மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சரிவு
- 5 மாநில சட்டசபை தேர்தல்: டெல்லியில் அதிகாரிகள் இன்று ஆலோசனை
- ரூ.251-க்கு ஸ்மார்ட் போன்: ஏப்ரல் மாதத்துக்குள் டெலிவரி செய்யாவிட்டால் நடவடிக்கை - மத்திய மந்திரி பேட்டி
- நாளை ரெயில்வே பட்ஜெட்: பயணிகள் ரெயில் கட்டணம் உயர்கிறது
- ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஜாமீன் மனு மீதான விசாரணை பிப். 29-க்கு ஒத்திவைப்பு
- ஜனாதிபதியிடம் ஜெகன்மோகன் ரெட்டி மனு
- முதுகில் குத்துவதில் வல்லவர்: சந்திரபாபு நாயுடு மீது நடிகை ரோஜா தாக்கு
- பட்ஜெட் கூட்டத் தொடர்: மக்களவையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் மீது தடை: சுப்பிரமணிய சாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்
- ஜே.என்.யு., ரோகித் வெமுலா விவகாரங்கள் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம்
- பிரதமர் மோடி விரைவில் சபரிமலைக்கு வருவார்: பாரதிய ஜனதா மாநில தலைவர் தகவல்
- உம்மன்சாண்டிக்கு கருப்பு கொடி காட்டிய கம்யூனிஸ்டுகள் மீது தடியடி: 33 பேர் படுகாயம்
- பாக். தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாததால் இந்தியா பாதுகாப்பானதாக இல்லை: சிவசேனா குற்றச்சாட்டு
- போலீஸ்காரரை தாக்கிய சமாஜ்வாதி கட்சி தலைவியின் மகன் கைது
- போலீசாரால் தேடப்பட்டுவந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போலீசில் சரணடைந்தனர்
- நிதிமந்திரி அருண்ஜெட்லி தொடர்ந்த கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கில் மார்ச் 9-ந் தேதி தீர்ப்பு
- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் கடிதம்
- உத்தர பிரதேசத்தில் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை
- முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக தேர்வு
- டெல்லி நீதிமன்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கைது
| கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சரிவு Posted: 23 Feb 2016 10:52 PM PST கர்நாடக மாநிலத்தில் 30 ஜில்லா பஞ்சாயத்து அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி 10 ஜில்லா பஞ்சாயத்துக்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா கட்சிக்கு 7 ஜில்லா பஞ்சாயத்துக்கள் கிடைத்தன. 11 ஜில்லா பஞ்சாயத்துக்களில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. |
| 5 மாநில சட்டசபை தேர்தல்: டெல்லியில் அதிகாரிகள் இன்று ஆலோசனை Posted: 23 Feb 2016 10:35 PM PST தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மே, ஜூன் மாதங்களில் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது. |
| Posted: 23 Feb 2016 10:28 PM PST நவீனரக ஸ்மார்ட் போன்களை ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த 'ரிங்கிங் பெல்ஸை' அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அந்நிறுவனம் அளித்த வாக்குறுதியின்படி ஏப்ரல் மாதத்தில் இருந்து டெலிவரி செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலைதொடர்புத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். |
| நாளை ரெயில்வே பட்ஜெட்: பயணிகள் ரெயில் கட்டணம் உயர்கிறது Posted: 23 Feb 2016 10:24 PM PST ரெயில்வே பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பயணிகள் கட்டணம் உயர்கிறது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டம் என்பதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை |
| ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஜாமீன் மனு மீதான விசாரணை பிப். 29-க்கு ஒத்திவைப்பு Posted: 23 Feb 2016 10:24 PM PST நேரு பல்கலைக் கழகத்தில் தேச விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் டெல்லி அரசியலில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மாணவர் தலைவர் கண்ணையா குமார் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இவர் மீதான வழக்கு டெல்லி பாட்டீயாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. |
| ஜனாதிபதியிடம் ஜெகன்மோகன் ரெட்டி மனு Posted: 23 Feb 2016 10:15 PM PST ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். அப்போது அவர் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர், ''ஆந்திராவில் ஊழல் அதிகரித்து விட்டது. மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது. இதற்காக சந்திரபாபு நாயுடுவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். |
| முதுகில் குத்துவதில் வல்லவர்: சந்திரபாபு நாயுடு மீது நடிகை ரோஜா தாக்கு Posted: 23 Feb 2016 10:07 PM PST ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆந்திரா மக்கள் இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் பின்னால் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கி விடுவார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களையும், 1 எம்.எல்.சி.யையும் சந்திரபாபு நாயுடு மிரட்டி தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளார். |
| பட்ஜெட் கூட்டத் தொடர்: மக்களவையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் Posted: 23 Feb 2016 10:06 PM PST பாராளுமன்ற கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இதில் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நடைபெற உள்ளது. தேர்தல் சட்டங்கள் தொடர்பான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. |
| சென்னை சூப்பர் கிங்ஸ் மீது தடை: சுப்பிரமணிய சாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட் Posted: 23 Feb 2016 09:49 PM PST ஐ.பி.எல். தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது. |
| ஜே.என்.யு., ரோகித் வெமுலா விவகாரங்கள் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம் Posted: 23 Feb 2016 09:37 PM PST பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாளை ரெயில்வே பட்ஜெட்டும், வரும் பிப்ரவரி 29 (திங்கட்கிழமை) பொது பட்ஜெட்டும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று ஜவஹார்லால் நேரு |
| பிரதமர் மோடி விரைவில் சபரிமலைக்கு வருவார்: பாரதிய ஜனதா மாநில தலைவர் தகவல் Posted: 23 Feb 2016 08:51 PM PST பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகள் செய்யும் பணி நடந்து வருகிறது. தேசிய புனித தலமாக சபரிமலையை அறிவிக்கவும் கேரள அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. மேலும் சபரிமலைக்கு பிரதமர் நரேந்திரமோடியை அழைத்து வரவும் தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. |
| உம்மன்சாண்டிக்கு கருப்பு கொடி காட்டிய கம்யூனிஸ்டுகள் மீது தடியடி: 33 பேர் படுகாயம் Posted: 23 Feb 2016 08:41 PM PST கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மந்திரிசபை ஆட்சியில் உள்ளது. முதல்–மந்திரி உம்மன் சாண்டி உள்பட அவரது மந்திரிகள் பலர் மீது சோலார் பேனல் மோசடி, மதுபார் ஊழல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதனால் உம்மன்சாண்டி ராஜினாமா செய்யக்கோரி |
| Posted: 23 Feb 2016 08:29 PM PST ஒடிசா மாநிலம் பர்காரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பா.ஜனதா அரசை சீர்குலைக்க சதி நடப்பதாகவும், தன்னுடைய பெயரை களங்கப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். |
| போலீஸ்காரரை தாக்கிய சமாஜ்வாதி கட்சி தலைவியின் மகன் கைது Posted: 23 Feb 2016 07:18 PM PST உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காரை மறித்து ஆவணங்களை பரிசோதித்த போலீஸ்காரரை தாக்கிய மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி தலைவியின் மகனை மீரட் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். மீரட் மாவட்டத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி பெண் தலைவர் சங்கீதா |
| போலீசாரால் தேடப்பட்டுவந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போலீசில் சரணடைந்தனர் Posted: 23 Feb 2016 06:53 PM PST தேசத்துரோக குற்றச்சாட்டில் டெல்லி போலீசாரால் தேடப்பட்டுவந்த இரு மாணவர்கள் நேற்றிரவு சரணடைந்தனர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9–ந்தேதி, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் |
| நிதிமந்திரி அருண்ஜெட்லி தொடர்ந்த கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கில் மார்ச் 9-ந் தேதி தீர்ப்பு Posted: 23 Feb 2016 06:45 PM PST மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, முன்பு டெல்லி கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தபோது, மைதானம் கட்டியதில் ஊழல் முறைகேடு நடந்ததாக, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குமார் விஷ்வாஸ், அசுதோஷ் உள்பட 6 பேர் குற்றம் சாட்டினர். |
| சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் கடிதம் Posted: 23 Feb 2016 06:23 PM PST சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு இட மாற்றம் செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கடந்த 12-ந்தேதி கருத்துரு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த கருத்துருவை தாமாக முன்வந்து வழக்கு ஆக்கிய சி.எஸ்.கர்ணன், அதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். |
| உத்தர பிரதேசத்தில் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை Posted: 23 Feb 2016 02:16 PM PST உத்தர பிரதேசத்தில் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் சித்தாப்பூர் என்ற இடத்தில் வீட்டு வேலை செய்யும் சகோதரிகள் 2 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். |
| முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக தேர்வு Posted: 23 Feb 2016 11:17 AM PST தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக பதவி வகித்து வந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அதன்பின்பு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான குழு கூட்டம் நேற்று |
| Posted: 23 Feb 2016 10:27 AM PST தேசத் துரோக வழக்கில் கைதாகியுள்ள டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையா குமார், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மீது கடந்த 17-ம் தேதி பாட்டியாலா கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர் கும்பல் கடுமையாக தாக்கியது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |