Tamil Star |
- பிற்பகலில் ஹமில்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
- புளிச்ச கீரை சாப்பிடுங்கள்!
- கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
- போர் விமானங்கள் மீட்க்கப்படுவதற்கு பழமைவாதக் கட்சி அதிருப்தி
- வடக்கு ரொரன்ரோவில் தீ சம்பவம்
| பிற்பகலில் ஹமில்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி Posted: 18 Feb 2016 07:49 PM PST
Wellington வீதி மற்றம் Brucedale Avenue பகுதிக்கு அருகில் பின்நேரம் 4.30 மணிக்கு சற்று முன்னராக அந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை காவல்த்துறை அதிகாரிகள் வந்தடைந்த போது 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாக கூறப்பட்டுள்ளது. அவர் உடனடியாக அவசர மருத்துவப் பிரிவினரால் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த போதிலும், பின்னர் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வேறு எவரும் காயமடைந்தாக முறைப்பாடுகள் எவையும் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்த்துறையினர், இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மை அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். The post பிற்பகலில் ஹமில்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 18 Feb 2016 05:39 PM PST
நாம் சாப்பிட்ட உணவு சீரணமடைய கீரைகளை சாப்பிட வேண்டும். கீரைகளில் ஒன்றான, புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும். புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். இருமலுக்கான மருந்து பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த கீரை புளிப்பு சத்தை உடையது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, அரிப்பு, மயக்கம் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. The post புளிச்ச கீரை சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? Posted: 18 Feb 2016 05:35 PM PST
ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெழுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள். புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவையெனில் கெளுத்தி மீனை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம்.
100 கிராம் கெளுத்தி மீனில், Saturated fat 3.3 கிராம், Polyunsaturated fat 3.3 கிராம், Monounsaturated fat 6 கிராம் அடங்கியுள்ளன, மேலும், சோடியம் - 71 மிகி, பொட்டாசியம் - 340 மிகி, கார்போஹைட்ரேட்- 8 கி, விட்டமின் A, C, கால்சியம் 4 சதவீதம், விட்டமின் D - 10 சதவீதம், விட்டமின் B12 - 6 சதவீதம் அடங்கியுள்ளன. மருத்துவ பயன்கள் 6.1 கிராம் கெளுத்தி மீனில் 122 கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிடலாம். பெண்கள் ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை கலோரி உணவுகள் எடுத்துக்கொள்ளலாம், அதுபோன்று ஆண்கள் ஒரு நாளைக்கு 400 முதல் 600 கலோரி எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். எனவே, கலோரி குறைவாக உளள கெளுத்தி மீனை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில், ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட் உள்ளது, இந்த இரு சத்துக்களும் இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது என அமெரிக்க இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் உள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்துகிறது. அது மட்டுமன்றி புரத்தச்சது, கார்போஹைட்ரேட் போன்றவவை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றன. நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக விட்டமி B12 தேவை, அப்படி விட்டமின் B12 நிறைந்த உணவுகள் இல்லாமல் நீங்கள் டயட்டில் இருந்தால், உங்கள் நரம்பு செயல்பாடு பாதிக்கப்படுகிறது, எனவே விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீனை சாப்பிடுங்கள். அனைத்து மீன்களிலும் Mercury நிறைந்துள்ளது, அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் Mercury எடுத்துக்கொண்டால் உங்கள் கருவை பாதிக்க வாய்ப்பிருக்கிறது, இந்த கெளுத்தி மீனில் குறைவான அளவிலேயே Mercury உள்ளது, எனவே இதனை சாப்பிடலாம். The post கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| போர் விமானங்கள் மீட்க்கப்படுவதற்கு பழமைவாதக் கட்சி அதிருப்தி Posted: 18 Feb 2016 11:19 AM PST
ஈராக் மற்றும் சிரிய பிராந்தியங்களில் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் கனடாவின் போர் விமானங்கள் மீட்டுக்கொள்ளப்படும் என லிபரல் கட்சி தனது கடந்த தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய லிபரல் அரசாங்கம் எதிர்வரும் 22ஆம் திகதியுடன் ஈராக் மற்றும சிரிய பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கனடாவின் போர் விமானங்களின் நடவடிக்கை முடிவுக்கு வருவதாக அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டது. எனினும் தற்போதைய லிபரல் அரசாங்கத்தின் இந்த முடிவை முன்னைய அரசாங்கம் கடுமையாக சாடியுள்ளது. பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் தலைமையிலான முன்னைய பழமைவாத அரசாங்கத்தின் ஆட்சியின் போதே ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களுக்காக கனேடிய விமானங்களை அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை விமானங்களை மீட்டுக் கொள்வது தொடர்பான லிபரல் அரசாங்கத்தின் அறிப்பு தொடர்பில் புதிய சனநாயக கட்சியும் கருத்து வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான பன்னாட்டு போர் நடவடிக்கையில் கனடாவின் பங்கு எவ்வாறு அமையப்போகிறது என்ற தெளிவான விளக்கத்தினை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது. கனேடிய தரைப்படை நிபுணர்கள் தொடர்ந்தும் அந்த பிராந்தியத்தில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றமையை சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு அவர்களுக்கு அச்சுறுத்தல் நேரும் வேளையில் எவ்வாறு அவர்கள் அங்கிருந்து வெளியோறுவார்கள் என்பதனை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் புதிய சனநாயகக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. The post போர் விமானங்கள் மீட்க்கப்படுவதற்கு பழமைவாதக் கட்சி அதிருப்தி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கு ரொரன்ரோவில் தீ சம்பவம் Posted: 18 Feb 2016 11:09 AM PST
அந்த பகுதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்த வீடு ஒன்றிலேயே இன்று அதிகாலை தீ பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. Mount Plesant மற்று Blythwood வீதிக்கு அருகில் Stibbard அவனியூவில் அமைந்திருந்த அந்த வீட்டை அதிகாலை 4.30 மணிக்கு சற்று முன்னராக வந்தடைந்திருந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்தனர். தீ சம்பவம் காரணமாக குறித்த அந்த பகுதி ஊடான வீதிகள் அனைத்தும் போக்குவரத்துக்கு மூடப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன. திருத்த வேலைகள் இடம்பெற்றமையால் அந்த வீட்டில் யாராவது வசித்து வந்தமைக்கான அறிகுறிகள் தெரியவில்லை என தெரிவித்துள்ள அவசர மருத்துவப் பிரிவினர், அதனால் எவரும் காயமடைந்ததாக இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். The post வடக்கு ரொரன்ரோவில் தீ சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


தினமும் உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது.
ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெழுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.


