Tamil Star |
- யோர்க் பிராந்தியத்தில் விபத்து – இருவர் பலி
- தெற்கு ஒன்ராறியோவிற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை
- மட்டுப்படுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பில் நகரசபை உள்ளக பணியாளர்கள்
- Sunnylea பகுதியில் தீ சம்பவம்
- எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் உணவுகள்!
- அழகுக்கு 10 குறிப்புகள்: தவறாமல் பின்பற்றுங்கள்!
| யோர்க் பிராந்தியத்தில் விபத்து – இருவர் பலி Posted: 22 Feb 2016 08:35 PM PST
குப்பைகள் சேகரிக்கும் வாகனமும், கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. Georginaவின் Baseline வீதி மற்றும் Old Homestead வீதிகளுக்கு இடைபில் உள்ள McCowan வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக யோர்க் பிராந்தியக் காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்தில் இரண்டு நபர்கள் அசைவற்ற நிலையில் கிடந்ததாகவும், அவர்களிற்கு ஏற்பட்டிருந்த காயம் காரணமாக சிறிது நேரத்தில் அவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த விபத்தின் போது வாகனத்தில் வேறு நபர்கள் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. விபத்தை பார்த்தவர்கள் அது குறித்து தெரிவிக்க முன்வருமாறு பொதுமக்களிடம் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். விபத்தை அடுத்து சில மணித்தியாளங்களுக்கு Baseline வீதியில் இருந்து Old Homestead வீதி வரையிலான McCowan வீதி போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்ததுடன், பின்னர் இரவு 10 மணியளவில் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. The post யோர்க் பிராந்தியத்தில் விபத்து – இருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தெற்கு ஒன்ராறியோவிற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை Posted: 22 Feb 2016 07:16 PM PST
அமெரிக்காவின் தெற்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை நாளை மறுநாள் ஒன்ராறியோவை வந்தடையும் எனவும், அதன் காரணமாக ஒன்ராறியோவின் சில பகுதிகளில் மழை மற்றும் பலத்த பனிப்பொழிவு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் உறைபனிமழை ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. The post தெற்கு ஒன்ராறியோவிற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மட்டுப்படுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பில் நகரசபை உள்ளக பணியாளர்கள் Posted: 22 Feb 2016 11:49 AM PST
இதுவரையில் நகர நிர்வகாத்துடன் தமது கோரிக்கைகள் குறித்து நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோற்வியடைந்துள்ளதை அடுத்தே, இந்த மட்டுப்படுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை தொடரப்போவதான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உள்ளக பணியாளர்களை உள்ளடக்கிய சங்கமான CUPE Local 79 இன் தலைவர் Tim Maguire நேற்ற மாலை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அனைத்துத் பணியாளர்களும் மட்டுப்படுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர்கள் என்றும், அதனால் தமது பணி வரையறைகளுக்கு மேலதிகமான எந்த பணிகளில் இருந்தும் அவர்கள் விலகிக்கொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிம், சிறுவர் பராமரிப்பு மற்றும் அனுமதிப்பத்திரச் சேவைகள் போன்ற நகரசபைப் பணிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. நகரசபை உள்ளகப் பணியாளர்களின் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.01 இல் இருந்து நடப்பிற்கு வருகிறது என்றும், நகர நிர்வாகத்துடன் இணக்கப்பாடு எட்டும் வரையில் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் சங்கத்தின் தலைவர் Maguire தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடுகளை எட்டுவதற்காக இரண்டு தடவைகள் காலக்கெடு வழங்கப்பட்டு பேச்சுக்கள் தொடர்ந்த போதிலும் ஆக்கமான எந்த விளைவுகளும் ஏற்படாததை அடுத்தே இந்த நடவடிக்கையில் தாம் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். The post மட்டுப்படுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பில் நகரசபை உள்ளக பணியாளர்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 22 Feb 2016 11:11 AM PST
மேற்கு Bloor வீதி மற்றும் Gardenvale வீதியில் அமைந்துள்ள Black Angus Steakhouse இல் நேற்று மாலை 6.45 மணியவில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அடுப்பு ஒன்றில் இருந்து தீ பற்ற ஆரம்பித்தாகவும் உணவகத்தின் கூரைக்கும் தீ பரவியிருந்தாகவும் ரொரன்ரோ தீயணைப்புப் படை அதிகாரியான கப்டன் Mike தெரிவித்துள்ளார். இந்த தீயணைப்புப் பணிகளுக்காக 12 தீயணைப்பு வாகனங்கள் 45 தீயணைப்புப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்றும், சுமார் ஒரு மணி நேரத்தினுள் தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருப்பட்டிருந்தாகவும் கூறப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து மேற்கு Bloor வீதியின் கிழக்குத் தடம் நோக்கிய பயணங்கள் அனைத்தும் Gardenvale வீதியினூடாக மாற்றி அனுப்பப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post Sunnylea பகுதியில் தீ சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் உணவுகள்! Posted: 22 Feb 2016 07:33 AM PST
இது நீடித்தால், பின் எலும்புகளின் அடர்த்தி குறைந்து பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். எலும்புகளை வலுவிழக்கச்செய்யும் உணவுகள் உப்பு நிறைந்த உணவுகள் உப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் கால்சியத்தின் அளவு குறையும். ஏனெனில் அதிகப்படியான சோடியம் உடலில் இருந்து, அதிகப்படியான அளவில் கால்சியத்தை சிறுநீரகங்களின் வழியே வெளியேற்றும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க ஒரு நாளைக்கு 1,500 மிகி (1/2 டீஸ்பூன்) அல்லது அதற்கும் குறைவான அளவில் சோடியத்தை எடுத்து வாருங்கள் மற்றும் குறைந்தது 1,200 மிகி கால்சியத்தையும் தவறாமல் எடுத்து வாருங்கள். சோடா ஒரு வாரத்தில் 7-க்கும் அதிகமான அளவில் சோடா பானங்களைப் பருகினால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில் கோலாவில் உள்ள பாஸ்பாரிக் அமிலம், உடல் கால்சியத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்துவதோடு, குடலையும் பலவீனமாக்கும். எனவே சோடா பானங்களைப் பருகுவதைத் தவிர்த்து, பழச்சாறுகளைப் பருக ஆரம்பியுங்கள். காபி, டீ காபி, டீ போன்ற பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் காபி, டீயில் உள்ள காப்ஃபைன் எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றி, வலிமையை இழக்கச் செய்யும். அதிலும் ஒருமுறை நீங்கள் 100 மிகி காப்ஃபைன் எடுத்தால், 6 மிகி கால்சியம் எலும்புகளில் இருந்து வெளியேற்றும். ஆல்கஹால் அதிகப்படியான ஆல்கஹால் எலும்புகளின அடர்த்தி மற்றும் எலும்புகள் உருவாக்கத்தைக் குறைத்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயத்தை உண்டாக்கும். எனவே ஆல்கஹால் பருகுவதைத் தவிர்த்திடுங்கள். காளான், கத்தரிக்காய் தக்காளி, காளான், கத்திரிக்காய், வெள்ளை உருளைக்கிழங்கு போன்றவை எலும்பு அழற்சியை ஏற்படுத்தி, நாளடைவில் ஆஸ்டியோபோரோசிஸிற்கு வழிவகுக்கும். ஆனால் இவற்றில் எலும்புகளுக்கு தேவையான விட்டமின்களும், இதர ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளதால், இதனை உண்பதை முற்றிலும் தவிர்க்காமல், அளவாக உட்கொண்டு வாருங்கள். குறிப்பாக தினமும் தவறாமல் 1,200 மிகி கால்சியத்தை எடுத்து வாருங்கள். The post எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் உணவுகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அழகுக்கு 10 குறிப்புகள்: தவறாமல் பின்பற்றுங்கள்! Posted: 22 Feb 2016 06:55 AM PST
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் முகப்பொலிவோடு காணப்படுவீர்கள். * தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது. * தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது. * தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம். * கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும். * தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு தொல்லை வராது. * 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும். * பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது. * பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. * பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது. The post அழகுக்கு 10 குறிப்புகள்: தவறாமல் பின்பற்றுங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

யோர்க் பிராந்தியத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இருவர் உயிரிழந்துள்னர்.
கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் ஒன்ராறியோவின் தெற்குப் பகுதிகளுக்கான சிப்பு வானிலை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் தென் பிராந்தியங்களில் எதிர்வரும் புதன், வியாழக்கிழமைகளில் பலத்த தாழமுக்கத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நகரசபை உள்ளகப் பணியாளர்கள் இன்று திங்கட்கிழமையில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.

Sunnylea பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் தீ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்றாடம் உண்ணும் சில உணவுகளால் அந்த கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிறது.




உங்கள் அழகை இன்னும் அதிகரிக்க கீழே 10 குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.