Tamil Star |
- நோர்த் யோர்க்கில் வாகனம் மோதி பெண் பலி
- இலண்டன் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு
- 13 வயது சிறுமியை காணவில்லை
| நோர்த் யோர்க்கில் வாகனம் மோதி பெண் பலி Posted: 13 Feb 2016 11:22 AM PST
விபத்தில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Jane வீதியின் கிழக்காக ஃபின்ஞ் அவனியூ மற்றும் Tobermory Driveவிற்கு அருகில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து காவல்த்துறையினரின் விசாரணைகளுக்காக Sentinel வீதியில் இருந்து Tobermory Drive வரையான ஃபின்ஞ் அவனியூவின் பாதை போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தது. The post நோர்த் யோர்க்கில் வாகனம் மோதி பெண் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலண்டன் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு Posted: 13 Feb 2016 11:08 AM PST
எனினும் இவ்விரு சடலங்களும் நேற்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலண்டனின் Grand Avenue பகுதியி்ல் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களின் நலன்கள் குறித்து அறியும் பொருட்டு அங்கு சென்றிருந்த போதே, மாலை 5.30 மணியளவில் பெண்ணின் சடலத்தைக் கண்டு மீட்டுள்ளதாக இலண்டன் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் மீட்கப்பட்டு சுமார் 3 மணியத்தியாளங்களின் பின்னராக, High Streetஇல் அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்த இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. சடலங்கள் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர்கள் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் காவல்த்துறையினரால் உடனடியாக வெளியிடப்படவில்லை. இருவரின் உயிரிழப்பு தொடர்பில் காவல்த்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post இலண்டன் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 13 Feb 2016 10:59 AM PST
குறித்த சிறுமி கடைசியாக வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ரனில் காணப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் காவல்த்துறையினர் விடுத்துள்ள தகவலில் காணாமல் பேன சிறுமி 13 வயது Oliviah Lowe என அடையாளப்படுத்தியுள்ளனர். அத்துடன் வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் North Park Drive மற்றும் Nasmith வீதிப் பகுதியில் குறித்த சிறுமி கடைசியாக காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். அந்த சிறுமி ஐந்து அடி நான்கு அங்குல உயரமான கறுப்பு நிறமான, மெல்லிய உடல்வாக்கையும், கபில நிறக் கண்களையும் கொண்டவர் எனவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். குறித்த சிறுமி தொடர்பில் யாரேனும் தகவல் அறிந்தால் (905) 453–2121, ext. 2133 என்ற இலக்கத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். The post 13 வயது சிறுமியை காணவில்லை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்று சனிக்கிழமை நோர்த் யோர்க் பகுதியில் வகனம் ஒன்று மோதித் தள்ளியதில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலண்டன் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் காவல்த்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.