Tamil Star |
- Thorncliffe அடுக்குமாடிக் குடியிருப்பில் கத்திக்குத்துச் சம்பவம்
- Thornhill பகுதியில் உள்ள யங் வீதி போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது
- நகரசபை உள்ளக பணியாளர்களின் காலக்கொடு 24 மணித்தியாளங்களுக்கு நீடிப்பு
- ஒன்ராறியோவில் முதல் ஸிகா வைரஸ் தொற்று
| Thorncliffe அடுக்குமாடிக் குடியிருப்பில் கத்திக்குத்துச் சம்பவம் Posted: 20 Feb 2016 10:26 AM PST
படுகாயமடைந்த அந்த 47 வயதான நபரை மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Overlea Boulveard மற்றும் Don Mills வீதிப் பகுதியில் Thorncliffe Park Drive இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றினுள் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த நபர் மீத பல முறை கத்திகுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் எத்தனை தடவை என்று கூற முடியவில்லை என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை. The post Thorncliffe அடுக்குமாடிக் குடியிருப்பில் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Thornhill பகுதியில் உள்ள யங் வீதி போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது Posted: 20 Feb 2016 10:15 AM PST
கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்புச் சுவருடன் மோதி விபத்துக்குள்ளானதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து Clark அவனியூவிற்கு அருகில் உள்ள யாங் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த ஆண் சாரதி உயிராபத்தான காயங்களுக்கு ஆளான நிலையில், வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை அடுத்து Clark அவனியூ மற்றும் Elgin வீதிக்கு இடைப்பட்ட யங் வீதி போக்குவரத்துக்குக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வீதிப் பகுதி குறைந்தது மாலை 6 மணிவரையேனும் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருக்கும் என காவல்த்துறையினர் கூறியுள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும் விபத்துக்கு மது காரணம் என்று தோன்றவில்லை என்றும் காவல்த்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது. The post Thornhill பகுதியில் உள்ள யங் வீதி போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நகரசபை உள்ளக பணியாளர்களின் காலக்கொடு 24 மணித்தியாளங்களுக்கு நீடிப்பு Posted: 20 Feb 2016 07:29 AM PST
நகர நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்த நகர சபையின் உள்ளக பணியாளர்கள், தமது கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாடு ஏற்படாது விடின் இன்று நள்ளிரவுடன் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் உள்ளகப் பணியாளர் சங்கத்திற்கும், நகர நிர்வாகத்திற்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. அதனால் தற்போது தமது அந்த காலக்கெடுவை மேலும் 24 மணியத்தியாளத்திற்கு அதிகரிப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் சங்கத்திற்கும், நகர நிர்வாகத்திற்கும் இடையிலான பேச்சுக்கள் இன்று சனிக்கிழமையும் தொடரும் என்றும் அது கூறியுள்ளது. அவசர மருத்துவ பணியாளர்கள், பனி சுத்திகரிப்பு பணியாளர்கள், குப்பை அகற்றும் பணியாளர்கள், வாகனத் தரிப்பிட பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 6,000 வெளிப்புற பணியாளர்களும், சுமார் 20,000 உள்ளக பணியாளர்களுமே தமது ஒப்பந்த மீளாய்வுக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். சம்பள அதிகரிப்பு, பணி நிரந்தரம், பாலின சமத்துவம், தமக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி அவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டு பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுமாயின், சிறுவர் பாராமரிப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் செயலிழக்கும் என்பதுடன், நகருக்கான குப்பை சேகரிப்பு, நடைபாதையோர துப்பரவாக்கல் பணிகளும் தடைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது The post நகரசபை உள்ளக பணியாளர்களின் காலக்கொடு 24 மணித்தியாளங்களுக்கு நீடிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோவில் முதல் ஸிகா வைரஸ் தொற்று Posted: 20 Feb 2016 07:19 AM PST
ஆனால் அமைச்சு வெளியிட்ட அந்த தகவலில் நோய்த் தொற்றுக்கு ஆளான நபர் ஆணா , பெண்ணா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் தொற்றுக்கு ஆளான அந்த நபர் கற்பிணி இல்லை என்று ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை இந்த நபர் அண்மையில் கொலம்பியாவிற்கு பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையிலேயே அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஸிகா வைசரஸ் கடந்த ஆண்டு மே மாதம் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, மெக்சிகோ, கரிபியன் நாடுகளுக்கு பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடாவிலும் மிகக் குறைந்த நோய் தொற்று எண்ணிக்கையாக பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பேர்ட்டா, கியூபெக் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு நோய் தொற்றுக்கு ஆளான நபர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. இதேவேளை இந்த நோய் ஆபத்து ஒன்ராறியோ மாகாணத்திற்கு மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ள ஒன்ராறியோவின் பிரதான மருத்து அதிகாரியான மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ், குறித்த வைரஸ்சை பரப்புவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நுளம்புகள் கனடாவினுள் பெருக மாட்டா என தெரிவித்துள்ளார். ஏனெனில் கனடாவில் அந்த நுளம்புகள் பெருகுவதற்கு உகந்தான பருவநிலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். The post ஒன்ராறியோவில் முதல் ஸிகா வைரஸ் தொற்று appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Thorncliffe அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்து ஒன்றினை அடுத்து Thornhill பகுதியில் உள்ள யங் வீதி (Yonge Street) போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
நகரசபை உள்ளக பணியாளர்களை பிரந்திநிதித்துவப் படுத்தும் சங்கம் தனது காலக்கொடுவை 24 மணித்தியாளங்கள் நீடிப்பதாக அறிவித்துள்ளது.
நோய் தொற்ற ஏற்பட்டுள்ளமை சோதனைகள் மூலம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை ஒன்ராறியோ பொது சுகாதார நிர்வாகம் அறிவித்துள்ளது.