Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கமல்ஹாசனின் அடுத்த படம் பற்றிய குழப்பம்

Posted:

'தூங்காவனம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றிய குழப்பம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, அவரும், அமலாவும் தமிழ், தெலுங்கில் நடிப்பதாகத் தகவல் வெளியான 'அம்மா ஆப்பா ஆட்டம்' படம் தற்போதைக்குத் தயாராகாது என்றும் தகவல் வெளியானது. கமல்ஹாசனும் ஸ்ருதிஹாசனும் முதல் முறையாக இணைந்து ...

அனுஷ்காவுடனான காதலை தொடர விரும்பும் ஹோக்லி

Posted:

கிரிக்கெட் வீரர்கள் - சினிமா நடிகைகள் இடையேயான காதல், சிலருக்கு திருமணத்திலும் முடிந்திருக்கிறது, காதலுடன் முறிந்தும் போய் உள்ளது. இதில் விராட் ஹோக்லி - அனுஷ்கா சர்மா இடையேயான காதல் எந்த ரகம் என்பது தற்போதைய சூழலில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் சில வருடங்களாக காதலித்த வந்த இந்த இருவரும், சமீபத்தில் தங்களது காதலை முறித்து ...

'ஹாத்தி மேரே ஷாத்தி' ரீ-மேக் : பிரபுசாலமன் இயக்குகிறார்

Posted:

சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில், ஹிந்தியில் ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் 'ஹாத்தி மேரே ஷாத்தி'. யானைகளை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் தமிழில் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 'நல்லநேரம்' என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. இந்நிலையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. ...

'அச்சம் என்பது மடமையடா' பாடல்கள் ரெடி

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. கடந்த வருடம் கௌதம் மேனன் இயக்கி அஜித் நடித்து வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தின் பாடல்களுக்கு கிடைத்த எதிர்பார்ப்பை விட இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் ...

சித்தார்த்தை மிரட்டினாரா பாலகிருஷ்ணா.?

Posted:

தமிழ்நாட்டில் கடந்த வருடக் கடைசியில் மழை, வெள்ளம் வந்த போது பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளான சென்னை, கடலூர் ஆகிய இடங்களில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் நண்பரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நிவாரணப் பணியாற்றியவர் சித்தார்த். அதன் பிறகு தான் பலருக்கும் ஞானோதயம் பிறந்து அவர்களும் களப்பணியில் இறங்கினர். ...

6 வருடத்தைத் தாண்டும் 'விண்ணைத் தாண்டி வருவாயா'

Posted:

இன்றைய இளைஞர்களிடம் அந்தக் காலத்துக் காதல் படங்களைப் பற்றிக் கேட்டால் கொஞ்சம்தான் தெரிந்து வைத்திருப்பார்கள். 'தேவதாஸ், நெஞ்சில் ஓர் ஆலயம், வசந்த மாளிகை, ஒருதலை ராகம், அலைகள் ஓய்வதில்லை, அந்த 7 நாட்கள், பூவே உனக்காக, காதல் கோட்டை, சேது, காதல்' ஆகிய படங்களில் உள்ள காதலைப் பற்றி பார்த்துதான் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், 6 ...

இன்று ரஜினிகாந்தின் 36வது திருமண நாள்

Posted:

தமிழ்த் திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் ரஜினிகாந்த். இந்தியத் திரையுலக நட்சத்திரங்களே அவரைப் பார்த்து வியந்து கொண்டிருக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர். தற்போது நாயகியாக வந்துள்ள கீர்த்தி சுரேஷ் முதல் கொண்டு அவருடன் ஜோடி ...

தோல்வி படங்கள் பற்றி பயமில்லை - அக்ஷ்ய்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷ்ய் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ஏர்லிப்ட்' படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபிஸிலும் இணைந்தது. அக்ஷ்ய் குமார் நிறைய ப்ளாப் படங்களையும் கொடுத்துள்ளார். ஆனால் அதுப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை என்கிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ...

கண்பார்வையற்றவராக நடிக்கும் யாமி கெளதம்

Posted:

தென்னிந்திய படங்கள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் அசத்தி வருகிறார் நடிகை யாமி கெளதம். இவர் இப்போது ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக காபில் என்ற படத்தில் நடிக்க உள்ளார். சஞ்சய் குப்தா இயக்கும் இப்படத்தை ராகேஷ் ரோஷன் தயாரிக்கிறார். இப்படத்தில் யாமியின் ரோல் எப்படிப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, படத்தில் யாமி கெளதம், கண்பார்வை ...

சிறையிலிருந்து வந்தவுடன் பட வாய்ப்பு பெற்ற சஞ்சய் தத்!

Posted:

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், சட்டத்திற்கு விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடியும் முன்னரே, நன்னடத்தை அடிப்படையில், நேற்று விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான சஞ்சய் தத் நேற்று ...

ருஸ்டம் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Posted:

ஏர்லிப்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு அக்ஷ்ய் குமார் நடித்து வரும் படம் 'ருஸ்டம்'. இப்படத்தில் அக்ஷ்ய்குமார் கடற்படை அதிகாரியாக நடித்து வருகிறார். நீரஜ் பாண்டே இயக்குகிறார். படத்தின் கதை 1950களில் நடப்பது போன்று படமாக்கப்படுகிறது. இதில் இந்தியா மற்றும் ஆங்கிலேயேர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகள் படத்தில் இடம்பெறுகிறது. ...

தீபிகாவின் முதல் ஹாலிவுட்படம் 2017, ஜன.20-ல் ரிலீஸ்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, இப்போது ஹாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். அவர் இப்போது தனது முதல் ஹாலிவுட் படமாக வின் டீசல் உடன் ''டிரிபிள் எக்ஸ் : தி ரிட்டர்ன் ஆப் எக்ஜேண்டர் கேஜ்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக இப்படத்திற்காக வின் டீசல் மற்றும் ...

நில ஆக்கிரமிப்பு விவகாரம் ; ஜெயசூர்யாவை விசாரிக்க கோர்ட் உத்தரவு..

Posted:

திறமையான நடிகர், அதேசமயம் மனிதநேயம் மிக்கவர் என்றுதான் மலையாள நடிகர் ஜெயசூர்யாவை பற்றி மலையாள திரையுலகமும் அவரால் உதவி பெற்றவர்களும் சொல்கிறார்கள்.. சில தினங்களுக்கு முன்பு கூட, நாடக பிரசங்கம் செய்யும் வயதான ஒரு கலைஞர் நோயாலும், அதற்கு சிகிச்சை பெற வசதியின்றி வறுமையாலும் வாடுவதாக சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியானது. ...

கபாலி தெலுங்கு உரிமை வாங்க போட்டிபோடும் பண்டல கனேஷ்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் கபாலி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் மெட்ராஸ் படப்புகழ் ரஞ்சித் இயக்கி வரும் கபாலி படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான உரிமையை வாங்க தெலுங்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி நிலவுகின்றது. பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் ...

பாலகிருஷ்ணா சிரஞ்சீவியை அவமதித்தாரா?

Posted:

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவியும், பாலகிருஷ்ணாவும் அரசியல் பிரமுகர்களாகவும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜ்ய சபா எம்.பியாக சிரஞ்சீவி பதவி வகித்து வருகின்றார். தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணா ஆந்திர மாநிலம் ஹிந்துபூர் எம்.எல்.ஏவாக உள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள லேபக்ஷி ...

கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளிவரும் பிரம்மோத்சவம்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோசவம் படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தெலுங்கு வருடப்பிறப்பான ஏப்ரல் 8 ஆம் தேதி திருப்பதியில் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மகேஷ் பாபு இப்படத்தில் சமந்தா, காஜல் ...

வருண்தேஜுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

ஸ்டையில் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சரைனொடு படத்தில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் அடுத்தாக இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்த ப்ரூஸ் லீ படத்திலும் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் ராகுல் ப்ரீத்தி சிங்கை தனது ...

மம்முட்டியின் வேகத்தை கட்டுப்படுத்திய பஹத் பாசில்..

Posted:

சில படங்கள் நன்றாக இருக்கும். நல்ல ஒப்பனிங்குடன் வசூலும் அமர்க்களமாக ஆரம்பமாகும் ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் சண்டிக்குதிரை நொண்டியடிப்பது போல வேகமாக நகர முடியாமல் தவிக்கும்.. மலையாளத்தில் கடந்த 12 தினங்களுக்கு முன் வெளியான மம்முட்டி-நயன்தாரா நடித்த 'புதிய நியமம்' படத்தின் நிலையும் தற்போது அந்த மாதிரித்தான் இருக்கிறது.. அழகான ...

ஜெயசூர்யாவின் பார்வையை மாற்றிய சன்னி லியோன்..

Posted:

பாலிவுட் நடிகையான சன்னி லியோனை கவர்ச்சி ஏரி, குளம் மற்றும் கவர்ச்சிக் கடல் என்று எப்படி சொன்னாலும் அது மிகையாகாது. ரசிகர்களை மட்டுமல்ல மற்ற மொழிகளை சேர்ந்த இளம் நடிகர்களுக்கும் சன்னி லியோன் என்றால் ஒரு 'இது' இருக்கத்தான் செய்கிறது.. அதற்கு மலையாள நடிகர் ஜெயசூர்யாவும் விதிவிலக்கல்ல.. அவர் சன்னி லியோனின் தீவிர ரசிகராக இருகிறார் ...

இன்று 'வேட்ட' ஆரம்பம் ; மீண்டும் 'த்ரில்'லுக்கு தயாராகும் கேரளா..

Posted:

திகில் படங்களா, த்ரில் படங்களா என்கிற கேள்வி வரும்போது பெரும்பாலான ரசிகர்கள் முதலில் டிக் பண்ணுவது த்ரில்லர் படங்களாகத்தான் இருக்கிறது.. அதிலும் மலையாள திரையுலகில் த்ரிஷ்யம்', 'புதிய நியம' படங்களுக்கு கிடைத்த வரவேற்பு 'ட்ராகுலா', 'மாந்த்ரீகன்' ஆகிய படங்களுக்கு கிடைக்கவில்லை என்பதையும் கவனிக்கவும்.. அந்த வகையில் கடந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™