Tamil Star |
- தவிர்க்ககூடாத சூப்பர் உணவுகள்: சாப்பிட மறந்துவிடாதீர்கள்!
- மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!
- கிழக்கு Gwillimbury இல் தீ சம்பவம்
- கனடாவில் 14 பேருக்கு ஸிகா நோய்
| தவிர்க்ககூடாத சூப்பர் உணவுகள்: சாப்பிட மறந்துவிடாதீர்கள்! Posted: 26 Feb 2016 07:21 PM PST
அப்படி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில சூப்பர் உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ப்ராக்கோலி ப்ராக்கோலியில் உள்ள விட்டமின் A சத்து, திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது, விட்டமின் K சத்து, எலும்புகளின் வலிமை மற்றும் இதய ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள விட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகறது. ப்ராக்கோலி சாப்பிட்டால், உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்கலாம்.
ப்ளுபெர்ரி இதில், ஆன்டி ஆக்ஸிடண்ட், விட்டமின் C, விட்டமின் E நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது, அதுமட்டுமின்றி புற்றுநோய், நரம்பியல் நோய் சிறுநீர்ப்பை அழற்சி, மற்றும் இதய பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு கப் ப்ளூபெர்ரியில் 83 கலோரி நிறைந்துள்ளது. எனவே உடம்பில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெய்யில் குறைந்த அளவிலான கொழுப்பு உள்ளதால், இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது. ஆன்டி ஆக்ஸிடண்ட், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தினால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். oily Fish இதில் உள்ள ஒமேகா 2 பேட்டி ஆசிட் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது, மேலும் லிமையான எலும்புகள், மூளையின் செயல்திறன், இதய ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. இதனை வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொண்டால், உங்கள் பணிகளை சிறப்பான முறையில் முடிப்பதற்கான ஆற்றல் கிடைக்கும். Yogurt(தயிர்) இது ஒரு புரோபயாடிக் என்பதால் உடலில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது, மேலும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், புரோட்டின், கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு 700மிகி Yogurt எடுத்துக்கொள்ளலாம்.
The post தவிர்க்ககூடாத சூப்பர் உணவுகள்: சாப்பிட மறந்துவிடாதீர்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்! Posted: 26 Feb 2016 06:43 PM PST
தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம். சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!! வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட. எலுமிச்சை, எலுமிச்சங்காய் எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும். புதினா புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். இஞ்சி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம். தண்ணீர் தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும். குறிப்பு மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும். ஜூஸ் செய்யும் முறை 1 வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம். The post மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிழக்கு Gwillimbury இல் தீ சம்பவம் Posted: 26 Feb 2016 09:41 AM PST
Dufferin வீதிக்கு அருகில் Bernhardt வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் காலை 9 மணியளவில் தீ பற்றிக் கொண்டதாகவும், அந்த தீ விரைவாக வீடு முழுவதும் பரவியதானவும் கூறப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்திருந்த தீ அணைப்புப் படையினர் அந்த தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடபட்டுள்ளதுடன், அந்த வீட்டின் அருகில் இருந்தவர்களையும் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றியுள்ளனர். தீப் பற்றிக்கொண்ட வீட்டில் இருந்து ஒருவர் மூச்சுத் திணறலுக்கு உட்பட்ட நிலையிலேயே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இன்னமும் கண்டறியப்படவில்லை. The post கிழக்கு Gwillimbury இல் தீ சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவில் 14 பேருக்கு ஸிகா நோய் Posted: 26 Feb 2016 09:01 AM PST
கடைசியாக சஸ்கச்சுவானில் ஒருவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு முன்னதாக ஒன்ராறியோ, அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய இடங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனடாவின் பொதுச் சுகாதார முகவர் அமைப்பு தனது இணையப் பக்கத்தில் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், இந்த நோய்த் தொற்றுக்கு ஆளான அனைவரும் வெளிநாடுகளுக்க பயணங்களை மேற்கொண்டவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நோய்க்கான வைரஸ்சைப் பரப்பும் நுளம்பு கனடாவில் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயானது கடந்த மே மாத்தில் இருந்து தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோ, கரிபியன் ஆகிய நாடுகளில் பரவி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு ஆளான பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் காட்டுவதில்லை என்றும், எனினும் பிரேசிலில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கற்பிணிகளுக்க பிறந்த குழந்தைகளின் தலை சிறியதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post கனடாவில் 14 பேருக்கு ஸிகா நோய் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

எந்த உணவில் உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளதோ அது சூப்பர் உணவுகள் தான்.




இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன.
கிழக்கு Gwillimbury இல் அமைந்துள்ள வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருர் மருத்துமனையில் அனுமதிக்கபபட்டுள்ளார்.
