Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அசாம் மாநிலத்தில் ராகுல் இன்று பிரசாரம் தொடக்கம்

Posted: 14 Feb 2016 10:21 PM PST

அசாம் மாநில சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் தருண் கோகோய் தலைமையில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

மும்பையில் மோடி அளித்த விருந்தில் நடிகர் அமீர்கான் பங்கேற்பு

Posted: 14 Feb 2016 10:17 PM PST

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கடந்த ஆண்டு இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாகவும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை மத்திய அரசு குறைத்தது.

60 ஆண்டு ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஐ.என்.எஸ். வீராட் போர் கப்பல் 5 நட்சத்திர ஓட்டலாக மாறுகிறது

Posted: 14 Feb 2016 10:16 PM PST

இந்திய கப்பல் படையில் புராதனமான இடத்தை பிடித்த 'ஐ.என்.எஸ். வீராட்' போர்க்கப்பல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டது. ராணுவத்தில் 60 ஆண்டு காலம் இக்கப்பல் பணியாற்றி உள்ளது. 30 ஆண்டு காலம் இங்கிலாந்து படையில் இருந்த இந்த கப்பல் 1987–ம் ஆண்டு இந்திய

உத்தரபிரதேசத்தில் ராமர் கோவிலுக்குள் கொள்ளையனுக்கு சிலை: 10 நாள் விழா நடத்தி கொண்டாட்டம்

Posted: 14 Feb 2016 10:09 PM PST

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபூர் கப்ரடா என்னும் கிராமத்தை சேர்ந்தவன் சிவக்குமார் படேல். இவன் உத்தரபிரதேசத்தில் உள்ள பந்தல்கண்ட் பகுதியில் மிகப்பெரிய கொள்ளையனாகத் திகழ்ந்தான். சுமார் 30 ஆண்டுகள் அவன் அந்த பகுதியில் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வந்தான்.

கொல்கத்தா பள்ளி வாசலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

Posted: 14 Feb 2016 10:02 PM PST

மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தா நகரில் மிகவும் பிரசித்திபெற்ற லோரென்ட்டோ என்ட்டாலி என்ற தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இன்று காலை பள்ளிக்கு மாணவ-மாணவியர் நுழைந்து

7 பேரை விடுதலை செய்ய கோரி டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

Posted: 14 Feb 2016 09:49 PM PST

பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு நினைவு தினத்தை டெல்லி பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினர் கடைபிடித்தனர். அப்போது இந்தியாவை எதிர்த்தும், பாகிஸ்தானை ஆதரித்தும் மாணவர்கள் கோஷமிட்டனர். இது குறித்து அகில பாரதீய வித்தியார்த்தி அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்கய்யா குமார் உள்பட

கங்கோத்ரியில் கடும் பனிப்பொழிவு

Posted: 14 Feb 2016 09:40 PM PST

உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரியில் நேற்றும் இன்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை ஏற்பட்ட பனிப்பொழிவால் கங்கோத்ரியில் உள்ள சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்தன.

பணிச்சுமை, குடும்பப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ரெயிலின் குறுக்கே பாய்ந்து தற்கொலை

Posted: 14 Feb 2016 09:35 PM PST

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமாடா கோடீஸ்வர ராவ்(39), ராணுவ வீரரான இவர், ஜம்மு-காஷ்மீர் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக சமீபத்தில் சொந்த ஊருக்குவந்த இவர், விடுமுறை

திருப்பதி பிரமோற்சவ விழாவை வீடியோ எடுத்த 3 பேர் கைது

Posted: 14 Feb 2016 09:32 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. மினி பிரமோற்சவம் என்று அழைக்கப்படும் இந்த விழாவில் ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சாமி மாடவீதியில் உலா வருவது சிறப்பு அம்சமாகும். நேற்று நடந்த வாகன சேவையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

நெல்லூரில் 8–வது முறையாக நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி

Posted: 14 Feb 2016 09:31 PM PST

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள அஞ்சமுக மண்டலத்தில் உள்ள சாகல கொண்டா, பந்தன பாரி வல்லி ஆகிய கிராமங்களில் அதிகாலை 5 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. 3 விநாடியே இது உணரப்பட்டது.

மார்க்சிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்

Posted: 14 Feb 2016 09:31 PM PST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. அந்த அலுவலகத்துக்கு நேற்றிரவு ஒரு மர்ம மனிதன் போனில் பேசினான். கட்சி பொதுச்செயலாளர் சீத்தராம்யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுத்து அவன் பேசி விட்டு போனை வைத்து விட்டான். இது பற்றி போலீசில் புகார்

போலீசார் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: காஷ்மீரில் கடையடைப்பு - ரெயில்கள் ரத்து

Posted: 14 Feb 2016 09:27 PM PST

காஷ்மீர் மாநிலம் வடக்கு பகுதியில் உள்ள குப்வாரா மாவட்ட எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திராவில் வெங்காயம் விலை 5 ரூபாய்க்கு சரிவு: விவசாயிகள் கண்ணீர்

Posted: 14 Feb 2016 09:16 PM PST

கடந்த 6 மாதத்துக்கு முன்பு வெங்காயம் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரைக்கு விற்பனையானது. சில மாநிலங்களில் கிலோ 100 ரூபாயை எட்டியது. இந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக பரப்பில் விவசாயிகள்

குஜராத்தில் ஷாருக் கான் காரின்மீது விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கல்வீசி தாக்குதல்

Posted: 14 Feb 2016 08:55 PM PST

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் 'ரயீஸ்' படத்தின் படப்பிடிப்புக்காக குஜராத் மாநிலத்துக்கு வந்துள்ளார். இங்குள்ள புஜ் நகரில் இந்த படத்துக்கான படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என இங்குள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கடந்தவாரம் மாவட்ட கலெக்டர்

திருவனந்தபுரம் அருகே 8–ம் வகுப்பு மாணவியை கற்பழித்த தொழிலாளி கைது

Posted: 14 Feb 2016 08:41 PM PST

திருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சசி. (வயது 65). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான சசிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று சசி வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடி போதையில் படுத்திருந்தார்.

வாக்குரிமை மீதான மக்களின் நம்பிக்கை குறைகிறதா?: மேயர் தேர்தலில் வெறும் 18.54 சதவீதம் வாக்குப்பதிவு

Posted: 14 Feb 2016 08:29 PM PST

அரசியல்வாதிகளின் மீதும் அரசியலமைப்பின் மீதும் மக்களுக்கான நம்பிக்கை வெகுவாக குறைந்து வருவதை மெய்ப்பிக்கும் வகையில் சமீபகாலமாக நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

தேசத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தும்: வெங்கையா நாயுடு பேட்டி

Posted: 14 Feb 2016 07:47 PM PST

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் தற்போது

மும்பை தாக்குதல் சம்பவம்: இந்திய அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஹெட்லி மனைவி மறுப்பு

Posted: 14 Feb 2016 07:33 PM PST

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தானின் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டு

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் முடங்கின: அருண்ஜெட்லி குற்றச்சாட்டு

Posted: 14 Feb 2016 07:06 PM PST

மும்பையில் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கும் விதமாக 'மேக் இன் இந்தியா' வார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.

திருப்பதி கோவிலில் ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் எழுந்தருளி மலையப்பசாமி வீதிஉலா

Posted: 14 Feb 2016 06:33 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான ரத சப்தமி விழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கி இரவு வரை நடந்தது. ஒரேநாளில் 7 வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முதன் முதலில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணிவரை தங்க சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் தங்க, வைர நகைகளுடன் சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி வாகனத்துடன் கிழக்கு மாடவீதியில் நிறுத்தப்பட்டார். சூரிய உதயமான காலை 6.41 மணிக்கு சூரியகதிர்கள் உற்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™