Tamil Star |
- லிபியா, யோர்தானுக்கு கனடாவின் மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன – கனேடிய வெளிவிவகார அமைச்சர்
- Vaughan பகுதியில் தீ சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
- சர்வதேச போதைப் பொருள் விசாரணை – கனடிய எல்லைப் பாதுகாப்பு பணியாளர் இருவர் மீது குற்றச்சாட்டு
| லிபியா, யோர்தானுக்கு கனடாவின் மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன – கனேடிய வெளிவிவகார அமைச்சர் Posted: 10 Feb 2016 08:39 PM PST
அதனாலேயே கனடா அந்த நாடுகளுக்கான இராணுவ மற்றம் இராசதந்திர பிரசன்னத்தை அதிகரிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பிராந்தியங்களில் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுககப்பட்டு வரும் கூட்டுப் படை நடவடிக்கையில் கனடாவின் ஒரு பங்களிப்பாக இதனை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சில் ஆரம்பமாகவுள்ள நேட்டோ நாடுகளின் இரண்டு நாள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் கலந்துகொள்ளும் நிலையில், கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த விவகாரங்கள் தொடர்பில் ஏனைய நோட்டோ தலைவர்களுடன் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர், ஆலோசனை நடாத்தும் முதலாவது கூட்டமாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. The post லிபியா, யோர்தானுக்கு கனடாவின் மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன – கனேடிய வெளிவிவகார அமைச்சர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Vaughan பகுதியில் தீ சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு Posted: 10 Feb 2016 01:44 PM PST
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Weston மற்றும் Langstaff வீதிகளின் சந்திப்புக்கு அருகில் Dante Courtஇல் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த தீ சம்பவம் இடம்பெற்றிருந்ததாகவும், காலை 11.08 மணியளவில் சம்பவ இடத்திற்கு அவசர மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. மதியம் வரையில் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்த அதேவேளை மேலதிக சேதங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. தீ ஏற்பட்மைக்காண காரணமும் இன்னமும் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன. The post Vaughan பகுதியில் தீ சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேச போதைப் பொருள் விசாரணை – கனடிய எல்லைப் பாதுகாப்பு பணியாளர் இருவர் மீது குற்றச்சாட்டு Posted: 10 Feb 2016 12:39 PM PST
கொலம்பியா மற்றும் மெக்சிகன் போதைப் பொருள் கும்பலுடனான தொடர்பு குறித்த விசாரணைகளை தொடர்ந்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த இருவரும் தமது பதவிகளை பயன்படுத்தி குற்ற செயல் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு தகவல்களை வழங்கியதாக மத்திய காவல்த்தறையினர் அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் மத்திய காவல்த்துறையினர் கடந்த 2013ஆம் ஆண்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், ஆன்ரிக்குவா, பிரேசில், கொலம்பியா, கயானா மற்றும் அமெரிக்காவில் இருந்து கொக்கேன் வகை போதைப் பெருளை இறக்குமதி செய்தமைக்கான ஆதாரங்களை பெற்றுள்ளனர். பின்னர் 2015 ஆம் அண்டு இது தொடாபில் 15 போ மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தனது. இந்த நிலையிலேயே நேற்று செவ்வாய்கிழமை நோவா ஸ்கொற்றியாவைச் சேர்ந்த குறித்த இருவர் மீதும் மேலதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் நோவா ஸ்கொட்ரியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post சர்வதேச போதைப் பொருள் விசாரணை – கனடிய எல்லைப் பாதுகாப்பு பணியாளர் இருவர் மீது குற்றச்சாட்டு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சிரியாவில் உள்நாட்டுப் போரின் அழுத்தங்கள் காரணமாக மோசமான நிலையில் உள்ள லிபியா மற்றும் யோர்தான் ஆகிய நாடுகளுக்கு கனடாவின் உதவி மேலும் தேவைப்படுவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் தெரிவித்துள்ளார்.
Vaughan இல் இன்று புதன்கிழமை காலையில் இடம்பெற்ற தீ சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Halifaxஇல் கனேடிய எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் தேசிய பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த முன்னாள் பணியாளர்கள் இருவர் போதைப் பொருள் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.