க தோன்றும். காரணம் ஏற்கனவே சித்திக்கின் 'பாடிகார்டு' படம் ஹிந்திக்கு போய் வெற்றிக்கொடி ...

400 தியேட்டர்களில் மிருதன்

Posted:

2015 ஆம் வருடத்தில் ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் ஜெயம்ரவி. எனவே அவரது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள மிருதன் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. ரசிகர்கள் ஒரு பக்கம் மிருதன் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தியேட்டர்காரர்கள் மத்தியிலும் மிருதன் ...

ஜில் ஜங் ஜக் என்றால் என்ன? சித்தார்த் விளக்கம்

Posted:

'எடாகி என்டர்டெயின்மென்ட்' என்ற தனது நிறுவனம் சார்பில் நடிகர் சித்தார்த் முதன் முதலாக தயாரித்துள்ள படம் 'ஜில் ஜங் ஜக்'. குறும்பட இயக்குநரான தீரஜ் வைத்தி என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வருகிற 12-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தில் ஒரு புதுமை உண்டு. என்ன?

ஜில் ஜங் ஜக் படத்தில் கதாநாயகி கிடையாது. கதாநாயகி இல்லாமல் ...

தலைமறைவாக இருந்த சிம்பு, பிறந்தநாளில் வெளியே வந்தார்

Posted:

நடிகர்களின் பிறந்தநாள் என்றால் பிரம்மாண்டமான கேக் வெட்டுதல், ரசிகர்களுடன் கொண்டாட்டம், அனாதை இல்லங்களுக்கு சென்று அன்னதானம், நண்பர்களுக்கு பார்ட்டி என்று களைகட்டும். இன்று சிம்புவின் பிறந்தநாள். மேற்சொன்ன எந்த வைபவமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே எளிமையாக தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் சிம்பு.
சிம்புவின் பிறந்தாள் படு ...

பிரகாஷ்ராஜ்க்கு ஆண் குழந்தை

Posted:

நடிகர் பிரகாஷ் ராஜ் - போனி வர்மா தம்பதியருக்கு இன்று(பிப்.3ம் தேதி) ஆண் குழந்தை பிறந்தது. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட திரைபிரபலங்களில் நடிகர் பிரகாஷ் ராஜூம் ஒருவர். இவருக்கும் நடிகை லலிதா குமாரிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரகாஷ்ராஜ்க்கும், லலிதாவுக்கும் இடையே ஏற்பட்ட ...

காமிக்ஸ் புத்தமாக வரும் 'பாகுபலி'

Posted:

இந்தியத் திரையுலகத்தையே ஆச்சரியப்பட வைத்த திரைப்படமாக கடந்த ஆண்டு வெளிவந்த 'பாகுபலி' படம் அமைந்தது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்த இந்தப் படம் சுமார் 700 கோடி ரூபாய் வரையில் வசூலித்து இந்தியத் திரையுலகத்தில் சாதனை படைத்தது. தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளிலும் இப்படத்தைத் ...

அருள்நிதி வழியில் உதயநிதி

Posted:

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனான அருள்நிதி வம்சம் படத்தைத் சொந்தமாக தயாரித்து ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த அத்தனை படங்களும் அவரது சொந்தப்படம்தான். இந்நிலையில் தற்போது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆறாது சினம் என்ற படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. அதாவது முதன்முறையாக வேறு தயாரிப்பாளரின் படத்தில் ...

சிவி குமார் படத்திலிருந்து விலகிய டாப்சி

Posted:

சூதுகவ்வும், பீட்சா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களை தயாரித்த சி.வி.குமார் தற்போது இறைவி, எஸ்கிமோ காதல் போன்ற படங்களில் பிசியாகவுள்ளார். சிவி குமார் அடுத்து தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் சுதீப் கிஷான் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிகை நடிகை டாப்சி நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது டாப்சி ...

சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதி

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகரும், அரசியல் பிரபலமுமான சிரஞ்சீவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி எனும் மருத்துவமனையில் சிரஞ்சீவி தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்தவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அறுவை சிகிச்சை முடிந்ததும் ஒரு வார காலம் மருத்துவமனையில் ...

மீண்டும் வருணுடன் டூயட் பாடும் ப்ரக்யா

Posted:

இரண்டாம் உலகப் போரை மையப்படுத்திய காதல் கதையம்சம் கொண்ட 'கஞ்சே' திரைப்படம் வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்றது. சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி என பலரும், டோலிவுட்டிற்கு முற்றிலும் புதிதான இப்படத்தை மிகவும் பாராட்டினர். தற்போது இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. கஞ்சே படத்தின் இயக்குனர் கிரிஷ் ...

ரஜினிகாந்த் வாழ்க்கைத் திரைப்படம், மணிரத்னம் பதில் என்ன ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் தன்னுடைய ஸ்டைலால் அதிகம் பேசப்படும் ஒரு நடிகர் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார். ஐந்தே ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை ...

கமல்ஹாசன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன்?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிக்கு எதிராக நடித்த வில்லன்களை விட அவருக்கு எதிராக 'படையப்பா' படத்தில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இன்று வரை பேசப்படும் நடிகையாக இருக்கிறார். அந்த 'நீலாம்பரி' கதாபாத்திரம் போல் வேறு யாரும் இதுவரை அவர்களது நடிப்பில் பிரகாசிக்கவில்லை. தெலுங்குடன் ஒப்பிடும் போது தமிழில் அதிகப் படங்களில் ரம்யா ...

கடைசி கட்ட படப்பிடிப்பில் 'கபாலி'

Posted:

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கும் 'கபாலி' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து வருகிறது. ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. அதன் பின் மலேசியாவில் ...

கவர்ச்சிக்கு தமன்னா-நடிப்புக்கு நயன்தாரா! -சிருஷ்டி டாங்கே

Posted:

சில படங்களில் துக்கடா வேடங்களில் நடித்த சிருஷ்டி டாங்கே, மேகா படத்தில் முழு நாயகியாக நடித்தார். அதோடு தனது பளீர் சிரிப்பினால் இளவட்ட ரசிகர்களை சுண்டியிழுத்தார். அதனால் இந்த படத்திலிருந்து சிருஷ்டியின் கோலிவுட் டார்க்கெட் தொடங்கி விட்டது என்று ஆளாலுக்கு அவரை புக் பண்ணினார்கள். அதன்காரணமாக தற்போது அவரது கைநிறைய படங்கள் ...

டைரக்டர் சுதாவின் மடியில் உட்கார்ந்த மாதவன்!

Posted:

டைரக்டர் சுதா இயக்கத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இறுதிச்சுற்று படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அப்போது அப்படக்குழுவினர் மட்டுமின்றி, படத்தை பார்த்த டைரக்டர்கள் சசி, ராஜேஷ், நடிகர்கள் சித்தார்த் உள்பட பலர் தங்களது கருத்தினை சொன்ன வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதையடுத்து, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™