மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- டெல்லியில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுப்பு
- தான்சானியா மாணவி தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தகவல்
- பிப்ரவரி 23-ல் தொடங்குகிறது மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
- இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்முறை: ஆந்திர போராட்ட குழு தலைவர் பத்மநாபம் கைதாகிறார்
- ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை
- 9-வது நாளாக தொடர்கிறது டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்
- சுப்ரீம் கோர்ட்டில் பிரதமர் மோடி மீது வழக்கு
- மாணவர்கள் மிரட்டல் எதிரொலி: மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு
- பெங்களூரில் தான்சானியா மாணவி மீதான தாக்குதல்: அறிக்கை தாக்கல் செய்ய சித்தராமையாவிற்கு ராகுல்காந்தி உத்தரவு
- பெண்கள் நலத்திட்டத்துக்காக கேரளாவில் புதிய லாட்டரி: உம்மன்சாண்டி தகவல்
- பீகாரைப் போல் உ.பி-யிலும் மெகா கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டம்
- கர்நாடகத்தில் சாலைகளை கட்டமைப்பதில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அமல்: நிதின் கட்காரி
- தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவோம்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் சித்தராமையா பேச்சு
- டெல்லியில் ஒரு காரில் 50 நவீன கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் சிக்கின - கடத்தி வந்த நபர் கைது
- தனியார் காவலாளிகளுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு
- சோலார் மோசடி வழக்கு: குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் - உம்மன்சாண்டி
- ஹேமமாலினி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மும்பையில் மனு தாக்கல்
- டெல்லியில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
- ஹாஜி அலி தர்கா விவகாரம்: அரசின் நிலைப்பாட்டை விளக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
- பாகிஸ்தானில் இருந்துதான் பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்கள் வெளிப்படுகின்றன: ராஜ்நாத்சிங்
| டெல்லியில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுப்பு Posted: 03 Feb 2016 11:04 PM PST டெல்லியில் துப்புரவு தொழிலாளர்கள் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் டெல்லி மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதற்கிடையே துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு |
| தான்சானியா மாணவி தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தகவல் Posted: 03 Feb 2016 10:59 PM PST பெங்களூரில் தான்சானியா நாட்டு கல்லூரி மாணவியை பொதுமக்கள் ஆடைகளை களைந்து அவமானப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசியதாவது:- |
| பிப்ரவரி 23-ல் தொடங்குகிறது மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு Posted: 03 Feb 2016 10:45 PM PST பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குகிறது. இரண்டு அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடைபெறும். டெல்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. |
| இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்முறை: ஆந்திர போராட்ட குழு தலைவர் பத்மநாபம் கைதாகிறார் Posted: 03 Feb 2016 10:33 PM PST ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காபு சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை துனி பகுதியில் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை தீவைத்து கொளுத்தினர். இதில் அந்த ரெயில் முற்றிலும் எரிந்து சேதமானது. |
| ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை Posted: 03 Feb 2016 09:20 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் ஒளிந்து கொண்டு தாக்குதலில் |
| 9-வது நாளாக தொடர்கிறது டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் Posted: 03 Feb 2016 09:13 PM PST டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 3 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளில் சுமார் 1.50 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை |
| சுப்ரீம் கோர்ட்டில் பிரதமர் மோடி மீது வழக்கு Posted: 03 Feb 2016 09:09 PM PST கடந்த 2014–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அப்போது குஜராத் முதல்–மந்திரியும், பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராகவும் இருந்த நரேந்திரமோடி ஆமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார். ஓட்டுப்பதிவு செய்த பின் மோடி வாக்குச்சாவடி முன்பு நின்று தாமரைச் சின்னத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த போட்டோவை பேஸ்புக், |
| மாணவர்கள் மிரட்டல் எதிரொலி: மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு Posted: 03 Feb 2016 08:59 PM PST ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் கடந்த மாதம் தற்கொலை செய்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மாணவர் தற்கொலைக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தூண்டுதலே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. |
| Posted: 03 Feb 2016 08:40 PM PST பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில் 35 வயது பெண் ஒருவர் இறந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து தாக்குதல் நடத்தினர். |
| பெண்கள் நலத்திட்டத்துக்காக கேரளாவில் புதிய லாட்டரி: உம்மன்சாண்டி தகவல் Posted: 03 Feb 2016 08:32 PM PST கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 'காருண்யா' என்ற பெயரில் நடத்தப்படும் லாட்டரி சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் பணம் ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. |
| பீகாரைப் போல் உ.பி-யிலும் மெகா கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டம் Posted: 03 Feb 2016 08:18 PM PST கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 178 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 58 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியை தழுவியது. |
| Posted: 03 Feb 2016 08:01 PM PST பெங்களூருவில் நேற்று தொடங்கிய சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசியதாவது:- கர்நாடகத்தில் சிராடி வனப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தல், |
| தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவோம்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் சித்தராமையா பேச்சு Posted: 03 Feb 2016 07:56 PM PST பெங்களூருவில் நேற்று தொடங்கிய சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:- கர்நாடகத்தில் தொழில் தொடங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வெளிப்படையாகவும், |
| டெல்லியில் ஒரு காரில் 50 நவீன கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் சிக்கின - கடத்தி வந்த நபர் கைது Posted: 03 Feb 2016 07:27 PM PST டெல்லியில் ஒரு நபர், காரில் ஏராளமான கைத்துப்பாக்கி, தோட்டாக்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரை மடக்கி பிடித்து சோதித்தபோது, அதில் 50 நவீன ரக |
| தனியார் காவலாளிகளுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு Posted: 03 Feb 2016 06:56 PM PST கார்ப்பரேட் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் போன்றவற்றில் தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளிகள் பணியில் உள்ளனர். நாடு முழுவதும் அவர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாக உள்ளது. ஆனால், அவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததாலும், |
| சோலார் மோசடி வழக்கு: குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் - உம்மன்சாண்டி Posted: 03 Feb 2016 06:50 PM PST சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் முன்பாக அண்மையில், முக்கிய குற்றவாளி சரிதா எஸ்.நாயர் தங்களது சோலார் பேனல் நிறுவனத்துக்கு உதவி செய்வதற்காக முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கு அவருடைய உதவியாளர் மூலம் ரூ.1 கோடியே 90 லட்சமும், மின்சாரத்துறை மந்திரி அரயாதன் முகமதுவுக்கு ரூ.40 |
| ஹேமமாலினி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மும்பையில் மனு தாக்கல் Posted: 03 Feb 2016 01:44 PM PST பிரபல நடிகையும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி நாட்டிய பள்ளி அமைக்க மும்பை புறநகர் ஒஷிவாரா பகுதியில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் ரூ.4 கோடி மதிப்பு கொண்டது. ஆனால் சதுர மீட்டருக்கு வெறும் ரூ.35 வீதம் மொத்தம் ரூ.70 ஆயிரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அவருக்கு |
| டெல்லியில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து இன்று அனைத்துக்கட்சி கூட்டம் Posted: 03 Feb 2016 01:05 PM PST பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும். இந்த தொடருக்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. |
| ஹாஜி அலி தர்கா விவகாரம்: அரசின் நிலைப்பாட்டை விளக்குமாறு நீதிமன்றம் உத்தரவு Posted: 03 Feb 2016 11:26 AM PST மும்பை ஒர்லி கடற்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்காவின் கருவறைக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நீக்க கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் மீது விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம் கன்னடே, இது |
| பாகிஸ்தானில் இருந்துதான் பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்கள் வெளிப்படுகின்றன: ராஜ்நாத்சிங் Posted: 03 Feb 2016 09:53 AM PST இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், இந்தியா அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் நடைபெற்று வரும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்தியாவில் நடைபெறும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |