Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நடிகர் சிரஞ்சீவி மேலும் 5 கிராமங்களை தத்து எடுக்கிறார்

Posted: 22 Feb 2016 10:25 PM PST

காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான நடிகர் சிரஞ்சீவி ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேருபாளையம் என்ற கிராமத்தை தத்து எடுத்தார். இந்த கிராமத்துக்கு தனது எம்.பி. நிதியான ரூ.30 லட்சத்தில் சமுதாய நலக்கூடத்தை கட்டி உள்ளார். இதனை திறந்து வைத்து அவர் பேசியதாவது:– இந்த கிராமத்தை எனது சிறுவயதில் இருந்தே அறிவேன். எந்த

இரவில் தூங்கி கொண்டு பயணம் செய்யும் ரெயில் பயணிகளை எழுப்பிவிட எஸ்.எம்.எஸ். சேவை: பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது

Posted: 22 Feb 2016 10:20 PM PST

மத்திய ரெயில்வே பட்ஜெட் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள், சலுகைகளை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 எம்.எல்.ஏக்கள் விலகல்: தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தனர்

Posted: 22 Feb 2016 10:20 PM PST

தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் 10 பேர், ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தனர். இந்த நிலையில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 எம்.எல்.ஏக்களும் ஒரு எம்.எல்.சி.யும், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் நேற்று இணைந்தனர்.

ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

Posted: 22 Feb 2016 10:08 PM PST

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்ககூடாது: தந்திரிகள், பூசாரிகள் எதிர்ப்பு

Posted: 22 Feb 2016 08:17 PM PST

சபரிமலையில் உள்ள பிரசித்திபெற்ற சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு பூஜை, மண்டல பூஜை மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

ஜாட் இடஒதுக்கீடு விவகாரம்: வெங்கையா நாயுடு உடன் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டர் இன்று சந்திப்பு

Posted: 22 Feb 2016 08:06 PM PST

அரியானாவில் வாழும் ஜாட் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கேட்டு கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். ரோட்டக், ஜாஜார், பிவானி, சார், ஜிந்த், கைதால், குர்கான் உள்ளிட்ட

வாரணாசி வந்த கெஜ்ரிவாலுக்கு கருப்பு கொடி: பா.ஜனதா-ஆம் ஆத்மி தொண்டர்கள் மோதல் - போலீஸ் தடியடி

Posted: 22 Feb 2016 07:33 PM PST

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வாரணாசி அருகே சீர்கோவர்த்தன்பூரில் உள்ள துறவி ரவிதாஸ் கோவிலுக்கு செல்வதற்காக நேற்று மதியம் வாரணாசி வந்தார். முன்னதாக அவர் விமானம் மூலம் பாபத்பூர் விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கட்சி தொண்டர் ஒருவரின் வாகனத்தில் ஏறி அவர் சீர்கோவர்த்தன்பூர் சென்றார்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை: நடிகர் சஞ்சய் தத் நாளை மறுநாள் விடுதலை ஆகிறார்

Posted: 22 Feb 2016 07:13 PM PST

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தின் போது, இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு மும்பை தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

நேபாள பிரதமர் இன்று மும்பை வருகை

Posted: 22 Feb 2016 06:54 PM PST

நேபாள நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஓலி இன்று(செவ்வாய்க்கிழமை) மும்பை வருகிறார். இரவு 7 மணிக்கு மும்பை கவர்னர் மாளிகைக்கு செல்லும் அவரை, மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் வரவேற்கிறார். அதன் பின்னர் இருவரும் பேசுகிறார்கள்.

சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிருக்கு வட்டியில்லா கடன்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

Posted: 22 Feb 2016 06:44 PM PST

நாக்பூர் மான்காபூர் பகுதியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான மகளிர் மாநாட்டில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடியிருந்த சுமார் 30 ஆயிரம் பெண்கள் மத்தியில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: சுப்பிரமணிய சாமி தாக்கல்

Posted: 22 Feb 2016 05:43 PM PST

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்டக்கோரி பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், 'பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ள நடைமுறைகளின்படி, சாலையமைத்தல் போன்ற பொதுநலனுக்காக ஒரு மசூதியை எந்த பகுதிக்கும் மாற்ற

அரியானாவில் பாதுகாப்பு படையினருடன் ஜாட் சமூகத்தினர் பயங்கர மோதல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

Posted: 22 Feb 2016 05:31 PM PST

அரியானாவில் வாழும் ஜாட் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கேட்டு கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ரோட்டக், ஜாஜார், பிவானி, சார், ஜிந்த், கைதால், குர்கான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த

உலக தாய்மொழிகள் தின நிகழ்ச்சி: தமிழ் உள்பட 22 மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்க கோரிக்கை

Posted: 22 Feb 2016 05:04 PM PST

மொழி சமத்துவம் மற்றும் உரிமைக்கான பரப்பியக்கம் என்ற அமைப்பின் சார்பில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உலக தாய்மொழிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த தியாகிகளுக்கும்,

அரியானா சட்டமன்றத்தில் ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு மசோதா மாநில மந்திரி சபையில் முடிவு

Posted: 22 Feb 2016 04:27 PM PST

அரியானாவில் ஜாட் சமூகத்தினரின் இட ஒதுக்கீடு போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநில மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமை தாங்கினார்.

நேரு பல்கலைக்கழகத்தில் இந்திய எதிர்ப்பு கோஷம்: சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

Posted: 22 Feb 2016 03:47 PM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார், தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 15 மற்றும் 17-ந் தேதிகளில் அவர் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது வக்கீல் உடையணிந்த சிலர் தாக்குதல்

ஜாட் இன மக்கள் போராட்டம் எதிரொலி: கொச்சுவேலி-அமிர்தசரஸ் ரெயில் ரத்து

Posted: 22 Feb 2016 02:58 PM PST

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கொச்சுவேலி-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12483) ரெயில் 24-ந்தேதி (நாளை) காலை 9.20 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு

எரிவாயு குழாய் பதிக்க அனுமதித்ததை எதிர்த்து விவசாயிகள் சங்கம் மறு ஆய்வு மனு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

Posted: 22 Feb 2016 12:57 PM PST

விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்க அனுமதி வழங்கியதை மறுஆய்வு செய்யக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயு குழாய்களை தமிழகத்தில் 7 மாவட்டங்களின் விவசாய

பருவநிலை மாற்றம் பிரச்சினைக்கு தீர்வுகாண பாடுபடுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Posted: 22 Feb 2016 11:48 AM PST

பருவநிலை மாற்றம், எரிசக்தி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாடுபடுமாறு மாணவர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில்

வறட்சியால் பாதிக்கப்பட்ட மராட்டிய விவசாயிகளுக்கு உதவ சச்சின் முடிவு

Posted: 22 Feb 2016 10:50 AM PST

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அம்மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மராட்டிய விவசாயிகளுக்கு உதவ சச்சின் முடிவு செய்துள்ளார்.

ஜாட் இடஒதுக்கீடு குறித்து உடனடியாக விசாரிக்க முடியாது: அமைதியை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட் அறிவுரை

Posted: 22 Feb 2016 09:35 AM PST

அரியானா மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பொதுநல மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் லலித் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாட் இடஒதுக்கீடு குறித்து மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்றும் தற்காலிகமாக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™