Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தேசபக்தி என்பது என் இரத்தத்தில் இரண்டற கலந்துள்ளது: அமேதியில் ராகுல் காந்தி பேட்டி

Posted: 18 Feb 2016 11:02 PM PST

தேசவிரோத சக்திகளின் போராட்டங்களுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து வருவதாக பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில் தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் ராகுல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

பதான்கோட் தாக்குதல் விவகாரம்: முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்தது பாகிஸ்தான்

Posted: 18 Feb 2016 10:52 PM PST

பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் போலீஸ் நிலையத்தில் முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தை தகர்க்கும்

ரூ.251 விலையில் ஸ்மார்ட் போன்: உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மளிகைக் கடைக்காரர் மகனின் சாதனை

Posted: 18 Feb 2016 10:20 PM PST

மோஹித் கோயல். கடந்தவாரம் வரை இந்தப் பெயர் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு பரிச்சயம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்று ஒரேநேரத்தில் ஆறுலட்சம் பேர் இணையதளத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நுழையவைத்து

டெல்லி மாணவர்களுக்கு ஆதரவு அளித்த ராகுல் காந்தியை துப்பாக்கியால் சுட வேண்டும்: பா.ஜனதா எம்எல்ஏ ஆணவ பேச்சு

Posted: 18 Feb 2016 10:14 PM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையாகுமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. கன்னையா குமாரை விடுதலை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

இரும்பு கம்பிகள் ஏற்றிவந்த லாரி மோதி மினி வேனில் வந்த 12 பேர் உடல் நசுங்கி பலி

Posted: 18 Feb 2016 09:26 PM PST

கர்நாடக மாநிலத்தில் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் வந்த மினி வேன் மீது அளவுக்கு அதிகமாக இரும்பு கம்பிகளை ஏற்றிவந்த லாரி மோதிய விபத்தில் ஒருபெண் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து, உயிரிழந்தனர்.

வேகமாக வந்த புறநகர் ரெயில் மோதி தண்டவாளங்களை பரிசோதிக்கும் 4 தொழிலாளிகள் பலி

Posted: 18 Feb 2016 09:19 PM PST

மராட்டிய மாநில தலைநகரான மும்பையின் புறநகர் பகுதியான குர்லா-வித்யா விஹார் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை தண்டவாளங்களை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் (கேங்மென்) அவ்வழியாக வேகமாக வந்த புறநகர் ரெயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில்மிஷ ஆண்களை வீழ்த்த பெண்களுக்கு ஷாக்கிங் கிளவுஸ்

Posted: 18 Feb 2016 09:14 PM PST

பெண்களிடம் 'செக்ஸ்' சில்மிஷத்தில் ஈடுபடும் ஆண்களை வீழ்த்த 'ஷாக்கிங் கிளவுஸ்' என்ற புதிய ஆயுதத்தை பள்ளி மாணவன் தயாரித்து உள்ளான். அந்த மாணவர் பெயர் நிரஞ்சன் சுதார். 17 வயதான இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் அகோர் அரசு பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறான்.

போலீஸ் நிலையத்தில் காணாமல்போன இயந்திரத் துப்பாக்கியுடன் காஷ்மீர் போராளி சரணடைந்தார்

Posted: 18 Feb 2016 09:11 PM PST

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம்சாகிப் போலீஸ் நிலையத்துக்கு நேற்றிரவு இயந்திரத் துப்பாக்கியுடன் வந்த ஒரு வாலிபர் போலீசாரிடம் சரணடைந்தார். இங்குள்ள பிஜ்பெஹாரா காவல் நிலையத்தில் பாதுகாப்பு காவலராக

பராமரிக்க முடியாத 53 சொத்துக்களை விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு

Posted: 18 Feb 2016 08:59 PM PST

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அசையா சொத்துக்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. விவசாய நிலம், வீட்டு மனை, வீடு, கட்டிடம், மடம் போன்றவை இந்த சொத்துக்களில் அடங்கும். இவைகளில் பல சொத்துக்கள் தேவஸ்தானத்தால் பராமரிக்க முடியாமல்

ராஞ்சியில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை: 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்

Posted: 18 Feb 2016 08:53 PM PST

ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நேற்றிரவு டமாரா காட்டி என்ற பகுதியை சுற்றிவளைத்த மத்திய பாதுகாப்புப் படை போலீசார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர்.

கேரள கூட்டுறவு துறை மந்திரி மீது ஊழல் புகார்: அறிக்கை தாக்கல் செய்ய விஜிலென்ஸ் கோர்ட்டு உத்தரவு

Posted: 18 Feb 2016 08:37 PM PST

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள மந்திரிகள் மீது அடுத்தடுத்து ஊழல் புகார் கூறப்பட்டு வருகிறது. முதல்–மந்திரி உம்மன் சாண்டி, உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா, நிதி மந்திரி கே.எம். மாணி மற்றும் மந்திரிகள் பாபு, சிவக்குமார் ஆகியோர் மீது

இந்தியாவுக்கு எதிராக கோஷம்: டெல்லி பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கிலானி திகார் சிறையில் அடைப்பு

Posted: 18 Feb 2016 08:24 PM PST

இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்ட நிகழ்ச்சியை நடத்திய டெல்லி பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கிலானி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டிய மாணவ சமுதாயத்தினர், தங்களது தாய்நாட்டை இழிவுப்படுத்தி கோஷமிடுவதும், எதிரிநாட்டையும்,

சகிப்பின்மை பிரச்சினையை மறந்து தண்ணீருக்காக பா.ஜனதா அரசுடன் இணைந்த அமீர்கான்

Posted: 18 Feb 2016 07:48 PM PST

மராட்டியம் வறட்சியில் தத்தளிக்கும் மாநிலமாக மாறி இருக்கிறது. குறிப்பாக மரத்வாடா, விதர்பா மண்டலங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டில் (2015) மட்டும் 3 ஆயிரத்து 228 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவலை அரசே வெளியிட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளில் மராட்டியத்தை வறட்சியற்ற மாநிலமாக மாற்ற 'ஜல்யுக்த் ஷிவார்' என்ற திட்டத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 2019-ம் ஆண்டுக்குள் மராட்டியத்தை

அருணாசல பிரதேசத்தில் புதிய அரசு அமைக்க தடை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

Posted: 18 Feb 2016 05:58 PM PST

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த அருணாசல பிரதேச மாநிலத்தில், முதல்-மந்திரி நபம் துகிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களில் 14 பேரை பதவி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக அவர்கள் கவுகாத்தி ஐகோர்ட்டில்

மேற்கு வங்க தேர்தலுக்காக காங்கிரஸ் உடன் புதிய ஒப்பந்தம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

Posted: 18 Feb 2016 04:08 PM PST

மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக முன் எப்போது இல்லாத புதிய ஒப்பந்தம் ஒன்றினை காங்கிரஸ் கட்சியுடன் அமைக்க போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களைப்போல மேற்கு

ஜே.என்.யு மாணவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: மார்க்சிஸ்ட் கேள்வி

Posted: 18 Feb 2016 04:01 PM PST

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9–ந் தேதி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட தீவிரவாதி அப்சல்குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மாணவர்களில் ஒரு பகுதியினர் கோஷமிட்டனர். இதனால்

பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவதற்கு அனுமதி கோரிய இருவர் மீது வழக்குப் பதிவு

Posted: 18 Feb 2016 03:16 PM PST

பிரதமர் நரேந்திர மோடிக்கு சட்டத் துறை சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் (பிஎச்யூ) முன்வந்துள்ளது. பிஎச்யூ நூற்றாண்டு பட்ட மளிப்பு விழா பிப்ரவரி 22-ம் தேதி

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஆன்லைனில் விற்க இணையதள வேளாண்மை சந்தை: மோடி அறிவிப்பு

Posted: 18 Feb 2016 02:58 PM PST

மத்தியபிரதேச மாநிலம் செகோர் மாவட்டம் ஷேர்பூர் கிராமத்தில் விவசாயிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் 'பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம்' என்ற புதிய திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அத்திட்டத்தின் செயலாக்க விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.

வாட்ஸ்அப் வீடியோ: நாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் - துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு

Posted: 18 Feb 2016 02:55 PM PST

ஒரு நாய்க்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ காட்சி, 'வாட்ஸ்அப்'பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 'ஹூயுமன் சொசைட்டி இன்டர்நேஷனல்' என்ற விலங்குகள் நல அமைப்பு கூறிய பிறகே இந்த அதிர்ச்சிகரமான செய்தி தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த இடம் எது என்று தெரியவில்லை. இருப்பினும், சம்பவத்தில்

இடஒதுக்கீடு விவகாரம்: சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஹர்திக் பட்டேல்

Posted: 18 Feb 2016 02:36 PM PST

படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் சிறைக்குள்ளேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். இடஒதுக்கீடு போராட்டத்தில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி, ஹர்திக் தங்கள் சமூக தொண்டர் ஒருவரிடம், "தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™