Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


2016ஆம் ஆண்டுக்கான ஒன்ராறியோவின் வரவுசெலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது

Posted: 25 Feb 2016 10:00 PM PST

oj

oj2016ஆம் ஆண்டுக்கான ஒன்ராறியோவின் வரவுசெலவுத் திட்டம் நிதி அமைச்சர் Charles Sousaவினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள லிபரல் அரசாங்கத்தின் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

50,000 டெலர்களுக்கு குறைவான வருமானத்தை பெரும் குடும்பங்களின் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கான கட்டணம் இலவசமாக்கப்படும் என லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவற்றிற்கு மேலதிகமாக நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மானியங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.oj

83,000 டொலர்களுக்கு குறைவான வருமானத்தைப் பெறும் குடும்பத்தை சேர்ந்த 50 சதவீதத்திற்கும் மேலான மாணவர்களிற்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், இவர்களுக்கு வழங்கப்படும் இந்த மானியங்கள் மீண்டும் செலுத்தப்பட வேண்டியது இல்லை என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.

வயதான மற்றும் திருமணமான மாணவர்களுக்கான நிதி உதவிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறை மாத்திரம் மன்றில், பொருளாதார சுகாதாரத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட தொழில்துறைகள், காப்புறுதி, சுகாதாரம், மூத்தோருக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வைன் மற்றும் சிகரேற்றுக்கான விலை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2016ஆம் ஆண்டுக்கான ஒன்ராறியோவின் வரவுசெலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தின் முதல் முனையத்தில் மின் தடை

Posted: 25 Feb 2016 08:02 AM PST

Pearson_-_02252016

Pearson_-_02252016பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தின் ஒரு பகுதிக்கு இன்று அதிகாலையில் மின்தடை ஏற்பட்டமையால், அதன் பணிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டள்ள ரொரன்ரோ பெரும்பாக விமான நிலைய அதிகார சபையின் பேச்சாளர், முதலாவது முனையத்திலேயே மின்தடை ஏற்பட்டதாகவும், அதனால் பயணிகளின் வரவுகளை பதிவு செய்யும் நடவடிக்கைக்கு தடங்கல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை விமானநிலையத்தின் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்புக்களும் இன்றி வழமை போல செயற்பட்டதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவ்வாறே இன்று காலை 6.15 அளவில் இது குறித்த தகவல் வெளியிட்ட விமான நிலைய அதிகாரிகள், கடந்த சுமார் ஒன்றரை மணி நேரமாக தடை நீடிப்பதாகவும், இருந்த போதிலும் நிலைமை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.Pearson_-_02252016

இருந்த போதும் இந்த மின் தடை முழுமையாக சீரடைய எவ்வளவு நேரமாகும் என்று தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தின் முதல் முனையத்தில் மின் தடை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ டவுண்ரவுனில் இரண்டு கத்திக்குத்துச் சம்பவங்கள்

Posted: 25 Feb 2016 07:34 AM PST

Two_people_stabbed_-_02252016

Two_people_stabbed_-_02252016ரொரன்ரோ டவுண்ரவுனில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டு கத்திக்குத்துச் சம்பவங்களில் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கத்திக்குத்துச் சம்பவமானது Bloor மற்றும் Parliament வீதிகளுக்கு அருகில் Howard வீதியில் அதிகாலை 2.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கான நபரின் கழுத்து, நெஞ்சு, கால் ஆகிய பகுதிகளில் காயம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது சம்பவம் இடம்பெற்று சற்று நேரத்தில் இரண்டாவது கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றதாகவும், கத்திக்குத்துக் காயங்களுக்க ஆளான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.Two_people_stabbed_-_02252016

எனினும் இந்த இரு கத்திக்குத்துச் சம்வங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடப்படவில்லை.

The post ரொரன்ரோ டவுண்ரவுனில் இரண்டு கத்திக்குத்துச் சம்பவங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கியூபெக், ஒன்ராறியோ கிழக்கு பிராந்தியங்களில் மின் தடை

Posted: 25 Feb 2016 07:27 AM PST

ice_cut_-_02252016

ice_cut_-_02252016கியூபெக் மற்றும் ஒன்ராறியோவின் கிழக்கு பிராந்தியங்களில் ஆயிரக்கணக்கானோர் மின் தடையை எதிர்கொண்டுள்ளனர்.

அந்த பகுதிகளில் ஏற்பட்ட உறை மழை காரணமாக அந்த பகுதிகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மின்விநியோகத் தடை குறித்து ஹைட்ரோ கியூபெக் தகவல் வெளியிடுகையில், அதிகாலை நான்கு மணி நிலவரப்படி கியூபெக்கின் தென் பிராந்தியங்களில் 2,45,000ற்கும் அதிகமானோர் மின் வினியோகம் தடையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளது.

ஒன்ராறியோவின் கிழக்கு பகுதியிலும் சுமார் 16,000 வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் தடைப் பட்டுள்ளதாக ஹைட்ரோ வண் தெரிவித்துள்ளது.ice_cut_-_02252016

மின் வினியோகத்தினை சீர்செய்யும் பணியில் தற்போது நடைபெற்று வருகின்றது எனினும், இன்று முற்பகல் வரையிலும் பலருக்கான மின் வினியோகம் தடைப்படக் கூடும் என ஹைட்ரோ கியூபெக்கின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின் தடை ஏற்பட்டுள்ள கியூபெக் மற்றும் ஒன்ராறியோவின் கிழக்கு பிராந்தியங்களின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தும் வேகமான காற்றுடன் கூடிய பனிப்பொழிவு காணப்படுவதனால், திருத்த வேலைகள் சவாலாக உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

The post கியூபெக், ஒன்ராறியோ கிழக்கு பிராந்தியங்களில் மின் தடை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted: 25 Feb 2016 07:00 AM PST

jh

jhவரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்கி, உடல் பருமனை குறைக்கிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

சமைக்கப்பட்ட 1 கப் வரகு அரிசியில், காப்பர் - 31 சதவீதம், பாஸ்பரஸ் - 25 சதவீதம், மாங்கனீஸ் - 24 சதவீதம், மக்னீசியம் - 19 சதவீதம், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் பி விட்டமின்கள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

வரகு அரிசியை பயன்படுத்தி கஞ்சி தயாரித்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

சிறுதானியமான இதை அடிக்கடி பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களை தடுக்கும். இதை உப்புமா, பொங்கல், புளியோதரையாக செய்து சாப்பிடலாம்.jh

உடலுக்கு வலிமையை கொடுக்கும். வீக்கத்தை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.

உடல் வளர்ச்சி மற்றும் சேதமடைந்த திசுக்களின் வளர்ச்சிக்கு இதில் உள்ள பாஸ்பரஸ் உதவுகிறது.

இதில் உள்ள கனிமச்சத்துக்கள், குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது.

எனவே, இந்த வரகு அரிசி உணவினை வழக்கமாக உட்கொண்டால், டைப் 2 நீரிழிவு ஆபத்தை குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு. வரகு அரிசியை பயன்படுத்தி குழந்தைகள் விரும்பி உண்ணும் வரகு கொழுக்கட்டை தயாரிக்கலாம்.

The post வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நீரிழிவு நோயாளிகளே ஒட்டக பால் குடியுங்கள்!

Posted: 25 Feb 2016 06:54 AM PST

gh

ghஒட்டக பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அதுமட்டுமின்றி, நீரிழிவு நோய், மனவளர்ச்சி குறைபாடு பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

ஒரு கப் ஒட்டக பாலில், புரோட்டின் - 10 சதவீதம், பொட்டாசியம் - 11 சதவீதம், பாஸ்பரஸ் - 15 சதவீதம், கால்சியம் - 30 சதவீதம், விட்டமின் B1 - 70 சதவீதம், இரும்புச்சத்து, விட்டமின் சி மற்றும் புரதச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.j

மருத்துவ பயன்கள்

மாட்டுப்பால், ஆட்டுப்பால் போன்றவற்றோடு ஒப்பிட்டு பார்க்கையில் ஒட்டக பாலில் கொழுப்பு சத்து குறைவு.

எனவே, இதனை குடிப்பதால் உடல் எடை அதிகரிக்காது.

குளுகோஸ் மற்றும் இன்சுலின் ஹார்மோன் ஆகியவை சரியான அளவில் இருந்தால் நீரிழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். ஒட்டக பாலினை குடிப்பதன் மூலம் இன்சுலின் ஹார்மோன் சீரான அளவில் சுரக்கிறது.

அதிக அளவில் புரோட்டின் சத்து மற்றும் கரிம சேர்மங்கள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நமது உடலில் உள்ள எலும்புகள், உடல் உறுப்புகள் போன்றவை வளர்ச்சியடைவதற்கு இந்த ஒட்டக பால் குடிக்கலாம்.

இதில் நிறைந்துள்ள இரும்புச்சத்து ரத்த சோகை குறைபாட்டிலிருந்து பாதுகாத்து, உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க உதவுகிறது.

பிரசவ காலங்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஒட்டக பாலினை குடித்தால் ஆரோக்கியம் மேம்படும்,

நரம்பியல் அமைப்பு செயல்பாட்டிற்கு உதவுவதால் ஆட்டிசம் குறைபாடு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

ஒட்டக பாலில் ஒவ்வாமை எதிர்வினைகள் இல்லாத காரணத்தால், இதனால் உடலுக்கு எவ்வித அலர்ஜியும் ஏற்படாது.

உடலில் கொழுப்பின் அளவை சீரான அளவில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

அதுமட்டுமின்றி, மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது.gh

The post நீரிழிவு நோயாளிகளே ஒட்டக பால் குடியுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™