மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் ரெயில்வே பட்ஜெட் பூர்த்தி செய்யும்: ரெயில்வே மந்திரி பேட்டி
- சந்திரபாபு நாயுடு மகனுக்கு நடிகை ரோஜா பதிலடி
- பஸ் கட்டணத்திற்கு 5 ரூபாய் இல்லாமல் நிதிஷ்குமார் தவிப்பு: அரசு அதிகாரி வழங்கினார்
- 288 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு: வன அதிகாரிகளின் மனைவிகள் அறிவிப்பு
- மலப்புரம் அருகே போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிசூடு
- சோலார் பேனல் மோசடி வழக்கு: மந்திரி ஆர்யாடன் முகமதுக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - சரிதாநாயர் புதிய புகார்
- திருவனந்தபுரத்தில் உம்மன்சாண்டி கார் முன்பு மறியல்: கம்யூ. தொண்டர்கள் மீது தடியடி
- முதல்-மந்திரி சித்தராமையா நாளை டெல்லி பயணம்: சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்
- யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு 600 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முடிவு: தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு
- லாத்தூரில் நடந்த போலீஸ் அதிகாரி மீதான தாக்குதலை அரசு சகித்து கொள்ளாது: முதல்-மந்திரி பட்னாவிஸ் கண்டனம்
- சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை: கர்நாடக அரசு தரப்பின் இறுதி வாதம் இன்று முடிகிறது
- மும்பை மேக் இன் இந்தியா கலை நிகழ்ச்சியில் தீ விபத்துக்கு காரணம் யார்? தீயணைப்பு துறை பரபரப்பு அறிக்கை
- கிரெடிட், டெபிட் கார்டு பணபரிவர்த்தனையில் சேவை கட்டணம் ரத்து: மத்திய மந்திரி சபை ஒப்புதல்
- முன் பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகளுக்கு புதிய விதிமுறை: மார்ச் 1-ந் தேதி முதல் அமல்
- ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்: தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா?
- ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி துங்கன் குற்றவாளி: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு
- ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மூன்று நாள் போலீஸ் காவல்
- சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்வதா?: மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
- ஜாட் போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக அரியானா முன்னாள் முதல்வரின் ஆலோசகர் மீது தேசத்துரோக வழக்கு
- அனைத்து தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ரெயில்வே பட்ஜெட் இருக்கும்: சுரேஷ் பிரபு தகவல்
| Posted: 24 Feb 2016 10:24 PM PST பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் மதியம் 12 மணியளவில் தாக்கல் ஆகிறது. இதற்காக ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு மற்றும் இணை மந்திரி மனோஜ் சின்ஹா ஆகியோர் ரெயில்வே பவன் வந்தடைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பிரபு, "மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு ரெயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது" என்றார். |
| சந்திரபாபு நாயுடு மகனுக்கு நடிகை ரோஜா பதிலடி Posted: 24 Feb 2016 09:53 PM PST ஆந்திர முதல் – மந்திரி சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ். இவர் தெலுங்கு தேச கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார். அவர் தெலுங்கு தேச கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்ல பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேச கட்சியில் |
| பஸ் கட்டணத்திற்கு 5 ரூபாய் இல்லாமல் நிதிஷ்குமார் தவிப்பு: அரசு அதிகாரி வழங்கினார் Posted: 24 Feb 2016 09:36 PM PST பீகார் மாநிலம் முதல் – மந்திரி நிதிஷ்குமார் நேற்று பாட்னாவில் நடந்த புதிய பஸ் வழித்தட பாதையை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் அந்த பஸ்சில் பயணிகளுடன் பயணம் செய்தார். பஸ்சில் ஏறிய அவர் இருக்கையில் அமர்ந்து இருந்தார். அவரிடம் பெண் நடத்துனர், காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை செல்ல பஸ் கட்டணமாக 5 ரூபாய் கேட்டார். |
| 288 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு: வன அதிகாரிகளின் மனைவிகள் அறிவிப்பு Posted: 24 Feb 2016 09:33 PM PST கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் 15–ந் தேதி ஆந்திர மாநிலம் பெத்தசேனு என்ற பகுதியில் வன அதிகாரிகள் ஸ்ரீதர், டேவிட் கருணாகரன் ஆகியோர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். செம்மரங்களை கடத்திய கும்பலை தடுத்த போது அவர்கள் கொலை |
| மலப்புரம் அருகே போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிசூடு Posted: 24 Feb 2016 09:22 PM PST கோவை–கேரள எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க கேரளாவின் தண்டர் போல்டு அதிரடிப் படையினருடன் தமிழக போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் |
| Posted: 24 Feb 2016 09:15 PM PST கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் பொருத்தி தருவதாக கூறி பல லட்சம் பணம் மோசடி நடந்தது. இது தொடர்பாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சரிதாநாயருக்கு முதல்–மந்திரி உம்மன் சாண்டி உள்பட |
| திருவனந்தபுரத்தில் உம்மன்சாண்டி கார் முன்பு மறியல்: கம்யூ. தொண்டர்கள் மீது தடியடி Posted: 24 Feb 2016 08:55 PM PST கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி உள்பட அவரது மந்திரி சபையில் உள்ள சில மந்திரிகள் மீது சோலார்பேனல் மோசடி, பார் ஊழல் புகார் உள்ளதால் எதிர்கட்சியான கம்யூனிஸ்டுகள் உம்மன்சாண்டி கலந்து கொள்ளும் விழாக்களில் தொடர்ந்து கருப்பு கொடி காட்டி வருகிறார்கள். |
| முதல்-மந்திரி சித்தராமையா நாளை டெல்லி பயணம்: சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார் Posted: 24 Feb 2016 07:46 PM PST கர்நாடகத்தில் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் 10 மாவட்டங்களையும், பா.ஜனதா 7 மாவட்டங்களையும், ஜனதா தளம்(எஸ்) 2 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள 11 மாவட்டங்களில் எந்த கட்சிக்கு |
| Posted: 24 Feb 2016 07:24 PM PST யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி யோகபீடம் சார்பில் மராட்டியத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை தொடங்க உள்ளார். இது நான்கு பிரிவுகளாக விதர்பா மண்டலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் மீகான் என்ற பகுதியிலும், அமராவதி, கடோல் மற்றும் கட்சிரோலி ஆகிய பகுதிகளிலும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 24 Feb 2016 07:17 PM PST லாத்தூர் மாவட்டம் பான்காவ் கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் கடந்த சனிக்கிழமை மராட்டிய மன்னர் சிவாஜி பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அவர்கள் அந்த பகுதி முழுவதும் கொடிகளை கட்டி கொண்டிருந்தனர். இதற்கு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யூனுஸ் சேக் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் |
| சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை: கர்நாடக அரசு தரப்பின் இறுதி வாதம் இன்று முடிகிறது Posted: 24 Feb 2016 06:45 PM PST சொத்துகுவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. |
| Posted: 24 Feb 2016 06:25 PM PST மும்பையில் கடந்த 14-ந் தேதி 'மேக் இன் இந்தியா' வார விழா கலை நிகழ்ச்சி மேடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், நடிகை ஹேமமாலினி ஆகியோர் உயி |
| கிரெடிட், டெபிட் கார்டு பணபரிவர்த்தனையில் சேவை கட்டணம் ரத்து: மத்திய மந்திரி சபை ஒப்புதல் Posted: 24 Feb 2016 06:23 PM PST மத்திய மந்திரி சபை பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சகம் ஒரு குவிண்டால் கச்சா சணலுக்கு கூடுதலாக ரூ.500-ஐ வழங்க பரிந்துரை செய்து இருந்ததை மந்திரிசபை ஏற்றுக்கொண்டது. |
| முன் பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகளுக்கு புதிய விதிமுறை: மார்ச் 1-ந் தேதி முதல் அமல் Posted: 24 Feb 2016 06:14 PM PST ரெயிலில் சாதாரண வகுப்பில் (முன் பதிவு இல்லாத டிக்கெட்டில்) பயணம் செய்கிறவர்களுக்கு இதுவரை எந்த விதிமுறையும் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது அதில் ரெயில்வே கடிவாளம் போடுகிறது. |
| ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்: தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா? Posted: 24 Feb 2016 05:00 PM PST ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 2-வது ஆண்டாக அவர் தாக்கல் செய்யும் ரெயில்வே பட்ஜெட் இதுவாகும். இதில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் கட்டணம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறைந்து வரும் வருமானம் மற்றும் ரெயில்வே |
| ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி துங்கன் குற்றவாளி: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு Posted: 24 Feb 2016 01:24 PM PST ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி துங்கன் குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. டெல்லியில் 1993-94 காலகட்டத்தில் (நரசிம்மராவ் ஆட்சி காலம்) அரசு கடைகளை ஒதுக்கீடு செய்ததில் நேர்மைக்கு புறம்பான விதத்தில் செயல்பட்டு, ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக |
| ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மூன்று நாள் போலீஸ் காவல் Posted: 24 Feb 2016 11:45 AM PST தேசத்துரோக குற்றச்சாட்டில் கைதாகியுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மூன்று நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9–ந்தேதி, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் |
| சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்வதா?: மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு Posted: 24 Feb 2016 08:44 AM PST மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தின் போது, இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கடந்த 2013-ம் ஆண்டு அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. |
| ஜாட் போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக அரியானா முன்னாள் முதல்வரின் ஆலோசகர் மீது தேசத்துரோக வழக்கு Posted: 24 Feb 2016 08:38 AM PST அரியானாவில் ஜாட் இன மக்களின் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பி.எஸ். ஹூடாவின் அரசியல் ஆலோசகர் வீரேந்தர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேப்டன் பவன் குமார் அன்சால் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அரியானா முன்னாள் முதல்வரின் நெருங்கிய நண்பரும், |
| Posted: 24 Feb 2016 08:34 AM PST பாராளுமன்றத்தில் நாளை ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ரெயில்வே மந்திரியாக சுரேஷ் பிரபு பொறுப்பேற்ற பின் அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது ரெயில்வே பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் தயாரிப்பு பணிகளை இன்று இறுதி செய்த அவர், பட்ஜெட் குறித்து கூறியதாவது:- நாட்டு நலனையும் ரெயில்வே துறையின் நலனையும் கருத்தில் கொண்டு நிறைய முயற்சிகள் செய்து இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளோம் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |