Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பெண் ஒருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது

Posted: 23 Feb 2016 06:29 PM PST

bj

bjபிரிட்டிஷ் கொலம்பியாவின் wandering பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணை இனங்கான உதவுமாறு காவல்த்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 4 மணியளவில் 180th வீதி மற்றும் 66A அவனியூப் பகுதியில் அந்த பெண்ணை தாங்கள் கண்டுபிடித்திரு்நதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், அவரை அவரின் குடும்பத்தாருடன் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர் யார், எங்கு வசிக்கிறார் என்ற தகவலை அறிய முடியாது உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள காவல்த்துறையினர், தற்போது அவர் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு அவரினை அடையாளம் காண்பதற்கு மருத்துவமனை ஊழியர்கள் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.bj

இதுவரையில் தமது முதல் பெயர் Sheila என்பதை மட்டுமே அவர் தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ள காவல்த்துறையினர் அந்த பெண்ணின் ஒளிப்படத்தையும் வெளியிட்டுள்ளதுடன், அவரை இனங்காண உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post பெண் ஒருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்தி கொண்டு தாக்கிய பாடசாலை மாணவி

Posted: 23 Feb 2016 06:25 PM PST

k

kPickering இல் உள்ள பாடசாலை மாணவி ஒருவர் கத்தி கொண்டு அங்கிருந்தவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.

Whites வீதிக்கு அருகில் Sheppard அவனியூவில் உள்ள Dunbarton உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவரே இரண்டு கத்திகளைக் கொண்டு பாடசாலை முகப்பில் இருந்தவர்கள் மீது எழுந்தமானமாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமக்கு இன்று காலை 8.30 மணியளவில் தகவல் கிடைத்திருந்த நிலையில் உடனடியாக பாடசாலைக்கு விரைந்திருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாம் சம்பவ இடத்திற்கு செல்லும் வரையில் அந்த மாணியை பாடசாலை ஆசிரிரியர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தாகவும், எனினும் மாணவியின் இந்த கத்தி வீச்சுச் சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.k

காயமடைந்தவர்களுள் நால்வரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், ஏனைய மூவருக்கும் சிறிய காயங்களே ஏற்பட்டிருந்தது என்றம் கூறியுள்ளனர்.

சம்பவ இடத்தில் வைத்தே தாக்குதல் நடாத்திய அந்த மாணவியை கைதுசெய்துள்ள காவல்த்துறையினர், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சந்தேக நபர்கள் எவரையும் தாம் தேடவில்லை என தெரிவி்த்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த உயர் தரப்பாடசாலை இன்று மூடப்பட்டிருந்தது. எனினும் நாளை புதன்கிழமை பாடசாலை மீண்டும் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கத்தி கொண்டு தாக்கிய பாடசாலை மாணவி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலங்குவானூர்தி விபத்தில் படுகாயமடைந்த கனேடியச் சிறுவன் மரணம்

Posted: 23 Feb 2016 08:31 AM PST

Pearl_Harbor_helicopter_crash_-_02232016

Pearl_Harbor_helicopter_crash_-_02232016பேர்ள் ஹார்பர் பகுதியில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் கனடாவைச் சேர்ந்த பதின்மவயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்த பேர்ள் ஹார்பர் பகுதி அமெரிக்க ஹாவாய் தீவின் பிரபலமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா சென்றிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பதின்மவயது சிறுவன் அவனின் குடும்பத்தாருடனேயே சுற்றுலா சென்றிருந்ததாகவும், அங்கு அவர்கள் உலங்குவானூர்தியில் பேர்ள் ஹார்பர் பகுதியை வலம்வந்த போது, உலங்குவானூர்தி துறைமுகத்துக்கு அருகே உள்ள நீர்ப்பகுதியில் வீழ்ந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த 16 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.Pearl_Harbor_helicopter_crash_-_02232016

அந்த குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் ஒருவர் சிகிச்சையின் பின் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேர்ள் ஹார்பர் பகுதியில் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள இரண்டாவது உலங்குவானூர்தி விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் அங்கு விபத்துக்குள்ளானதில் 12 படையினர் உயிரிழந்துள்ளனர்.

The post உலங்குவானூர்தி விபத்தில் படுகாயமடைந்த கனேடியச் சிறுவன் மரணம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகாவில் தீ சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில்

Posted: 23 Feb 2016 07:58 AM PST

fire_in_Mississauga_-_02232016

fire_in_Mississauga_-_02232016மிசிசாகாவில் வீடு ஒன்று தீ பற்றிக்கொண்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், Bloor வீதி மற்றும் Dixie வீதிப் பகுதியினட Tyneburn Crescent இல் உள்ள வீடு ஒன்றிற்கு நேற்று இரவு 10 மணிக்கு சற்றுப் பின்னர் அவசர மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதிலும், தீப் பரவல் ஏற்பட்டமைக்கான காரணங்கள் எவையும் இன்னமும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.fire_in_Mississauga_-_02232016

இந்த தீயினால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத் திணறலுக்கு ஆளான அந்த வீட்டின் உரிமையாளரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post மிசிசாகாவில் தீ சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொத்தவரங்காய் சாப்பிடுங்கள்: இரத்த அழுத்தத்தை குறையுங்கள்

Posted: 23 Feb 2016 02:52 AM PST

jh

jhகொத்தவரை இதய ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத ஓர் மருத்துவ உணவாக விளங்குகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

100 கிராம் கொத்தவரங்காயில், கால்சியம் - 130 கி, கார்போஹைட்ரேட்ஸ் - 11 கி, 16 கலோரி, நார்ச்சத்து 3 கி, இரும்புச்சத்து - 1 மிகி, கனிமச்சத்து - 1 கி, பாஸ்போரஸ் - 57மிகி, புரதச்சத்து - 3 கி.jh

மருத்துவ பயன்கள்

கொத்தவரையில் இருக்கும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் போலேட் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல் வேறு நோய்களினின்றும் பாதுகாக்க வல்லவை.

சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்களைக் குணப்படுத்தும் சத்துக்களை கொத்தவரை உள்ளடக்கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.

கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும்.

கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்தும், சுண்ணாம்புத் சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளன.

மேலும் அதிக அளவிலான போலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.jkl

மேலும் கொத்தவரையில் உள்ள விட்டமின் K சத்தும் குழந்தையின் வளர்ச்சிக்கும் அதன் எலும்புகளின் வலிமைக்கும் மிக்க துணையாக விளங்குகின்றன.

கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது.

கொத்தவரை செரிமானத்துக்கு (னுபைநளவடி) மிகவும் உதவியாக விளங்குகிறது.

மூளைக்கு ஏற்படும் அழச்சியைத் தவிர்க்க கொத்தவரை ஓர் மருத்துவ உணவாகிப் பயன்தருகிறது. ரத்தத்தில் கலந்து துன்பம் செய்யும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொத்த வரைக்கு இருப்பதால் மத்திய நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர்வை தருவதாக விளங்குகிறது.

மேலும் இச்சத்துக்கள் மன உளைச்சல் மற்றும் இதயப்படபடப்பு ஆகியவற்றைப் போக்க உதவி மனிதனுக்கு அமைதி தரவல்லதாய் விளங்குகிறது.

கொத்தவரையில் கிளைகோ நியூட்ரியன்ட் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலுகிறது.

The post கொத்தவரங்காய் சாப்பிடுங்கள்: இரத்த அழுத்தத்தை குறையுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™