Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதம் இனி காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்: மத்திய அரசு தகவல்

Posted: 10 Feb 2016 10:59 PM PST

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் இனி காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு ஒருமறை மாற்றி அமைக்கப்பட்டு வந்ததாகவும், இனி

தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி கூண்டோடு காலியாகிறது

Posted: 10 Feb 2016 10:51 PM PST

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உதயமான பின்பு அங்கு 2014–ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி (டி.ஆர்.எஸ்) கட்சி ஆட்சியை பிடித்து சந்திரசேகரராவ் முதல்– மந்திரியாக பதவி ஏற்றார். தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 6

எனது அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. மிரட்டல்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 10 Feb 2016 10:41 PM PST

டெல்லியில் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 77 அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். டெல்லி முதல் – மந்திரி கெஜ்ரிவால் அளித்த பேட்டி வருமாறு:– பா.ஜனதா அரசு எனக்கு எதிராக சி.பி.ஐ.யை தூண்டிவிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15–ந் தேதி எனது

திருமலையில் வருகிற 14–ந் தேதி ரதசப்தமி விழாவில் 7 வாகனங்களில் சாமி வலம்

Posted: 10 Feb 2016 10:40 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 14–ந்தேதி ரத சப்தமி நடைபெற உள்ளது. அதையொட்டி திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமையில் விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்ன

திருப்பதி பகுதியில் கடந்த 1½ மாதத்தில் 7500 கிலோ செம்மரம் பறிமுதல்: 107 பேர் கைது

Posted: 10 Feb 2016 10:05 PM PST

திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கோபிநாத்ஜாட்டி நிருபர்களிடம் கூறியதாவது:– திருப்பதி புறநகர் காவல் மாவட்டம் பரிதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் அதிக அளவில் செம்மரக் கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. திருப்பதியில் இருந்து தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும்

பிற்பட்டோர் சமூகம் குறித்து இழிவாக பேச்சு: சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக தலித் அமைப்புகள் போராட்டம்

Posted: 10 Feb 2016 09:30 PM PST

ஆந்திராவில் காபு சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி அந்த சமூக தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மந்திரியுமான முத்ரகடா பத்மநாபம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடத்தினார்.

வீடு இல்லாதவர்களுக்கு ரூ.5 லட்சத்தில் வீடு வழங்கும் திட்டம்: மத்திய மந்திரி கட்காரி அறிவிப்பு

Posted: 10 Feb 2016 09:09 PM PST

நவீன நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் தொடர்பாக டெல்லியில் மாநாடு நடந்தது. இதில் மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:– பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் நவீன நகரங்கள் அமைப்பதற்கு மட்டுமின்றி ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்கவும் உறுதி பூண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சோதனை முயற்சியாக

கேரள தலைமை செயலகத்தில் உம்மன்சாண்டியுடன் சரிதாநாயர் இருப்பது போன்ற பேனர்களால் ஊழியர்கள் இடையே மோதல்

Posted: 10 Feb 2016 08:13 PM PST

கேரளாவில் சோலார் பேனல் மோசடி தொடர்பாக நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. மோசடி விவகாரத்தில் கைதான பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தபோது முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கு ரூ.1 கோடியே 90 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அவரது மந்திரிசபையில்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும்: சசிதரூர் பேட்டி

Posted: 10 Feb 2016 08:06 PM PST

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக் கோரியும், இளம் வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக கேரள அரசு சார்பில் கோர்ட்டில்

தொழில் நுட்ப கோளாறால் வீடியோ கான்பரன்ஸ் ரத்து: தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் இன்று மீண்டும் விசாரணை

Posted: 10 Feb 2016 07:31 PM PST

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைதாகி 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி அப்ரூவர் ஆகி வாக்குமூலம் அளிக்க முன்வந்தார்.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 13-ந் தேதி திறப்பு

Posted: 10 Feb 2016 06:29 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 2016-ம் ஆண்டின் மகர விளக்கு பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்தநிலையில் மாசி மாத பூஜைக்காக

கர்நாடகத்தில் வரி வசூல் திருப்திகரமாக உள்ளது: சித்தராமையா பேட்டி

Posted: 10 Feb 2016 05:43 PM PST

முதல்-மந்திரி சித்தராமையா ராய்ச்சூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். ராய்ச்சூர் செல்லும் வழியில் பல்லாரியில் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பட்ஜெட்டை தயாரிப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகளை நான் இன்னும் தொடங்கவில்லை. சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் முடிந்த பிறகு இந்த பணிகள் தொடங்கப்படும். நிதி ஆதாரங்களின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்கப்படும். கர்நாடகத்தில் பல்வேறு ஆதாரங்கள் மூலம் பெறப்படும் வரி வசூல் திருப்திகரமாக உள்ளது.

மோடி அரசு ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் எதிரானது: ராகுல் காந்தி

Posted: 10 Feb 2016 04:24 PM PST

மோடி அரசு ஏழைகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்துக்கு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பேசிய ராகுல் காந்தி " பிரதமர் மோடியை விவசாயிகளுடனோ, தொழிலாளர்களுடனோ இருப்பதை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.

பிரதமர் மோடியின் பாஸ்போர்ட் விவரங்களை கேட்கும் மனைவி - தகவல் அறியும் சட்டத்தில் மனு செய்தார்

Posted: 10 Feb 2016 04:14 PM PST

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் கடந்த நவம்பர் மாதம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால் அவர் தனது திருமண சான்றிதழையோ, மோடியை திருமணம் செய்ததற்கான இருவரும் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தையோ தாக்கல் செய்யவில்லை.

காவிரி நீர் பிரச்சினை: தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

Posted: 10 Feb 2016 03:44 PM PST

காவிரி பிரச்சினை தொடர்பாக, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த இடைக்கால மனுவில் 'காவிரி நடுவர் மன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் தமிழகத்துக்கு சேரவேண்டிய 45.327 டி.எம்.சி. தண்ணீரையும், நடுவர் மன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு சேர்ந்திருக்க வேண்டிய உரிய அளவு

ரெயில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே அமைச்சகம் முடிவு? ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

Posted: 10 Feb 2016 03:35 PM PST

மத்திய ரெயில்வே பட்ஜெட் 25-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளில் ரெயில்வே அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மோடி செயல்படுபவர், ராகுல் புகைப்பட பிரியர்: பா.ஜனதா கடும் தாக்கு

Posted: 10 Feb 2016 02:27 PM PST

கேரளாவில் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 'நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் எதிரானது' என்று குற்றம் சாட்டினார்.

அரசு நெறிமுறைகளை மீறி அபுதாபி இளவரசர் ஷேக் முகமதுவை விமான நிலையத்தில் நேரடியாக வரவேற்ற பிரதமர் மோடி

Posted: 10 Feb 2016 01:52 PM PST

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் (54), மூன்று நாள் பயணமாக நேற்று (புதன்கிழமை) இந்தியா வந்தார். தலைநகர் புதுடெல்லிக்கு விமானம் மூலம் மாலை 6 மணியளவில்

உயிர் காக்கும் 76 வகை மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு ரத்து: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 10 Feb 2016 01:21 PM PST

உயிர் காக்கும் 76 வகை மருந்துகளின் இறக்குமதிக்கான சுங்க வரி விலக்கை மத்திய சுகாதார அமைச்சகம் திடீரென ரத்து செய்துள்ளது. இந்த மருந்துகள், புற்றுநோய், எய்ட்ஸ், ரத்தம் உறையாமல் கசியும் நோய், சிறுநீரக கல், இதய கோளாறு, நீரிழிவு, எலும்பு நோய், பாக்டீரியா தொற்று, மயக்கவியல் மருத்துவம், அலர்ஜி, மூட்டுவலி, மாதவிடாய் கோளாறு,

வெளிநாட்டு பணம் கொண்டு வரும் பயணிகள் மீது கண்காணிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 10 Feb 2016 12:28 PM PST

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், வெளிநாட்டு பணம் 5 ஆயிரம் டாலருக்கு மேல் கொண்டு வந்தாலோ, இந்திய பணம் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்தாலோ, பண பிரகடன படிவத்தில் அந்த விவரத்தை தெரியப்படுத்த வேண்டும். மேலும், அவர்களது பணத்தின் அன்னிய செலாவணி மதிப்பு, 10 ஆயிரம் டாலருக்கு மேல் இருந்தால்,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™