Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மூன்று பிள்ளைகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மன்னிப்புக் கோரினார்

Posted: 24 Feb 2016 07:28 PM PST

jk

jkமூன்று பிள்ளைகளும், அவர்களின் பேரனும் உயிரிழந்த விபத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்த Marco Muzzo என்ற நபர் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரிடம் இன்று நீதிமன்றில் வைத்து நேரில் மன்னிப்புப் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் Muzzoவின் அந்த மன்னிப்புக் கோரிக்கையை புறக்கணித்த குறித்த குடும்பத்தினர், அவர் மன்னிப்புக் கோரிய போது நீதிமன்ற அறையை விட்டும் வெளியேறியிருந்தனர்.

2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை Muzzo தமது வீட்டில் இருந்து விமானநிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, சிற்றூர்தி ஒன்றுடன் அவரது வாகனம் மோதி விபத்துக்குள்ளாது. அப்போது அந்த சிற்றூர்த்தியில் இருந்த ஒன்பது, ஐந்து, இரண்டு வயதுகளை உடைய மூன்று சகோதரர்களும், அவர்களின் 65 வயதான பேரனும் உயிரிழந்திருந்தனர்.jk

சிற்றூர்தியில் பயணித்த அந்த நால்வரும் உயிரிழந்தமை தொடர்பில் Muzzo மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்க விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் Muzzo இன்றும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததுடன், முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.

நீதிமன்றில் மிகவும் நலிந்த தளுதளுத்த குரலிலும், உணர்ச்சிவசப்பட்டும் பேசிய அவர், தனது செயலால் பாதிக்கப்பட்ட Neville-Lake குடும்பத்தினர் எத்தகைய பேரளிவைச் சந்தித்துள்ளனர் என்றும் வருத்தம் வெளியிட்டுள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திடம் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

ஆனால் அவரின் ஒரு வார்த்தையைக் கூடக் கேட்டுக்கொள்ளாது உயிரிழந்த அந்த மூன்று குழந்தைகளின் தாயும், தந்தையும் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் நீதிமன்றின் வெளியில் இருந்த உடகவியலாளர்களிற்கு கருத்து கூறிய உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் ஆகிய Neville-Lake, அவர் என்ன கூறியிருந்தார் என்பதை தாம் கேட்கவிரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகள் மூவரையும் கொலை செய்த அவரின் கருத்துக்களை தாம் கேட்க விரும்பவிலமைலை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய சாட்சியமளிப்பை அடுத்து, குறித்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

The post மூன்று பிள்ளைகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மன்னிப்புக் கோரினார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியைமை தவறான செயல் – முன்னாள் கனேடிய இராணுவத் தளபதி

Posted: 24 Feb 2016 09:04 AM PST

Canadian_soldiers_-_02242016

Canadian_soldiers_-_02242016தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியைமை தவறான செயல் என முன்னாள் கனேடிய இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீது செப்டம்பர் 11 இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியதைச் சுட்டிக்காட்டியே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றியதற்கு பதிலாக, அவர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களையும் அல் கைடா அமைப்புக்கு எதிராக திருப்பிருக்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களை ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நிறுத்திவிடலாம் என்று அப்போது கருதப்பட்டதாகவும், அவ்வாற நிலையில் ஆப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதும் படையெடுக்கப்பட்டதாகவும், எனினும் அவை தப்பான முடிவுகளாக அமைந்துவிட்டன என்றும் அவர் விபரித்துள்ளார்.Canadian_soldiers_-_02242016

ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து அங்கு நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக மோதல்களில் ஈடுபட்டதனையும், ஈராக்கில் சதாம் குசேனின் ஆட்சியை கவிழ்த்து அங்கு மூன்று ஆண்டு கொடிய போர் இடம்பெற்றதனையும் நினைவுகூர்ந்துள்ள அவர், இவ்வாறான ஆட்சிக் கவிழ்பினை மேற்கொண்டதன் மூலம் சிறந்த பலாபலன்கள் ஏற்பட்டதாக எவரும் இதுவரை கூறவில்லை எனவும், அதற்கு பதிலாக மேற்குலகம் 30 -40 ஆண்டுகளுக்கு தீர்க்க முடியாத பெரிய பிரச்சினைகளை உருவாக்கிவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்த பிரச்சினையானது ஆப்கானிஸ்தானுடன் மட்டுமோ அல்லது ஈராக்கடன் மட்டுமோ வரையறுக்கப்பட்டதாக அல்லாது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுமைக்கும் பரவியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியான மேயர் ஜெனரல் டேவ் ஃபிரேசர்(Dave Fraser), ஆப்கானிஸ்தான் மீது மேற்குலகம் மேற்கொண்ட படையெடுப்பின் போது ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் நேட்டோ படைகளுக்கு தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானின் கண்டஹார் பகுதிக்கு கனேடிய இராணுவம் படையெடுத்த பத்தாவது ஆண்டினை நினைவுகூரும் நிலையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டி ஒன்றிலேயே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

The post தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியைமை தவறான செயல் – முன்னாள் கனேடிய இராணுவத் தளபதி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ பெரும்பாகத்திற்கு உறை மழை எச்சரிக்கை

Posted: 24 Feb 2016 08:21 AM PST

winter_storm_-_02242016

winter_storm_-_02242016இன்றைய நாளுக்கான உறை மழை, மற்றும் பனிப்பொழிவுக்கான எச்சரிக்கை ரொரன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தென் பிராந்தியங்களில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது ஒன்ராறியோவின் தென்பகுதியை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் பிறப்பித்துள்ள வானிலை முன்னுரைப்பில், நியூமார்க்கெட், கலிடோன், ஜோர்ஜியானா மற்றும் யோர் பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று உறைமழை, மற்றும் பனிப்பொழிவுக்கான வானிலையின் தாக்கம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.winter_storm_-_02242016

கிச்சனார், கேம்பிரிட்ஜ், வாட்டலூ ஆகிய இடங்களிலும், இதன் தாக்கம் ஓரளவு காணப்படக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று மதியம் அளவில் பனிப்பொழிவானது உறை பனியாக மாற்றமடைந்து, உறை பனிக்கட்டிகள் விழக்கூடும் என்பதுடன், இந்த நிலைமை சில மணிநேரங்களுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று பின்நேரம் அளவில் மழை பொழியும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

The post ரொரன்ரோ பெரும்பாகத்திற்கு உறை மழை எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™