Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இணக்கப்பாடு எட்டப்படாது முடிந்தது நகர வெளிக்களப் பணியாளர்களுடனான பேச்சு

Posted: 19 Feb 2016 08:07 AM PST

ரொரன்ரோ நகர வெளிக்களப் பணியாளர்களுக்கும் நகர நிர்வாகத்திற்கும் இடையிலான பேச்சுக்களில் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவரும் ரொரன்ரோ நகர உள்ளக மற்றும் வெளியக பணியாளர்கள், அந்த கோரிக்கை தொடர்பில் கால எல்லையையும் வெளியிட்டிருந்தனர். வெளியக பணியாளர்களின் கால எல்லை நேற்று நள்ளிரவுடன் முடிவுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரொரன்ரோ நகர வெளிக்களப் பணியாளர்களுக்கும் நகர நிர்வாகத்திற்கும் இடையில் நேற்று இரவு நடாத்தப்பட்ட பேச்சுக்கள் அந்த கால எல்லையைக் கடந்தும் […]

The post இணக்கப்பாடு எட்டப்படாது முடிந்தது நகர வெளிக்களப் பணியாளர்களுடனான பேச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

GO பேருந்தில் இருந்த பயணி ஒருவர் கைது

Posted: 19 Feb 2016 07:46 AM PST

Arrest_-_11252015

Arrest_-_11252015GO பேருந்தில் பயணித்த ஒருவரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பேருந்து ஹமில்ட்டனில் இருந்து புறப்பட்டு கார்டினர் விரைவுசாலை வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது அதனை சுற்றிவளைத்து நிறுத்திய காவல்த்துறையினர், அதில் பயணித்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

நெடுஞ்சாலை 427 பகுதியில் இடம்பெற்ற இந்த கைது நடவடிக்கையின் போது, குறித்த பேருந்தில் சுமார் 20 போர் பயணம் செய்திருந்தனர் என்று கூறப்படுகிறது.

நெடுஞ்சாலையில் பேருந்து இடைமறிக்கப்பட்டதுடன், அந்த பேருந்தை எட்டு காவல்த்துறை வாகனங்கள் சூழ்ந்துகொண்டு சுமார் அரை மணித்தியாளம் தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பேரூந்து தடுத்து நிறுத்தப்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் உடனடியாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.Arrest_-_11252015

இந்த நடவடிக்கையின் போது ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர், ஹமில்ட்டன் காவல்த்துறையினர், ரொரன்ரோ மற்றும் டூர்ஹாம் பிராந்திய காவல்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்ததாகவும் தெரியவருகிறது.

பேருந்தில் இருந்த ஆண் நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டிருந்தார் என கூறப்படும் நிலையில், அவர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பம் ஒன்றுடன் தொடர்புடையதாக சந்தேகிக்ப்பட்டமையாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என மெட்ரோலிங்ஸ் நிறுவன பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

The post GO பேருந்தில் இருந்த பயணி ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாதம் வடிச்ச கஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted: 19 Feb 2016 06:54 AM PST

ui

uiசாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.

அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.

சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும்.

2. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.

3. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும்.

4. வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.ui

5. சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

6. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

7. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

The post சாதம் வடிச்ச கஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

காடை முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமா?

Posted: 19 Feb 2016 06:51 AM PST

ui

uiஆரோக்கிய வாழ்க்கைக்கு நாள்தோறும் ஒரு முட்டை சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதனால் கோழி முட்டையை மட்டும் சாப்பிடமால், காடை முட்டையையும் கொஞ்சம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

காடை முட்டையில் என்ன சத்துக்கள் உள்ளன?

100 கிராம் காடை முட்டையில், Saturated fat 3.6 கிராம், Polyunsaturated fat 1.3 கிராம், Monounsaturated fat 4.3 கிராம் அடங்கியுள்ளன.

மேலும், சோடியம் - 141 மிகி, பொட்டாசியம் - 132 மிகி, கார்போஹைட்ரேட் - 0.4 கி, சர்க்கரைச்சத்து - 0,4 கி, புரதச்சத்து - 13 கி, விட்டமின் A - 10 சதவீதம், கால்சியம் - 6 சதவீதம், விட்டமின் D - 13 சதவீதம், விட்டமின் B12 - 26 சதவீதம் மற்றும் மக்னீசியம் - 3 சதவீதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.ui

மருத்துவ பயன்கள்

விட்டமின் A சத்து அதிக அளவில் இருப்பதால் தெளிவான கண்பார்வைக்கு உதவுகிறது, மேலும் கண்புரை பிரச்சனை மற்றும் வயதான காலத்தில் macular சிதைந்துபோகாமல் இருக்க உதவுகிறது.

இதில் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாது. அதுமட்டுமின்றி உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காடை முட்டையை உணவில் சேர்த்துகொள்ளலாம்.

புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் திசுவளர்ச்சி, தசை, எலும்பு, மற்றும் இரத்த நாளங்கள் போன்றவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கனிமச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, சிறுநீர்ப்பை பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சனை போன்றவற்றை குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட், விட்டமின் A மற்றும் விட்டமின் C சத்துக்கள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

உடலில் வீக்கம் போன்ற அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டால் காடை முட்டையை சாப்பிடுவதன் மூலம் அலர்ஜி பிரச்சனை குணமாகும்.

ஹார்மோன் மற்றும் நொதித்தல் செயல்பாடுகள் போன்ற வளர்சிதை மாற்றத்திற்கு விட்டமின் B உதவுகிறது.

இதில் உள்ள நுண்ணோட்டப் பொருட்கள் உடலுக்கு அதிக ஆற்றல் தருகின்றன, காலை உணவோடு இதனை சேர்த்துக்கொண்டால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்போடு செயல்படலாம்.u998u

The post காடை முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™