Tamil Star |
- Nova Scotia ஏரியில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட நபரைக் காணவில்லை
- நோர்த் யோர்க் பகுதியில் உள்ள வீட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
- Rexdale இல் வாகன விபத்து
- தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம்
- பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவதற்கான 10 காரணங்கள்!
- கனடா, அமெரிக்கா, மெக்சிகோவிடையே சக்தி மாற்றீடு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து
| Nova Scotia ஏரியில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட நபரைக் காணவில்லை Posted: 14 Feb 2016 12:21 PM PST
குறித்த நபர் ஏரி ஒன்றைக் கடக்க முற்பட்ட போது காணவில்லை என்றும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியவில் King County இல் உள்ள Black River ஏரிக்கு வருமாறு காவல்த்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பனிச்சறுக்கில் ஈடுபட்ட குழு ஒன்று ஏரியைக் கடந்தனர் என்றும், அவர்களில் மூன்று பேர் பனி படர்ந்த பகுதியூடாக பயணித்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த மூவரில் இருவர் தற்போது மீட்கப்பட்டள்ள நிலையில், 26 வயதான ஒருவரைக் காணவில்லை என்றும், இன்று ஞாயிற்றுக்கிழமை வரையில் அவரைத் தேடும் பணி தொடர்வதாகவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். The post Nova Scotia ஏரியில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட நபரைக் காணவில்லை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நோர்த் யோர்க் பகுதியில் உள்ள வீட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் Posted: 14 Feb 2016 10:43 AM PST
துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்ற அந்த வீடு ரொரன்ரோவின் Silver Hills குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், Woodsworth வீதி மற்றும் Hopperton Drive பகுதிக்கு அருகில் உள்ள குறித்த வீட்டில் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது என்றும், அதன் போது அதிகாலை 2.15 மணியவில் இந்த துப்பாக்கிச் சூட்டடுச் சம்பவம் இடம்பெற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் பின்புறத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், அவரின் காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு ஏற்பட்ட காயத்தினால் உயிராபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post நோர்த் யோர்க் பகுதியில் உள்ள வீட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 14 Feb 2016 09:35 AM PST
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், கார் மரம் ஒன்றுடன் மோதிக் கொண்டதாகவும், அதன் போது வாகனம் தீ பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் காரணமாக சாரதி மோசமான காயங்களுக்கு ஆளானதாகவும், அவரின் நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. The post Rexdale இல் வாகன விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம் Posted: 14 Feb 2016 12:40 AM PST
* பப்பாளியில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் குடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுகிறது, அத்துடன் குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கிறது. * அதுமட்டுமின்றி செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகிறது. * உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த பழமாகும், மேலும் ரத்த நாளங்களுக்கு சத்துக்களை வழங்குகிறது. * தினமும் குடித்து வருவதன் மூலம் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சுவாச பிரச்னைகளால் வராமல் பாதுகாக்கிறது. * மேலும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம். * இதிலுள்ள பாப்பைன் என்ற நொதியினால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பொலிவடைகிறது. The post தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவதற்கான 10 காரணங்கள்! Posted: 14 Feb 2016 12:37 AM PST
1. ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது. 2. பித்தப்பை கற்களை கரைத்து, கல்லீரலை தூண்டசெய்கிறது. 3. இந்த பழத்தில் உள்ள லைகோபீன் என்னும் நிறமி புற்றுநோய் செல்களை மற்றும் கட்டிகளை அழிக்கும் திறன் கொண்டது. 4. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது. 5. சாப்பாட்டிற்கு முன் இதனை உட்கொள்வதன் மூலம் இன்சுலினை நன்கு சுரக்க வைக்கமுடியும். 6. மூளை ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. 7. நார்ச்சத்து, லைகொபீன் நிறமி, வைட்டமின் சி, கோலைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதயத்தை பலமாக்குகிறது. 8. இதில் பொட்டாசியம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுப்பதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது. 9. தோலில் சுருக்கம், கருந்திட்டுகள் ஏற்படாது. இதில் உள்ள அமினோ அமிலம் தோலை இறுக்கமாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. முகத்தில் அதிகம் எண்ணெய் சுரப்பதை கட்டுபடுத்தி, பிசுபிசுப்பை நீக்குகிறது. 10. நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் செரிமான மண்டலத்தை தூண்டி மலச்சிக்கலை போக்குகிறது. The post பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவதற்கான 10 காரணங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா, அமெரிக்கா, மெக்சிகோவிடையே சக்தி மாற்றீடு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து Posted: 13 Feb 2016 04:59 PM PST
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் சக்திவள உற்பத்திகளை கட்டுப்படுத்துதல் மற்றும் காபன் வெளியேற்றத்தினை மட்டுப்படுத்தல் போன்ற விடயங்களில் கூட்டுறவினை வலுப்படுத்தும் விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பன்னாட்டுச் பொருளாதாரத்தில் மசகு எண்ணெயின் விலையில் நிலைத்தனைமை அற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமை பல்வேறு வளப்பெறுமதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் அதற்கு ஒரு தீர்வாக இந்த மாற்று சக்கதி வள அபிவிருத்தி ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியின் பாதிப்பு குறித்து கருத்து வெளியிட்ட கனேடிய இயற்கைவளத்துறை அமைச்சர், விலை வீழ்ச்சி தொழில்துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வேலை இழப்பினை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளுகின்றது என விபரித்துள்ளார். இந்த நிலையில் நாடுகளை பலப்படுத்தும் வகையிலும், சக்தி வளத்துறையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தாகியுள்ளதாக கனேடிய இயற்கைவளத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். The post கனடா, அமெரிக்கா, மெக்சிகோவிடையே சக்தி மாற்றீடு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Nova Scotia ஏரியில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடி வருவதாக Nova Scotia காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நோர்த் யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பதின்ம வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Rexdale இல் தனி ஒரு வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதியைத் தடுத்து வைத்துள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பப்பாளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
புளிப்பு, இனிப்பு சுவை கொண்ட பம்பளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய மூன்று நாட்டு சக்தி வளத்துறை அமைச்சர்களுக்கு இடையில் மாற்று சக்தி வள அபிவிருத்தி தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.