மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு வசதி விரைவில் தொடங்குகிறது
- மாணவர் ரோகித் தற்கொலை விவகாரம்: ஸ்மிருதி இரானி பேச்சுக்கு பெண் டாக்டர் மறுப்பு
- திருப்பதி கோவிலில் புதிய அன்னதான சமையல் கூடம்
- மது ஆலை தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையா விலகல்: வெளிநாட்டில் குடியேற திட்டம்
- பிரதமர் அனுப்பிய ரூ.50 லட்சத்தை ஏற்க காஷ்மீர் ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் மறுப்பு
- தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானிடமிருந்து வெளிப்படையான ஆதரவை பெறுகின்றன: ராணுவ தளபதி குற்றச்சாட்டு
- காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர் உள்பட 6 தீவிரவாதிகள் கைது
- ஐதராபாத்தில் மொரீஷியஸ் பிரதமருக்கு கண் அறுவை சிகிச்சை
- தேச விரோத பேச்சு ஏற்க முடியாதது: அருண் ஜெட்லி
- அப்சல் குரு பற்றிய சிதம்பரம் கருத்தை நிராகரித்தது காங்கிரஸ்
- பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் திடீர் அனுமதி
- அப்சல் குரு பற்றிய சிதம்பரத்தின் பேச்சு துரதிருஷ்டவசமானது: பாரதீய ஜனதா
- மகாராஷ்டிராவில் இரண்டு லட்சம் கடனை திருப்பி அடைக்க முடியாததால் விவசாயி தற்கொலை
- இந்தியாவை சேர்ந்த கலைஞர் அனிஷ் கபூரின் சிற்பம் ரூ.4.8 கோடிக்கு ஏலம்
- 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார் அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி கலிகோ புல்
- அப்சல் குரு வழக்கு சரியாக கையாளப்படவில்லை: ப.சிதம்பரம் கருத்து
- உலகிலேயே இந்தியாவில்தான் விபத்துக்களால் அதிக உயிரிழப்பு: மக்களவையில் நிதின் கட்காரி தகவல்
- பாட்டியாலா நீதிமன்ற வளாக தாக்குதல் சம்பவம் எதிர்பாராதது, கண்டிக்கத்தக்கது: மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்
- சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு: பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் பாராட்டு
- புயலால் பாதிக்கப்பட்ட பிஜி நாட்டிற்கு 40 டன் உதவி பொருட்களை அனுப்புகிறது இந்தியா
| திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு வசதி விரைவில் தொடங்குகிறது Posted: 25 Feb 2016 10:14 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருமலை திருப்பதியில் தேவஸ்தான புரோகிதர் சங்கம் மூலம் இந்த திருமணங்கள் நடத்தப்பட்டன. இந்த திருமண விழாவில் பங்கேற்ற தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:– |
| மாணவர் ரோகித் தற்கொலை விவகாரம்: ஸ்மிருதி இரானி பேச்சுக்கு பெண் டாக்டர் மறுப்பு Posted: 25 Feb 2016 09:35 PM PST ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்து வந்த மாணவர் ரோகித் வெமுலா. இவர் கடந்த ஜனவரி மாதம் 17–ந்தேதி இரவு பல்கலைக்கழக விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விகாரம் தொடர்பாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி |
| திருப்பதி கோவிலில் புதிய அன்னதான சமையல் கூடம் Posted: 25 Feb 2016 09:15 PM PST திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் பசியை போக்குவதற்காக 1985–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6–ந்தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச நித்ய அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தால் தினமும் 1.27 லட்சம் பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது திருமலையில் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா நித்ய |
| மது ஆலை தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையா விலகல்: வெளிநாட்டில் குடியேற திட்டம் Posted: 25 Feb 2016 08:35 PM PST யுனைட்டட் பிரீவரீஸ் ஆலையின் தலைவராக மதுபானத் தொழிலில் கொடி கட்டி பறந்த விஜய்மல்லையாவின் கிங் ஃபிஷர் விமான நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங் ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது. |
| பிரதமர் அனுப்பிய ரூ.50 லட்சத்தை ஏற்க காஷ்மீர் ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் மறுப்பு Posted: 25 Feb 2016 07:32 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பெய்த கனமழையால் அம்மாநில ஐகோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள பழமையான நூலகத்தினுள் வெள்ளநீர் புகுந்தது. நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஏராளமான சட்ட புத்தகங்கள் மற்றும் பல முக்கிய வழக்குகள் தொடர்பான குறிப்புகள் அனைத்தும் நீரில் நனைந்து சேதமடைந்தன. |
| தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானிடமிருந்து வெளிப்படையான ஆதரவை பெறுகின்றன: ராணுவ தளபதி குற்றச்சாட்டு Posted: 25 Feb 2016 06:43 PM PST பாகிஸ்தானில் தளங்கள் அமைத்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. காஷ்மீரின் பம்போர் பகுதியில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளே காரணம் என கூறப்படுகிறது. |
| காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர் உள்பட 6 தீவிரவாதிகள் கைது Posted: 25 Feb 2016 03:33 PM PST காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட டாங்தர் நகரில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாம் மீது கடந்த ஆண்டு நவம்பர் 25-ந்தேதி சில தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் |
| ஐதராபாத்தில் மொரீஷியஸ் பிரதமருக்கு கண் அறுவை சிகிச்சை Posted: 25 Feb 2016 01:39 PM PST மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் அனிரூத் ஜகன்நாத் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஆந்திர மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நடந்தது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் |
| தேச விரோத பேச்சு ஏற்க முடியாதது: அருண் ஜெட்லி Posted: 25 Feb 2016 12:37 PM PST தேச விரோத பேச்சு ஏற்க முடியாதது என்று மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி ராஜ்யசபாவில் கூறினார். நாட்டில் தேச விரோத செயல்களில் ஈடுபட்ட டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழக மாணவர்கள் கைது விவகாரம் குறித்து காங்கிரஸ் தரப்பில் |
| அப்சல் குரு பற்றிய சிதம்பரம் கருத்தை நிராகரித்தது காங்கிரஸ் Posted: 25 Feb 2016 10:13 AM PST பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர் அப்சல் குரு. அவரது வழக்கு சரியாக முடிவு செய்யப்படாதது போல தோன்றுவதாகவும், பாராளுமன்ற தாக்குதலில் அவரது தொடர்பு குறித்து ஆழ்ந்த சந்தேகங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை மந்திரியுமான ப.சிதம்பரம் கருத்து |
| பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் திடீர் அனுமதி Posted: 25 Feb 2016 08:28 AM PST பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் ஹிரபா ஆமதாபாத்தில் தனது மூத்த மகனான பங்கஜ்மோடியுடன் வசித்து வருகிறார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் காந்திநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தபரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே |
| அப்சல் குரு பற்றிய சிதம்பரத்தின் பேச்சு துரதிருஷ்டவசமானது: பாரதீய ஜனதா Posted: 25 Feb 2016 06:34 AM PST காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், நிதித்துறை உள்துறை அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளை வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம், கடந்த 2001 ஆம் ஆண்டு பாரளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குரு குறித்து வெளியிட்ட கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா தேசிய செயலாளர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் ஷர்மா |
| மகாராஷ்டிராவில் இரண்டு லட்சம் கடனை திருப்பி அடைக்க முடியாததால் விவசாயி தற்கொலை Posted: 25 Feb 2016 05:52 AM PST இரண்டு லட்சம் கடனை திருப்பி அடைக்க முடியாததால் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அம்பேகான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலு அவகாத்(36). இவர் தனது வயலில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். விவசாய தேவைகளுக்காக தனது உறவினரிடம் 2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் கடுமையான வறட்சி காரணமாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. |
| இந்தியாவை சேர்ந்த கலைஞர் அனிஷ் கபூரின் சிற்பம் ரூ.4.8 கோடிக்கு ஏலம் Posted: 25 Feb 2016 04:52 AM PST இந்தியாவின் மும்பை நகரில் பிறந்து லண்டனில் குடியேறிய சிற்பி அனிஷ் கபூரின் சிற்பம் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. சிற்பி அனிஷ் கபூரின் சிற்பங்கள் உலகம் முழுவது பிரபலமானவை. இவரது புகழ் பெற்ற சிற்பங்கள் கிராண்ட் பாலாய்ஸ், பாரிஸ், சிகாகோவில் உள்ள மில்லினியம் பார்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் |
| 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார் அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி கலிகோ புல் Posted: 25 Feb 2016 04:35 AM PST அருணாசலப் பிரதேச மாநிலத்தில் புதிதாக ஆட்சியமைத்துள்ள முதல்வர் கலிகோ புல் மாநில சட்டப்பேரவையில் இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த அருணாசல பிரதேசத்தில் முதல்–மந்திரி நபம் துகிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் பா.ஜனதா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அதிருப்தி தலைவர் கலிகோ புல் என்பவரை முதல்–மந்திரியாக தேர்ந்தெடுத்தனர். |
| அப்சல் குரு வழக்கு சரியாக கையாளப்படவில்லை: ப.சிதம்பரம் கருத்து Posted: 25 Feb 2016 04:29 AM PST பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குரு கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சுஷில் குமார் ஷிண்டே உள்துறை மந்திரியாக இருந்தபோது அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நிதித்துறை மற்றும் உள்துறை மந்திரி பதவிகளை வகித்த ப.சிதம்பரம் |
| உலகிலேயே இந்தியாவில்தான் விபத்துக்களால் அதிக உயிரிழப்பு: மக்களவையில் நிதின் கட்காரி தகவல் Posted: 25 Feb 2016 03:58 AM PST உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி மக்களவையில் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:- |
| Posted: 25 Feb 2016 03:16 AM PST பாட்டியாலா நீதிமன்றத்தில் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணையா குமார் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் எதிர்பாராதது என்றும் கண்டிக்கத்தக்கது என்றும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- |
| Posted: 25 Feb 2016 03:06 AM PST பாராளுமன்றத்தில் இன்று ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து மோடி தெரிவித்துள்ளதாவது:- நாட்டின் வெற்றிப் பாதையை உறுதிபடுத்தும் வகையில் அப்பழுக்கற்ற ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். ரெயில்வே பட்ஜெட் தயாரித்த அமைச்சர் சுரேஷ் பிரபு, ரெயில்வே குழு ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள். |
| புயலால் பாதிக்கப்பட்ட பிஜி நாட்டிற்கு 40 டன் உதவி பொருட்களை அனுப்புகிறது இந்தியா Posted: 25 Feb 2016 02:12 AM PST பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 300 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டை மணிக்கு 230 முதல் 325 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்றியடித்த வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இந்த புயலின் சீற்றத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகிப் போய் கிடக்கின்றன. பல லட்சம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த உணவுப் பயிர்கள் நாசமடைந்தன. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |