Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வாகன விபத்து – இருவர் படுகாயம் –

Posted: 01 Feb 2016 09:37 AM PST

crash_at_Kennedy_Road__-_01022016

crash_at_Kennedy_Road__-_01022016ரொரன்ரோவின் ஃபின்ச் அவனியூ மற்றும் கெனடி வீதிப் பகுதியில் இன்று அதிகாலை 3.20 அளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவரது நிலை உயிராபத்தாக காணப்படுவதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஆசனப் பட்டியை அணிந்திருக்காது விட்டிருக்கலாம் என ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் ஊகம் வெளியிட்டுள்ளனர்.crash_at_Kennedy_Road__-_01022016

இந்த விபத்தினை அடுத்து பெல்ரூக் வீதிக்கும் நோர்க்கப் அவனியூவுக்கும் இடையேயான கெனடி வீதியில் பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.

The post வாகன விபத்து – இருவர் படுகாயம் – appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவின் வட பிராந்தியங்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை

Posted: 01 Feb 2016 09:03 AM PST

snow_-_12282015

snow_-_12282015ஒன்ராறியோவின் வட பிராந்தியங்கள் கடுமையான பனிப்புயலின் தாக்கத்தை எதிர்வரும் சில தினங்களுக்கு எதிர்கொள்ளக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு எச்சரிக்கையை கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் நேற்று இரவு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில் இன்று தீவிர பனி நிலைமை ஏற்படும் என்றும், அந்த பனிப்புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து நாளை ஒன்ராறியோவின் வட பிராந்தியங்களைத் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.snow_-_12282015

இதன் விளைவாக நாளை செவ்வாய்க்கிழமை இரவிலும், மறுநாள் புதன்கிழமையிலும் ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் மோசமான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமையின் முடிவில் சுமார் 10 சென்ரிமீற்றரில் இருந்த 15 சென்ரிமீற்றர் வரையிலான பனிப்பொழிவு ஏற்படும் என்றும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை திடீர் வானிலை மாற்றத்தினால் இந்த அளவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை கியூபெக்குடனான எல்லைப் பகுதியில் உறை மழைக்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும், அங்கு பனிப்பொழிவுடன் பனிக் கட்டிகளும் விழக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்ராறியோவின் வட பிராந்தியங்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சவுதிக்கு இராணுவத் தளபாடங்கள் வினியோகிப்பது தொடர்பில் அதிருப்தி

Posted: 01 Feb 2016 08:40 AM PST

கனடா தொடர்ந்தும் இராணுவத் தளபாடங்களை சவூதி அரேபியாவுக்கு வினியோகித்து வருகின்றமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. போர்களுக்கு எதிரான மனித உரிமை ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான கென் ஸ்டோன் இந்த அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஸ்டீபன் ஹார்ப்பர் அரசாங்கத்தின் காலத்தில் சவூதிக்கான இராணுவத் தளபாட வினியோகங்கள் இடம்பெற்று வந்துள்ள அதே நிலையில், தற்போதய புதிய லிபரல் அரசாங்கத்திலும் சவூதி அரேபியாவுக்கு 15 பில்லியன் டொலர் பெறுமதியான படை உபகரணங்கள் வினியோகம் செய்யபபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி, அது தொடர்பில் தமது கவலை வெளியிட்டுள்ளார். […]

The post சவுதிக்கு இராணுவத் தளபாடங்கள் வினியோகிப்பது தொடர்பில் அதிருப்தி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™